வெள்ளைப்போளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளைப்போள பிசின் பெறப்படும் முள் மரம்.
ஆப்பிரிக்காவின் ஒரு சில பகுதியில் காணப்படும் இம்மரத்தின் பிசின்.
இந்த மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தைலம்.)

வெள்ளைப்போளம் (MYRRH) இது பூக்கும் வகையைச் சார்ந்த முட்களுடைய மரம் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் பிசின் ஒரு இயற்கை பசையாகப் பயன்படுகிறது. மேலும் இதன் பிசின் கொண்டு போதை பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. பழைய வேதாகம காலத்தில் இதன் பிசின் கொண்டு நறுமண திரவியங்களைத் தயாரித்து அரசர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்.

மேலும் புதிய ஏற்பாட்டின் கருத்துப்படி மூன்று ஞானிகள் குழந்தை இயேசுவிற்களித்த பரிசுப்பொருட்களில் வெள்ளைப்போளமும் ஒன்றாகும். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் அவருக்கு இந்த மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பானம் வழங்கப்பட்டது.[1][2] புதிய ஏற்பாட்டின்படி இயேசு இறந்தபோது அடக்கம் செய்யும்போது யோசேப்பிற்கு நிக்கதேம் உதவி செய்தார். அப்போது இந்த மரத்தினால் தயாரிக்கப்பட்ட நறுமணப்பொருளோடு இயேசுவின் உடல் அடக்கம்கூ செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Myrrh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைப்போளம்&oldid=3739619" இலிருந்து மீள்விக்கப்பட்டது