உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்மார்புச் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்மார்புச் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. meridionale
இருசொற் பெயரீடு
Montecincla meridionale
(Blanford, 1880)

வெண்மார்புச் சிரிப்பான் என்பது சாம்பல் மார்பு சிரிப்பான் (Grey-breasted laughingthrush) என்றழைக்கப்படுகிறது. இப்போது இவை இரண்டு சிற்றினங்களாக பழனி சிரிப்பான் மற்றும் அசம்பு சிரிப்பான் பிரிக்கப்பட்டுள்ளன.

பெயர்கள்

[தொகு]

தமிழில்  :வெண்மார்புச் சிரிப்பான்

ஆங்கிலப்பெயர்  :Grey-breasted Laughingthrush

அறிவியல் பெயர் :Montecincla meridionale [2]

உடலமைப்பு

[தொகு]
வெண்மார்புச் சிப்பான்

20 செ.மீ. - சிலேட் பழுப்பு நிறத்தலையும் ஆலிவ் பழுப்பு நிற உடலும் கொண்டது. தொண்டை, கன்னம், மார்பு ஆகியன சாம்பல் நிறம், வயிறு வெளிர் சிவப்பு.

காணப்படும் பகுதிகள்

[தொகு]

நீலகிரி, கொடைக்கானல், ஆனைமலை சார்ந்த மலைப் பகுதிகளில் பசுமைமாறாக் காடுகளையும் மலைவாசிகள் குடியிருப்புகளையும் அடுத்துக் காணலாம். 6 முதல் 12 வரையான குழுவாகப் காணப்படும்.

உணவு

[தொகு]

6 முதல் 12 வரையான குழுவாகப் புதர்களிடையே தாவித் திரிந்து புழபூச்சிகள், சிறுகனிகள் முதலியனவற்றை இரையாகத் தேடித் தின்னும்.

இனப்பெருக்கம்

[தொகு]

அச்சம் ஏற்பட்டால் பதுங்கி ஒளிந்து கொள்ளும். உரக்கச் சீழ்க்கை ஒலி எழுப்பியும் குழு முழுதும் ஒன்றாகச் சிரிப்பது போல கலகலத்தும் மாங்குயில் போல இனிய குரலில் கூவியும் தனது இருப்பை அறிவிக்கும். ஓடிப் புதர்களிடையே மறையும் போது விட்-விட்-விட் என சிறு குரலெழுப்பும். டிசம்பர் முதல் ஜூன் வரை தனித்து நிற்கும் புதர்களிடையே வெளியே தெரியாதபடி மறைவாகப் கோப்பை வடிவிலான கூடமைத்து 2 முட்டைகள் இடும். [3] [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Trochalopteron meridionale". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2017.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2017. பார்க்கப்பட்ட நாள் 26 August 2017. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Grey-breasted_laughingthrushவெண்மார்புச் சிப்பான்". பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:126
  4. "Ashambu laughingthrush". பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2017.