வெண் சிறகு மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண் சிறகு மரங்கொத்தி (White-winged woodpecker) என்பது மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இருசொற் பெயரீட்டு முறையில் இப்பறவையின் அறிவியல் பெயர் டென்ட்ரோகுபோசு லியுகோபடரசு என்பதாகும்[1]. ஆப்கானித்தான், சீனா, ஈரான்,[2] கசக்கசுத்தான், கிர்கிசுத்தான், தயிகிசுத்தான், துருக்மெனிசுதான், உசுபெக்கிசுத்தான், போன்ற நாடுகளில் இப்பறவை காணப்படுகிறது. மிதமான காடுகளும் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகளும் வெண் சிறகு மரங்கொத்தியின் இயற்கை வாழிடங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dendrocopos leucopterus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.irandeserts.com