வெடிற்போத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெடிற்போத்து
புதைப்படிவ காலம்:மியோசீன்-தற்காலம் வரை
Hoatzin - Manu NP - Perù 9203 (15525812066).jpg
பெருவின் மனு தேசிய பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: ஒபிஸ்தோகோமிபார்மசு
இனம்: ஒ. ஹோசின்
இருசொற் பெயரீடு
ஒப ஹோசின்
(முல்லர், 1776)
Hoatzin (Opisthocomus hoazin) world.png
பரவல்
வேறு பெயர்கள்

பசியானஸ் ஹோசின் முல்லர், 1776

வெடிற்போத்து (ஆங்கிலப் பெயர்: Hoatzin, அறிவியல் பெயர்: Opisthocomus hoazin) என்பது அமேசான் படுகையின் சதுப்பு நிலங்கள், ஆற்றை ஒட்டிய காடுகள் மற்றும் அலையாத்தி காடுகள், மற்றும் தென்னமெரிக்காவின் ஒரினோகோ வடிநிலம் ஆகியவற்றில் காணப்படும் ஒரு வெப்பமண்டல பறவை ஆகும். இப்பறவையின் இளம் உயிரிகள் அவற்றின் இரண்டு இறக்கை விரல்களில் நகங்களை கொண்டிருக்கும்.

ஒபிஸ்தோகோமஸ் (Opisthocomus) பேரினத்தில் காணப்படும் ஒரே ஒரு உறுப்பினர் இந்த பறவை மட்டுமே ஆகும். ஒபிஸ்தோகோமஸ் என்ற பண்டைய கிரேக்கச் சொல்லுக்கு "பின் பகுதியில் நீண்ட முடி" என்று பொருள். இப்பறவையின் தலையின் பின்பகுதியில் காணப்படும் பெரிய முடியை குறிப்பிட இந்த வார்த்தை பயன்படுகிறது. ஒபிஸ்தோகோமிடாய் (Opisthocomidae) குடும்பத்தில் உயிர்வாழும் பேரினம் இது ஒன்று மட்டுமே ஆகும். இக்குடும்பத்தின் வகைப்பாட்டியலானது  விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. இதைப்பற்றிய தெளிவான வகைப்படுத்தல் இன்னும் செய்யப்படவில்லை.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிற்போத்து&oldid=2958217" இருந்து மீள்விக்கப்பட்டது