வீரேந்திர கத்தாரியா
Appearance
வீரேந்திர கத்தாரியா | |
---|---|
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் | |
பதவியில் சூலை, 2013 – சூலை, 2014 | |
முன்னையவர் | இக்பால் சிங் |
பின்னவர் | அஜய் குமார் சிங் |
உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 5 சூலை 1992 – 4 சூலை 1998 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 ஏப்ரல் 1931 |
இறப்பு | 5 மார்ச்சு 2019 | (அகவை 87)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வீரேந்திர கத்தாரியா (Virendra Kataria)(20 ஏப்ரல் 1931- 5 மார்ச் 2019) என்பவர் இந்தியாவின் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் ஆவார்.[1]
பணி
[தொகு]கத்தாரியா, 5 சூலை 1992 முதல் 4 சூலை 1998 வரை பஞ்சாபிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[2] இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் பஞ்சாப் மாநில பொதுச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் இருந்தார்.[1]
வாழ்க்கை
[தொகு]கத்தாரியா பஞ்சாப் மாநிலம் அபோஹரைச் சேர்ந்தவர். இவர் இந்திய அரசியலிலும் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். பஞ்சாபின் அபோஹரில் உள்ள டிஏவி கல்வியியல் கல்லூரியின் உள்ளூர் தலைவராகவும் இருந்தார். இவர் தனது 88வது வயதில் 4 மார்ச் 2019 அன்று புது தில்லி அனைத்திந்திய மருத்துவ நிறுவனத்தின் மருத்துவமனையில் காலமானார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Virendra Kataria Becomes New Lt Guv of Puducherry". news.outlookindia.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 3 July 2013.
Virendra Kataria was today appointed the new Lt Governor of Puducherry
[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Alphabetical List Of All Members Of Rajya Sabha Since 1952". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 3 July 2013.
2 Kataria Shri Virendra Punjab INC 05/07/1992 04/07/1998
- ↑ "Former PPCC chief Virendra Kataria dies at 88". The Tribune. 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
- ↑ Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003. Rajya Sabha Secretariat. 2003. p. 159. பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.