வெடுகுரி வெங்கட சிவ ராமராஜு
வெடுகுரி வெங்கட சிவ ராமராஜு | |
---|---|
பிறப்பு | 1970 கலவபுடி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
கல்வி | இளங்கலை வணிகவியல் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆந்திரப் பலகலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி, தொழிலதிபர் |
செயற்பாட்டுக் காலம் | 2009 - 2019 |
பட்டம் | சட்டமன்ற உறுப்பினர் |
பதவிக்காலம் | 2009-2019 |
முன்னிருந்தவர் | பதாபதி சர்ராஜு |
பின்வந்தவர் | மந்தெனா ராமராஜு |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
வாழ்க்கைத் துணை | வி. வி. அருணா குமாரி |
பிள்ளைகள் | சுருதி கீர்த்தி, சிரவ்யா காயத்திரி , அபி ராம வாமா |
வலைத்தளம் | |
kalavapudisiva |
கலவபுடி சிவா என்றும் அழைக்கப்படும் வெடுகுரி வெங்கட சிவ ராம ராஜு ( Vetukuri Venkata Siva Rama Raju ) உண்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கலவபுடி என்ற சிறிய கிராமத்தில் 1970 மே 10 ஆம் தேதி வெடுகுரி வெங்கட சிவ ராம ராஜு பிறந்தார். 1984 இல் ஏலூருவில் உள்ள புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். உயர்கல்விக்காக பீமாவரம் சென்று கஸ்தூரிபாய் அரசுக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். 1989 ஆம் ஆண்டு பீமாவரம் தந்துலூரி நட்ராயனா ராஜு கல்லூரியில் இளம் வணிகவியல் பட்டம் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]2009 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 15,568 வாக்குகள் பெரும்பான்மையுடன் உண்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2014 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஆந்திரப் பிரதேச சட்டசபைக்கு அதே தொகுதியிலிருந்து 36,231 வாக்குகள் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 பொதுத் தேர்தலில் நரசாபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 3% வாக்குகள் வித்தியாசத்தில் கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜுவிடம் தோல்வியடைந்தார்.
தொழிலதிபர்
[தொகு]விண்வெளி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கான அசெம்பிளி மற்றும் சிஸ்டம்ஸ் ஒருங்கிணைப்பில் செயல்படும் விஇஎம் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் செயல் இயக்குநராக உள்ளார். [1] [2]
கௌரவங்கள்
[தொகு]வெடுகுரி வெங்கட சிவராம ராஜுவுக்கு பாரதிய சத்ர சம்சத் அறக்கட்டளை, புனேவின், ஆதர்ஷ் யுவ விதாயக் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இவர், 70 கிராமங்களில் 78 சுத்தகரிக்கப்பட்ட நீர் ஆலைகளை நிறுவ ஏற்பாடு செய்திருந்தார். நீலு-செட்டு (தண்ணீர்- மரம்) திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 30,000 மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. 70,000 குடும்பங்களுக்கு 17 வகையான விதைகளுடன் கூடிய விதை பொட்டலங்களை விநியோகித்ததும் குறிப்பிடத்தக்க முயற்சியாகும். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Afadavit,Form 26" (PDF). Election Commission of India. 3 April 2009. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
- ↑ "VEM". VEM Technologies PVT. LTD. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
- ↑ "Undi MLA bags award". 10 January 2016. https://www.thehindu.com/news/cities/Vijayawada/CM-pats-Undi-MLA-for-bagging-award/article13991917.ece.