வெண்முதுகுச் சில்லை
வெண்முதுகுச் சில்லை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Estrildidae |
பேரினம்: | Lonchura |
இனம்: | L. striata |
இருசொற் பெயரீடு | |
Lonchura striata (Linnaeus, 1766) | |
Core native range in green Northern populations (see text) not shown | |
வேறு பெயர்கள் | |
|
வெண்முதுகுச் சில்லை தென் இந்தியாவில் காணப்படும் கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவைகள் (Passeriformes) குடும்பத்தை சார்ந்தது ஆகும்,தென் இந்தியாவில் அவை நான்கு துணை குடும்பங்களாக காணப்படுகிறது அவற்றில் இது sparrows (Passeridae) குடும்பத்தை சார்ந்தது ஆகும்.
பெயர்கள்[தொகு]
தமிழில் :வெண்முதுகுச் சில்லை
ஆங்கிலப்பெயர் :White - rumped Munia
அறிவியல் பெயர் : Lonchura striata [2]
உடலமைப்பு[தொகு]
10 செ.மீ. - பருத்த கூரிய நீல நிற அலகு கொண்டது. இதன் உடலின் மேற்பகுதி பழுப்பாக வெள்ளைப் பிட்டத்துடன் காணப்படும் தொண்டையும் மார்பும் கரும் பழுப்பாகவும் வயிறு வெண்மையாகவும் இருக்கும்.
காணப்படும் பகுதிகள்[தொகு]
தமிழ்நாடெங்கும் பரவலாக சமவெளிகளிலும் மலைகளிலும் 8 முதல் 15 வரையான குழுவாகப் காணப்படும்.
உணவு[தொகு]
பயிர்கள் விளைந்து நிற்கும். விளைநிலங்களில் தானியங்களைத் தின்று கேடு செய்யும் மண்பாதைகளிலும் அறுவடை முடிந்த வயல்களிலும் தாவித் திரிந்து இரைதேடும். மென் குரலில் கத்தும் இது இரவில் புள்ளிச் சில்லை. தூக்கணாங்குருவி ஆகியவற்றோடு கூட கரும்புக்காடு, லாண்டானா புதர் ஆகியவற்றில் அடையும்.
இனப்பெருக்கம்[தொகு]
ஜூலை முதல் டிசம்பர் வரை மூங்கில் இலை புல்லின் அகன்ற இலை ஆகியன கொண்டு பந்து வடிவிலான கூட்டினை அமைக்கும். கூட்டினுள் மெத்தென்று ஆக்க வைக்கப்பட்ட புல்லின் பூவோடுகூடிய இனுக்குகள் நுழைவாயிலுக்கு வெளியே குழல் அமைப்பில் நீட்டிக் கொண்டிருக்கும். சிறுமரங்களின் வெளிப்பட நீண்டிருக்கும் கிளைகளிடையே தரையிலிருந்து 4மீ. உயரத்துக்கு உள்ளாக இதன் கூடு அமைந்திருக்கும் 3 முதல் 8 வரை முட்டைகள் இடும்.
.
வெளி இணைப்புகள்[தொகு]
- Species factsheet - BirdLife International
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Lonchura striata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
- ↑ "White-rumped_munia வெண்முதுகுச் சில்லை". பார்த்த நாள் 4 அக்டோபர் 2017.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:152