உள்ளடக்கத்துக்குச் செல்

வி. எம். உபயதுல்லா சாகிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. எம். உபயதுல்லா சாகிப் (V.M. Obaidullah Sahib - பிறப்பு 03 மே 1905 இறப்பு 24 டிசம்பர் 1958),சென்னை மாகாணத்தின் வேலூரைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர். சென்னை மாகாணம் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக 1951 முதல் 1958 வரை ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவையில் பணியாற்றியுள்ளார்.

பிறப்பும் கல்வியும்

[தொகு]

உபயதுல்லா சாகிப் 03 மே 1905 இல் மதார்சா சாகிப்பிற்க்கு மகனாக அன்றைய சென்னை மாகாணத்தின் வேலூரில் பிறந்தார். வேலூரில் வெற்றிலை பாக்கு வியாபாரம் செய்யும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்

விடுதலை போராட்டம்

[தொகு]

அவர் 1947 இல் சுதந்திரம் அடையும் வரை சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து இயக்கங்களிலும் பங்கேற்றார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் 1921 முதல் 1944 வரை நடைப்பெற்ற பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்ற இவர் ஐந்து முறை சிறையிலடைக்கப்பட்டார். சுதேசி இயக்கம், கிலாபத் இயக்கம், கொடி சத்தியாகிரகம், ஹோம் ரூல் இயக்கம், சைமன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்,உப்புச் சத்தியாகிரகம் என அனைத்து போராட்டங்களிலும் தீவிரப் பணியாற்றினார்.

பிரித்தானிய சாம்ராஜ்யத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கும் இந்தியர்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட சுதேசி இயக்கத்தை ஆதரிக்கும் எல்லா இடங்களிலும் பிரிட்டிஷுக்கு எதிராக வலுவான எதிர்ப்புகளும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன. பல்வேறு போராட்டக் கூட்டங்களை வி.எம். உபயதுல்லா சாகிப் ஒருங்கிணைத்தார்.

1920 இல் கிலாபத் இயக்கத்தில் சேர்ந்தார் மற்றும் கிலாபத் குழு 19 மார்ச் 1920 ஐ இரண்டாவது கிலாபத் தினமாக கடைபிடிக்க முடிவு செய்து. மெட்ராஸ் மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைவர்கள், அப்துல் ஹக்கீம் மற்றும் வி.எம். உபயதுல்லா ஆகியோர் கூட்டத்தில் பேசினார். வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் சுற்றுப்பயணம் செய்து, பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டினார்.[1]

நாக்பூர் கொடி வழக்கு

[தொகு]

1923 இல், வி.எம். சி.ராஜகோபாலாச்சாரியின் ஆலோசனையின் பேரில் உபயதுல்லா சாகிப் கொடி சத்தியாகிரகத்தில் (தேசியவாதக் கொடிகளையும் காங்கிரசு கட்சிக் கொடிகளையும் பறக்கவிடும் போராட்டத்தில்) நாக்பூரில் பங்கேற்றார். பிரித்தானிய அரசாங்கத்தால் ஒரு வருட சிறைத்தண்டனைக்காக அவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சில மாதங்கள் நாக்பூர் சிறையிலும் பின்னர் மீண்டும் அமராவதி கொடுஞ்சிறைக்கும் மாற்றப்பட்டார் [2]

1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, உபயதுல்லா சாகிப் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்தார். அவரை கைது செய்ய போலீசார் தேடினார்கள் ஆனால் அவர் தப்பித்து ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்க பல்வேறு கிராமங்களில் இருந்து மக்களை திரட்டினார். இந்நேரத்தில், ஆகஸ்ட் புரட்சியின் பொறுப்பாளராக உபயதுல்லா சாகிப்பை காமராஜர் நியமித்தார். போராட்டம் வேலூரில் நடந்தது, பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு முறையே கோவை, வேலூர் மற்றும் தஞ்சாவூர் என 26 மாத சிறைவாசம் அணுபவித்தார்.[1]

இரு தேசக் கோட்பாடு

[தொகு]

1941 இல் இந்திய தேசிய காங்கிரசு தலைவராக இருந்த உபயதுல்லா சாகிப், பாகிஸ்தானின் உருவாக்கத்தை கடுமையாக விமர்சித்தார். தேசிய அளவில் முஸ்லீம் தலைவர்கள் ஜூன் 1941 இல் கும்பகோணத்தில் பிரிவினை எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி, இந்தியப் பிரிவினைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினர். ராஜாஜியின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டையும் அவர்கள் கண்டித்தனர். உபைதுல்லா அவர்களுடன் மற்றும் ஹாஜி முகமது மௌலானா சாகிப் மற்றும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சையத் முர்துசா ஆகியோரும் கண்டித்தனர்.[3]

அரசியல்

[தொகு]
  • 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் நகராட்சி கவுன்சிலராக பணியாற்றினார்.
  • இ.தே.கா வட ஆற்காடு மாவட்ட துணைத் தலைவர் நான்கு ஆண்டுகள்.
  • இ.தே.கா துணைத் தலைவர் ஏழு ஆண்டுகள்.
  • இ.தே.கா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் (1940-41)
  • 17 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு காங்கிரஸ் மேலாண்மைக்குழு.
  • 10 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.
  • 1951-1952 தற்காலிக இந்திய பாராளுமன்றத்தின நியமன உறுப்பினர்.
  • 3-ஏப்ரல்-1952 வரை 2-ஏப்ரல்-1956 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்.
  • 1954 ரயில்வே கன்வென்ஷன் கமிட்டி உறுப்பினர்.[4]
  • 3-ஏப்ரல்-1956 முதல் 21-பிப்ரவரி-1958 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்.[5]

குடும்பம்

[தொகு]

உபயதுல்லா சாகிப்பிற்க்கு ஜைபுன்னிஸா பேகம் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.[6]

இறப்பு

[தொகு]

இறப்பு 24 டிசம்பர் 1958 அன்று காலமானார். அவரது இறப்பிற்க்குப்பின் வேலூர் பேருந்து நிலையத்திற்க்கு வி.எம். உபயதுல்லா பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டி கவுரவிக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 வி.ராஜகோபாலன், சுதந்திரப் போரில் வட ஆற்காடு மாவட்டம்
  2. [வி.என்.சமி, விடுதலைப்போரில் முஸ்லிம்கள், மதுரை 2009 பக்கம் 752]நாக்பூர் கொடி வழக்கு
  3. [வி.என்.சமி, விடுதலைப்போரில் முஸ்லிம்கள், மதுரை 2009 பக்கம் 784]பிரிவினை எதிர்ப்பு மாநாடு கும்பகோணம்
  4. [1]
  5. Members of the rajya Sabha [2] மாநிலங்களவை உறுப்பினர்_ வாழ்க்கை வரலாறு_புத்தகம்]
  6. [3] குடும்பம்
  7. [வி.கே. குப்புசாமி -சுதந்திர போரில் வட ஆர்க்காடு மாவட்டம், பக்.116-118
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எம்._உபயதுல்லா_சாகிப்&oldid=3944111" இலிருந்து மீள்விக்கப்பட்டது