உள்ளடக்கத்துக்குச் செல்

வீரவநல்லூர் மேலமுத்தாரம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மேலமுத்தாரம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:தெற்கு ரதவீதி, வடக்கு வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:முத்தாரம்மன்
தாயார்:முப்பிடாதி மற்றும் சந்தனமாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:வருஷாபிஷேகம், விநாயகர் சதுர்த்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வீரவநல்லூர் மேலமுத்தாரம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் முத்தாரம்மன், முப்பிடாதி, சந்தனமாரியம்மன் சன்னதிகளும், முத்து விநாயகர், பைரவர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, கன்னி விநாயகர், பலிபீடம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் வருஷாபிஷேகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.