உள்ளடக்கத்துக்குச் செல்

வெட்டூரி பிரபாகர சாத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெட்டூரி பிரபாகர சாத்திரி
பிறப்பு7 பெப்ரவரி 1888
பெடகல்லேபள்ளி, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு29 ஆகஸ்ட் 1950
தொழில்தெலுங்கு அறிஞர் மற்றும் தொகுப்பாளர்
குடும்பத்தினர்வெட்டூரி (உறவினர்)

வெட்டூரி பிரபாகர சாஸ்திரி (Veturi Prabhakara Sastri) (7 பிப்ரவரி 1888 - 29 ஆகஸ்ட் 1950) ஓர் சமசுகிருதம் மற்றும் தெலுங்கு அறிஞரும், ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் மற்றும் வரலாற்றாசிரியரும் ஆவார். ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பெடகல்லேபள்ளி என்ற ஊரில் பிறந்தார். இவர் தேவஸ்தான கிழகத்திய நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அன்னமாச்சாரியாரின் பாடல்களைப் படித்து புரிந்துகொண்டார்.[1] தெலுங்கு கவிஞர் சிறீநாதரின் படைப்புகளில் இவர் பெற்ற புலமைக்காகவும் அங்கீகரிக்கப்பட்டவர்.[2] இழந்த நூல்கள் மற்றும் மறக்கப்பட்ட இலக்கியங்களை ஆராய்வதில் இவர் ஈடுபட்டார். மேலும் இவர் இலக்கியம் அல்லது மத பாரபட்சங்கள் இல்லாத அறிவொளி மற்றும் தாராளவாத புலமைக்காகக் அறியப்படுகிறார்.[3]

பணிகள்

[தொகு]

ஒரு பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என்ற முறையில், பிராச்ய லிகித புஸ்தக பண்டாகாரத்திலிருந்து (பண்டைய எழுத்துக்களின் நூலகம்) மணவல்லி ராமகிருஷ்ண கவியுடன் இணைந்து பல பழமையான நூல்களை தெலுங்கு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அன்னமாச்சாரியாரின் கவிதைகளின் செப்பு எழுத்துக்களைக் கண்டுபிடித்து தெலுங்கு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.[4] இதேபோல், ரங்கநாதரின் ராகதாலுவின் பனை எழுத்துக்களையும் கண்டுபிடித்தார். தஞ்சாவூரி ஆந்திர ராஜுல சரித்திரமு, ஸ்ரீநாத வைபவமு, சிருங்கார ஸ்ரீநாதமு, மனு சரித்திரமு, பசவ புராணமு போன்றவற்றை விரிவான அறிமுகங்களுடன் வெளியிட்டார். பாசாவின் பிரதிமா நாடகம், கர்ணாபாரம் மற்றும் மத்தியம வியாயோகம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார்.

வெட்டூரி பிரபாகர சாத்திரி, ஆயுர்வேத நூல்களின் ஆசிரியராகவும் இருந்தார். முக்த்யாலாவின் அப்போதைய ராஜாவான ஒரு புரவலருக்கான காருசார்யா என்ற ஆயுர்வேத நூலுக்கு இவர் ஒரு முன்னுரையைத் திருத்தி எழுதினார்.[5][6] கங்குலா பினயெல்லயா என்பவர் எழுதிய 'யெர்ரகத்தபாடு என்ற போர் பற்றிய கவிதைகளையும் இவர் திருத்தியுள்ளார்.[7] வெங்கடாசல விகார சதகம் போன்ற வெங்கடாசலபதியைப் போற்றும் வகையில் பல இந்து சமய சதகங்களையும், சுதவம்களையும் வெட்டூரி திருத்தியுள்ளார்.[8] வெட்டூரி பிரபாகர சாதிதிரி ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். போதாயனகவியின் 'பகவதஜ்ஜுகம்' என்ற பாரம்பரிய சமசுகிருத நையாண்டி நாடகத்தை தெலுங்கில் மொழிபெயர்த்த இவர், மத்தவிலாசம் என்ற சமசுகிருத அங்கத நாடகத்தை 'மத்தவிலாசமு' என்ற தெலுங்குப் படைப்பாக மொழிபெயர்த்தார்.[9]

வாங்மய பீடம்

[தொகு]

இவரது புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி படைப்புகளை வெளியிடும் பொருட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2007 இல் "சிறீமன் வெட்டூரி பிரபாகர சாத்திரி வாங்மய பீடம்" என்பதை நிறுவியது.[10] திருப்பதியில் உள்ள ஒரு வளாகத்தின் முன் இவரது முழு அளவிலான வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ramesan, N. (1981). The Tirumala Temple (in ஆங்கிலம்). Tirumala Tirupati Davasthanams. p. 279.
  2. Rao, Velcheru Narayana; Shulman, David (2012-03-21). Srinatha: The Poet who Made Gods and Kings (in ஆங்கிலம்). Oxford University Press. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-986304-4.
  3. Siva's Warriors: The Basava Purana of Palkuriki Somanatha (in ஆங்கிலம்). Princeton University Press. 2014-07-14. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-6090-6.
  4. "Tributes paid to Veturi Prabhakara Sastry". The Hindu. 30 August 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Tributes-paid-to-Veturi-Prabhakara-Sastry/article15291852.ece. பார்த்த நாள்: 6 June 2018. 
  5. REDDY, D. V. S. (1950). "A Note on "Carucarya" of Bhoja". Bulletin of the History of Medicine 24 (2): 187–189. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-5140. https://www.jstor.org/stable/44443510. 
  6. Krishnamurthi, Salva (1996). A History of Telugu Literature (in ஆங்கிலம்). Institute of Asian Studies. p. 168.
  7. Folk Culture: Folk culture & literature (in ஆங்கிலம்). Institute of Oriental and Orissan Studies. 1983. p. 220.
  8. Ramesan, N. (1981). The Tirumala Temple (in ஆங்கிலம்). Tirumala Tirupati Davasthanams. p. 209.
  9. Sinha, Biswajit (2000). Encyclopaedia of Indian Theatre: South Indian Theatre (in ஆங்கிலம்). Raj Publications. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86208-54-0.
  10. "Sriman Veturi Prabhakara Sastry Vangmaya Peetam". Archived from the original on 29 May 2010. பார்க்கப்பட்ட நாள் 29 March 2010.
  11. "Statue of litterateur Veturi Prabhakara Sastri unveiled". The Hindu. 8 February 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Statue-of-litterateur-Veturi-Prabhakara-Sastri-unveiled/article15160192.ece. பார்த்த நாள்: 6 June 2018.