வி. கோ. ஜாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கோ. ஜாக்
பிறப்புவிஷ்ணு கோவிந்த் ஜாக்
22 பிப்ரவரி 1922
மும்பை
இறப்பு31 சனவரி 2004(2004-01-31) (அகவை 81)
கொல்கத்தா
கல்விபட்கண்டே இசை நிறுவனம்
படித்த கல்வி நிறுவனங்கள்பட்கண்டே இசை நிறுவனம்
பணிவயலின் கலைஞர்

விஷ்ணு கோவிந்த் ஜாக் (Vishnu Govind Jog) (22 பிப்ரவரி 1922 - 31 சனவரி 2004)) வி. கோ. ஜாக் என நன்கு அறியப்பட்ட இவர் [1] ஓர் இந்திய வயலின் கலைஞராவர். 20 ஆம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரிய இசை பாரம்பரியத்தில் வயலினில் முதன்மையானவரான இவர், வயலினை இந்தியப் பாரம்பரிய இசையில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1922 இல் மும்பையில் பிறந்த இவர், எஸ். சி. அதாவலே மற்றும் மறைந்த கண்பத் ராவ் புரோகித் ஆகியோரிடமிருந்து தனது ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். மிகச் சிறிய வயதில், 1930களில் லக்னோவின் பட்கண்டே இசைக் கல்லூரியில் தனது மூத்தக் கலைஞர்களுடன் இணைந்தே இருந்தார். இவர், தனது பன்னிரெண்டாவது வயதில் இசைப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் பாபா அலாவுதீன் கான் மற்றும் பண்டிட் எஸ். என். இரதன்ஜங்கர் போன்ற இந்தியாவின் மிகச் சிறந்த இசைக்கலைஞர்களிடம் பயிற்சி பெற்றார்.

தனது ஆரம்பகால பயிற்சியை சங்கர் ராவ் அதாவி, கணபத் ராவ் புரோகித் மற்றும் வி. சாத்திரி ஆகியோரின் கீழ் பெற்றார். பின்னர் முனைவர் எஸ். என். இரதன்ஜங்கர் மற்றும் அலாவுதீன் கான் ஆகியோரிடமிருந்து விரிவான பயிற்சி பெற்றார். அதைத் தொடர்ந்து, விசுவேசுவர் சாத்திரியிடம் பயிற்சி பெற்றார். இலங்கையின் பண்டிட் அமரதேவா இவரது சீடராவார்.

1980இல் சங்கீத நாடக அகாதமி விருதினையும் 1983 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூசண் விருதினையும் [2] பெற்றுள்ளார். இவர் ஓய்வுபெறும் நேரத்தில் அனைத்திந்திய வானொலியின் துணைத் தலைமை தயாரிப்பாளராக உயர்ந்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

1999 ஆம் ஆண்டு தொடங்கி, இவர் நடுக்குவாத நோயால் அவதிப்பட்டார். மேலும் தனது பிற்காலங்களில் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டார். நீண்டகால நோய்க்குப் பிறகு இவர் 31 சனவரி 2004 அன்று தெற்கு கொல்கத்தாவில் இறந்தார். ஒவ்வொரு ஆண்டும் சனவரி 31 ஆம் தேதி கொல்கத்தாவில் 'சுவரசதானா' என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது இவரது நினைவாக இவரது சீடர் வல்லப பாண்டியோபாத்யாயால் நிறுவப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Reference India: biographical notes on men & women of achievement of today ... - Ravi Bhushan — Google Books. https://books.google.com/books?id=yLgZAAAAYAAJ&q=%22Jog,+Vishnu+Govind%22&dq=%22Jog,+Vishnu+Govind%22&hl=en&ei=Rx3KTZbtB4jfgQf5mZnlBQ&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDAQ6AEwAQ. 
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 November 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 July 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கோ._ஜாக்&oldid=3257692" இருந்து மீள்விக்கப்பட்டது