வி. ஆர். இலக்குமிநாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. ஆர். இலக்குமிநாராயணன், தமிழ்நாடு காவல்துறை சட்டம் & ஒழுங்கு தலைமை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், சி பி ஐயில் அதிக காலம் பணியாற்றியவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யரின் உடன் பிறந்த சகோதரரும் ஆவார். இவர் 23 சூன் 2019 அன்று தமது 91வது அகவையில் சென்னையில் காலமானர்.

வரலாறு[தொகு]

வி. ஆர். இலக்குமிநாராயணன் 1945ம் ஆண்டில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று, பின் சென்னையில் சட்டப் படிப்பு முடித்து, 1951ம் ஆண்டில் இந்தியக் காவல் பணியில் இணைந்தார். முதன்முதலாக மதுரை மாவட்டத்தில் காவல் துறை உதவி மாவட்டக் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். இவர் 1970 முதல் 1980 வரை தில்லி சி பி ஐயில் இணை இயக்குநராக பணியாற்றியனார். அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைக்குப் பின்னர் 1977 இந்தியப் பொதுத் தேர்தலில் வென்ற ஜனதா கட்சியின் அரசின் பிரதமரான மொரார்ஜி தேசாய் உத்தரவின் போரில் வி.ஆர். லட்சுமி நாராயணன், லஞ்ச ஒழிப்பு வழக்கில் இந்திரா காந்தியைக் கைது செய்தார்.[1] [2][3]

1980 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது லட்சுமி நாராயணன் சிபிஐயிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் தமிழக காவல் துறையில் இணைந்தார். 1985ம் ஆண்டில் வி. ஆர். இலக்குமிநாராயணன் தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் & ஒழுங்கு தலைமை இயக்குநராக பணியாற்றி 1986ல் ஓய்வு பெற்றார்.

மறைவு[தொகு]

வி. ஆர். இலக்குமிநாராயணன் 23 சூன் 2019 அன்று தமது 91வது அகவையில் உடல்நலக்குறைவால் சென்னையில் மறைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]