வெண்ணிலா சர்க்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்ணிலா சர்க்கரை நிறைந்த சாடி

வெண்ணிலா சர்க்கரை (இடாய்ச்சு மொழி : Vanillezucker, போலிய மொழி : Cukier waniliowy, அங்கேரிய மொழி : Vaníliás cukor, டென்மார்க் மொழி : Vaniljsocker, மாசிடோனிய மொழி: Ванилин шеќер ) என்பது இத்தாலியன், டச்சு, ஜெர்மனி, போலந்து, சுவீடன், செர்மன், ஆசுதிரியா, அங்கேரி, செக், சிலோவாக்கியா, சுலோவீனியா, குரோவாசியா, போசுனியன், செர்பியன், துருக்கியம், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் இனிப்பு வகைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.

வெண்ணிலா சர்க்கரை ஆனது சர்க்கரை மற்றும் வெண்ணிலா பீன்சு அல்லது வெண்ணிலா சாறுடன் கலந்த சர்க்கரை (ஒரு மேசைக்கரண்டி சாறுக்கு இரண்டு கப் சர்க்கரை விகிதத்தில்) தயாரிக்கப்படுகிறது. [1]

முன் தொகுக்கப்பட்ட வெண்ணிலா சர்க்கரை விலை உயர்ந்தது மற்றும் ஐரோப்பா கண்டத்தை விட்டு வெளியே பெறுவது கடினம். ஆனால் வீட்டிலேயே தயாரிக்கலாம். சில நேரங்களில் அதை வெண்ணிலா சாற்றுடன் மாற்றலாம். இங்கு ஒரு தேக்கரண்டி ஒரு தொகுப்புக்கு சமம். இருப்பினும், இது ஒரு டாப்பிங்காக தேவைப்படும்போது, வெண்ணிலா சாறு பொருத்தமற்றது.

400 கிராம் (2 கப்) வெள்ளை சர்க்கரையை ஒரு வெண்ணிலா பீனின் துருவிய விதைகளுடன் சேர்த்து வெண்ணிலா சர்க்கரையை தயாரிக்கலாம். 200 முதல் 400 கிராம் (1 முதல் 2 கப் வரை) வெள்ளைச் சர்க்கரையுடன் காற்றுப் புகாத சாடியில் 1 முதல் 2 முழு வெண்ணிலா பீன்சு சேர்த்தும், கலவையை இரண்டு வாரங்களுக்கு பதப்படுத்துவதன் மூலமும் இதைச் செய்யலாம். பயன்படுத்தப்படும் சர்க்கரையை மாற்றலாம். [2]

மலிவான வெண்ணிலா சர்க்கரையும் கிடைக்கிறது. இது சர்க்கரை மற்றும் வெண்ணிலின் மூலம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vanilla Flavored Sugar". McCormick (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.
  2. Drake, Angela. "The simplest recipe ever for vanilla sugar", Not Your Average American, 18 May 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணிலா_சர்க்கரை&oldid=3765459" இலிருந்து மீள்விக்கப்பட்டது