விஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடுவையில் விஸ்கி

விஸ்கி (whisky or whiskey) என்பது, நொதிக்கப்பட்ட தானியக் கூழிலிருந்து வடித்துப் பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை மதுபானமாகும். பார்லி, மால்ட்டு பார்லி, ரை, மால்ட்டு ரை மற்றும் கோதுமை மக்காச்சோளம் (சோளம்) போன்ற வெவ்வேறு தானியங்களில் இருந்து பல வகையான மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. கருவாலி மரத்தினால் செய்யபட்ட மர பீப்பாய்களில் விஸ்கிகள் பதப்படுத்தப் படுகின்றன. ஆனால் அமெரிக்கச் சோள விஸ்கி இவ்வாறு பதப்படுத்தப் படுவதில்லை.

விஸ்கி அவற்றின் தோற்ற பகுப்பின் பிரிவுகளில் பங்கு கொள்ளும் மற்றும் பல்வறு பகுதிகள் மற்றும் வகைகளை கொண்டும் கண்டிப்பாக ஓழுங்கு படுத்தபட்ட சக்தி அளிக்கும் பானமாக உலகம் முழுவதும் உள்ளது. பல்வேறு வகைகள் மற்றும் பரிவுகளை ஒன்றினைத்து தானியங்களிலிருந்து வடிகட்டுதல் மூலம் அதிகபடியாக சக்தியை சோளத்திற்கு 80% ஆல்கஹாலுக்கு குறைவாகவும் மற்ற தானியங்களுக்கு 90% ஆல்கஹாலும் கொடுக்க இயலும், தண்ணீர் சேர்ப்பதற்கு முன்பாக அவற்றின் சில தாணிய மணங்களை வைத்து தானிய நடுநிலை சக்தியுள்ள அல்லது வோட்கா வாக பிரிவதை தடை செய்ய முடியும்.[1] விஸ்கி 60% சுவையை அதை பதபடுத்தும் முறையில் இருந்து பெறுகிறது.[சான்று தேவை] எந்த வகையான மரங்களை உபயோகபடுத்துகிறோம் என்றும் காய்ச்சுயும் முறைகளை பொறுத்தும் வகைபடுத்த படுகின்றன.0/} பர்பன் விஸ்கி நன்றாக காய்ச்சபட்டு கருவேலி பீப்பாய்களில் அடைக்கப்பட்ட விஸ்கிக்கு ஒரு உதாரணமாகும், இந்த பர்பன் உபகரணங்களை கொண்டு ஸ்காட்ச் விஸ்கிகளின் உற்பத்தி காலமும் குறைக்கப்பட்டது.[2]

சொற்பிறப்பியல்[தொகு]

விஸ்கி என்பது காலிக் எடுக்கபட்ட ஆங்கிலத்தின் உஷ்பௌக்ஹ் என்ற சொல்லின் குறு வடிவமாகும். (ஐரிஸ் யூசி பீதா மற்றும் ஸ்காட்ஷ் யூச்ஜி பீதா ) ஐரிஸின் மிக பழமையான யூசி, " தண்ணீர்", மற்றும் பீதாடு, " வாழ்க்கைகாக" ஆகியவற்றை ஒருங்கினைத்த " வாழ்க்கைகான தண்ணீர்" என்ற சொல்லுக்கு இணையாக சொல்லப்படுகிறது. 14 ஆம் நூற்றாண்டில் லட்டீனில் அக்குவ விடெ என கூறப்பட்ட காய்ச்சிவடித்த பானங்கள் என்பதை குறிக்கிறது. இதற்கு முன்பு இந்த சொல்லின் எழுத்துகூட்டு இஸ்கியூபியா (1706) மற்றும் இஸ்கிபியா என்றும் இருந்தது. விஸ்கி என்பது 1405ஆம் ஆண்டு ஐரிஷின் ஆனல்ஸ் ஆப் குலோன்மானாஷின் பதிவுகளின் படி கிறிஸ்துமஸ் அன்று தலைவனின் இறப்பை விவரிக்கும் பகுதியில் அளவுக்கு அதிகமான ஆல்கஹாலை எடுத்து கொள்வது என்று இருந்தது. ". ஸ்காட்லாந்தில் விஸ்கி தயாரிப்புக்கான சூல்நிலை 1494 ஆம் ஆண்டு எஸ்செக்கர் ரோல் என்பவர் "அரசனின் ஆணைப்படி ஆல்கஹாலை உருவாக்குவதற்காக பெரையர் ஜான் கோர் " க்கு அனுப்பிய மால்ட் மூலம் உருவானது .[3]

வரலாறு[தொகு]

காய்ச்சி வடிக்கும் கலையானது சபடமியாவில் (தற்பொழுது ஈராக்) உள்ள பாபிலோனியன்ஸ் இடம் இருந்து குறைந்த பட்சம் கி.மு 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது, நீண்ட காலமாக வாசணை பொருள்களையும் மற்றும் நறுமண பொருள்களையும் காய்ச்சி வடித்து குடிக்க தக்க பானங்களை கண்டுபிடித்தனர். மத்திய தரைக்கடல் பகுதிகளில் இருந்து அயர்லாந்து பகுதிகளுக்கு ஐரிஸ் சமயபரப்பாளர்கள் வாயிலாக 6 ஆம் நூற்றாண்டு மற்றும் 7 நூற்றாண்டு ஆம் இடையில் காய்ச்சி வடிக்கும் கலையானது கண்டு கொள்ள முடிந்தது. காய்ச்சி வடிக்கும் முறையானது ஆப்ரிக்காவில் இருத்து ஐரோப்பாவிற்கு மூர்ஸ் [4] வாயிலாக பெறப்பட்டது, இவற்றின் பயன்பாடுகள் முனஷ்டிரிஷ் மூலம் பரப்பப்பட்டது, அதிகமாக மருத்துவ பயன்பாட்டிற்கும், வயிற்று வலி, வாதம் மற்றும் பெரியம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்கவும் பயன் படுத்தப்பட்டது.

1100 மற்றும் 1300 இடையில் இம்முறையானது ஐயர்லாந்தில் 12 ஆம் நூற்றாண்டில் இருந்த ஒதுக்கப்பட்ட காய்ச்சி வடிப்பர்களிடம் இருந்து ஐயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்திற்குப் பரவியது.[5] வாற்கோதுமை பீர்க்கு பதிலாக மாற்று திராட்சை மது தயாரிக்க பிரிட்டன் வைத்து இருந்த சில திராட்சைகள் விஸ்கியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.[6] 1494 ஆம் ஆண்டு மேல் கூறியது போல் ஸ்காட்லாந்தின் எக்ச்சையெர்,ப்ரைர் ஜான் காருக்கு வழங்கிய மால்ட் சுமார் 1500 பாட்டில்களை உருவாக்க போதுமானதாக இருந்தது, அதன் மூலம் வியாபாரமும் வெற்றிகரமாக நடந்தது.

ஸ்காட்லாந்தின் அரசன் ஜேம்ஸ் IV (r. 1488-1513) ஸ்காட்ச் விஸ்கியை நன்று விரும்புவராக இருந்தார், 1506 ஆம் ஆண்டு டுண்டீ என்ற நகரத்திலிருந்து ஸ்காட்ச் விஸ்கியை கில்ட் ஆப் சர்ஜன் பார்பேர்ஸ் என்பவரிடம் இருந்து வாங்கினார். 1536 மற்றும் 1541 இடையில் இங்கிலாந்து அரசன் ஹென்றி VIII துறவிகளை பொது மக்களாக்கி அனுப்பி துறவி மடங்களை ஒழித்தார் துறவி மடங்களை விடுத்து வீடுகளிலும், பண்ணைகளிலும் விஸ்கி தயாரிப்புகான அமைப்புகளை அமைத்து புதிதாக-விடுவிக்கபட்ட துறவிகள் அவர்களுக்கு தேவைகளுக்கான பணம் பெற்றனர்.[6]

அந்த நேரத்தில் வடிகட்டும் முறை குழந்தை பருவத்தில் இருந்தது விஸ்கியும் சிறு வயதில் இருந்தது, இதன் விளைவாக தற்போது உள்ள விஸ்கியை விட சுவை கடினமாகவும் மிருகத்தனமாகவும் இருத்தது. மறுமலர்ச்சி சாகப்த்திலும் விஸ்கி சக்தியுள்ள மற்றும் நீர்த்த சில நேரங்களில் கொடுமையாவும் இருந்தது. அதிகமாகவோ அல்லது சந்தோஷ காரணங்களுக்காகவோ ஒருவர் அருந்தும் விஸ்கியானது பல வருடங்களை மறக்க செய்யும் அளவுக்கு தனது தன்மையை வெளிபடுத்தியது.[7]

1707 ஆம் ஆண்டு ஒன்றிணைப்பு சட்டத்தின் படி இங்கிலாந்தும்,ஸ்காட்லாந்தும் ஒன்றிணைந்ததது, அப்போது அவற்றின் வரியும் அதிகரித்தது.[7]

1975 ஆம் ஆண்டு இங்கிலீஷ் மால்ட் டேக்ஸ்க்கு பிறகு ஸ்காட்லாந்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடவோ அல்லது நிறுத்தவோ நிர்பந்திக்கப் பட்டன. ஸ்காட்ச் விஸ்கிகள் அரசாங்க தீர்வைக்காக பலிபீடங்களிலும், சவப்பெட்டிகளிலும், எங்கு இடம் இருந்தாலும் மறைத்து வைக்கப் பட்டன.[6] ஸ்காட்டிஸ் சுத்திகரிப்பாளர்கள், இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் தான் விஸ்கியை காய்ச்சுவார்கள் ஏனென்றால் காய்ச்சும் போது புகை வருவது தெரியாமல் இருக்கும் என்று. இந்த காரணத்தினால் இந்த குடி நிலவொளி குடி என அறியப்பட்டது.[5] இந்த நிலையில் ஸ்காட்லாந்து விஸ்கியின் வெளியீடு சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்பட்டது.[7]

அமெரிக்க புரட்சியின் போது விஸ்கியானது நாணயமாக அமெரிக்காவில் கருதப்பட்டது. அதிகப்படியாக அனைவரும் உபயோகிப்பதனால் மேலும் ஒரு தீர்வை வரி வசூலிக்கப்பட்டது. 1974 ல் விஸ்கி எதிர்ப்பு கலகம் ஏற்பட்டது.[5]

வடிகட்டுதலை முறைபடுத்த (கட்டணமாக) ஸ்காட்டிஷ் நிலவொளி உற்பத்தியை நிறுத்த 1823 ல் யூகே தீர்வை வரி ஒன்றை உருவாக்கியது.[6]

1831 ல் ஏனியஸ் காபேய் காபேய் ஸ்டில் மூலம் தரமான மற்றும் திறனுள்ள விஸ்கி வடிகட்டுதலை உருவாக்கினார். 1850 ல் அண்ட்ரூ உஷர் பாரம்பரிய விஸ்கியுடன் புதிய காபேய் ஸ்டிலை சேர்த்து முதல் ஸ்காட்டிஷ் கலப்பு விஸ்கியை கண்டுபிடித்தார். இந்த தானிய விஸ்கியை கண்ட ஐரிஸ் வடிமனையாளர்கள் ஏளனம் செய்தனர், இதை தங்களுடைய மால்ட் விஸ்கியுடன் இணைத்து கொண்டனர். இந்த புதிய கலவை விஸ்கி இல்லை என்று பல ஐரிஸ்கள் வாதிட்டனர்.[8]

1880 ல் பைலொக்ஸ்ரா சிதலடைக்கும் பூச்சிகளை கொண்டு பிரான்ஸ் பிராண்டி தொழிற்சாலைகளில் உள்ள திராட்சை பயிர்களை அழித்தனர், இதன் விளைவாக பல சந்தைகளில் விஸ்கி முதன்மை பானமாக விற்கப்பட்டது.[6]

வகைகள்[தொகு]

காப்பர் பாட் ஸ்டில்ஸ் அட் அசின்நோஷான் டிஸ்டில்லரி இன் ஸ்காட்லாந்து.

விஸ்கி மற்றும் விஸ்கி சார்ந்த பொருள்கள் பெரும்பாலும் தானியம் விளையும் இடங்களில் உருவாக்கபட்டவை. மூலப்பொருள்கள் , ஆல்காஹாலிக் கலவை, தரம் ஆகியவற்றில் வேறுபட்டு இருந்தன.

விஸ்கி தயாரிக்க மூலப் பொருளாக மால்டேட் பார்லி
 • மால்ட் என்ற விஸ்கியானது வெங்காய வடிவிலான அசையாத பானையில் மால்டேடு பார்லி மூலம் முழுவதும் வடிக்கப்பட்டு தயாரிக்கபட்டது.
 • மால்ட் மற்றும் மால்டேடு பார்லியுடன் கூலங்களை சேர்த்து தானியக்கூலமானது தொடரிச்சியாக திறந்த அல்லது காப்பே பானை மூலம் தயாரிக்கபட்டது, சமீப காலம் வரை இது கலவைகளாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது, ஆனால் இப்போது சில ஒற்றை தானிய ஸ்காட்ச்களும் சந்தைப்படுத்தப்படுகின்றன.

மால்ட் மற்றும் கூலங்கள் பல வழிகளில் சேர்க்கபடுகின்றன

 • பல்வேறு வடிமனைகளிலிருந்து பிரிக்கப்பட்ட மால்ட் விஸ்கிகளுடன் வாட்டேடு மால்டானது கலக்கப்படுகிறது "ப்யூர் மால்ட் "அல்லது வெறும் "மால்ட்" என்று விஸ்கியில் குறிக்கபட்டு இருந்தால் அவை வாட்டேடு விஸ்கியை குறிக்கும் இவை சில நேரங்களில் "பிளண்டேட் மால்ட்" விஸ்கி என்றும் குறிக்கபட்டு இருக்கும்.
 • ஒரே வடிமனையில் வடிக்கபட்ட மால்ட் விஸ்கியானது சிங்கிள் மால்ட் விஸ்கியாகும். "ஒரே-பீப்பாய்" (சிங்கிள்-காஸ்க்) என்று விஸ்கியானது விவரிக்கபடாமல் இருந்தால் அவை பல பீப்பாய்களிலும், சில வருடங்களையும் கடந்து இருக்கலாம் என்றும், இதன் மூலம் இந்த விஸ்கியின் சுவையானது இந்த வடிமனையுடையது என்பதையும் அறியாலம். சில நேரங்களில் தி கிளனிவிட், புஸ்மில்ஸ், யோயிச்சி போன்ற வடிமனைகளில் தயாரிக்கபட்ட சிங்கிள் மால்டானது போர்ட் வைன் காஸ்கில் முதிர்ச்சி செய்யபட்டது என்ற வரிகளுடன் வருகிறது
 • பியூர் பாட் ஸ்டில் விஸ்கி என்பது பாட்-ஸ்டில் (சிங்கிள் மால்ட்) போன்ற முறையில் மால்டேடு மற்றும் அன்மால்டேடு பார்லிகளை கூலாக்கி வடிகட்டுவதை குறிக்கிறது. இவை ஐயர்லாந்தில் மட்டும் தனிப்பட்டு காணப்படுகின்றன.
 • பிளண்ட்டு விஸ்கிகள் மால்ட் மற்றும் கிரைன் விஸ்கிகளை கலந்து உருவாக்க படுகின்றன. இந்த முறையில் தயாரிக்கபட்ட விஸ்கிகளுக்கு ஸ்காட்ச் மற்றும் ஐரிஸ் விஸ்கிகளின் சுவை இருப்பதாக உணரப் படுகிறது. கலவை என்பது பல வடிமனைகளிலிருந்தும், கலப்பவரின் சுவைமணத்தை பொருத்தும் வகைகளாக பிரிக்கப்படுகிறது. (எடுத்துக்காட்டாக சிவாஸ் ரீகல் கனடியன் க்ளப்) இப்படி செய்வது இல்லை ஆகையால் வடிமனைகளின் பெயர் இடம் பெறும் ஜேம்சன் ஐரிஸ் விஸ்கி என்பது இதிலிருந்து மாறுபட்டு ஒரே ஒரு வடிமனையிலிருந்து பெறப்படும் விஸ்கியாகும் எப்படி இருந்தாலும் "கலவை" (அடிக்கடி) வேறு அர்த்தங்களை உடையது பல்வேறு வடிமனைகளிலிருந்து( வாட்டேடு மால்ட் எனப்படும்) பெறப்பட்ட மால்ட்(கூல் இல்லாமல்) சில நேரங்களில் " பிளண்டேட் மால்ட்" என்றும் மால்ட் இல்லாமல் கிரைன் விஸ்கிகளின் கலவை "பிளண்டேட் கிரைன் " என்றும் குறிக்கபடும்.
 • காஸ்க் ஸ்டிரந்த் விஸ்கிகள் இந்த முறையில் அதிகம் இல்லாமல் புட்டியில் அடைக்கப்படும் சிறந்த விஸ்கிகள் ஆகும். இவைகள் எப்போதும் சுத்தமான பீப்பாய்களிலிருந்து புட்டியில் அடைக்கப் படுகின்றன. சுவையை குறைப்பதற்கு பதிலாக காய்ச்சி வடிப்பவர்கள் குடிப்பவர்கள் ஏற்று கொள்ளும் விதத்தில் காய்ச்சி வடிக்கின்றனர்(சுவையை குறைப்பது தேவையற்ற ஒன்றாகும், இது தான் சிங்கில் காஸ்க் விஸ்கியின் தரம் ஆகும்) டுன்கன் டெய்லர், மாஸ்டர் ஆப் மால்ட், கார்டன் மாக்பெயில் மற்றும் காடன்ஹெட் போன்றவர்கள் சிங்கிள் காஸ்க் விஸ்கிகளை புட்டியில் அடைப்பத்ற்கு மற்றவர்களை விட சிறந்தவர்கள் ஆவர்.

விஸ்கிகள் புட்டியில் பக்குவமாவது இல்லை, பீப்பாய்களில் மட்டுமே பக்குவமாகின்றன, எனவே விஸ்கிகளின் "வயது" என்பது வடித் தெடுத்தப்பதற்கும், புட்டியில் அடைப்பதற்கும் இடைப்பட்டதாகும் பீப்பாய்கள் எவ்வாறு விஸ்கிகளின் சுவையையும், வேதியியல் மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன என்பதை பிரதிபலிக்கின்றன. பல ஆண்டுகளாக புட்டியில் அடைக்கபட்ட விஸ்கிகள் அரியது , ஆனால் "பழமையானதும்" அல்ல, அதே சமயத்தில் தற்போது மரத்தினால் பக்குவ படுத்தபட்ட விஸ்கிகளை விட "சிறந்ததாக" இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 40% அல்லது 40 % இணையான ஆல்கஹாலிக் சக்தியுடனே பல விஸ்கிகள் விற்கப் படுகின்றன.abv

அமெரிக்கன் விஸ்கிகள்[தொகு]

அமெரிக்க விஸ்கிகள் நொதிக்கப்பட்ட தானியக் கூழிலிருந்து வடித்துப் பிரித்தெடுக்கப்படுகின்றன. அதனால் விஸ்கிகளுக்கு உண்டான பொதுவான பண்புகளும், சுவை மற்றும் மணத்தையும் பெற்றுள்ளன.

ஒன்றிணைந்த விதிமுறைகளின்[9] படி பொதுவாக பட்டியலிட பட்ட வகைகள்

 • கூழாக்கு முறையிலிருந்து பர்பன் விஸ்கி உருவாக்கபடுகிறது, இதில் குறைந்த பட்சம் 51 % சோளம் (மக்காச்சோளம்) உள்ளது.
 • கூழாக்கு முறையிலிருந்து ரெய் விஸ்கி உருவாக்கபடுகிறது, இதில் குறைந்த பட்சம் 51 % ரெய் உள்ளது.
 • கூழாக்கு முறையிலிருந்து கார்ன் விஸ்கி உருவாக்கபடுகிறது, இதில் குறைந்த பட்சம் 51 % சோளம் (மக்காச்சோளம்) உள்ளது.
 • ஸ்டிரைட் விஸ்கி ( எந்த வித தானியங்களும் இல்லாமல்) என்ற விஸ்கி கருகிய புதிய கருவாலி மரத்தினாலான கொள்கலனில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வருடம் காய்ச்சி வடிக்கபட்டு 80% அளவுக்கு ஆல்கஹால் மிகாமலும் இதோ ஒரு தானியத்திலிருந்து 51 % குறைவாகவும் பெறப்படுகிறது.

அமெரிக்க விஸ்கிகளில் "பெயரிடப்பட்ட வகைகள்" 80 % அளவுக்கு ஆல்கஹால் இல்லாமல் காய்ச்சி வடிக்க வேண்டும். கார்ன் விஸ்கிகளை தவிர கருகிய புதிய கருவாலி மரத்தினாலான கொள்கலன்களை விட "பெயரிடப்பட்ட வகைகள்" பழமையானதாக இருக்க வேணடும். கார்ன் விஸ்கிகளை பழமையாக்க வேண்டிய அவசியம் இல்லை, பழமையாக்கபட்டு இருந்தால் அவற்றை புதிய கருகாத கருவாலி மரத்தினாலான கொள்கலன்களிலோ அல்லது உபயோகப் படுத்தபட்ட கொள்கலன்களிலோ இருக்க வேண்டும். கார்ன் விஸ்கிகளை பழமையாக்குவது எப்போதும் சுருக்கமான ஒன்றாகும் எ.கா 6 மாதங்கள்

2 அல்லது அதற்கு மேலாக பழமையாக்கபட்ட "பெயரிடப்பட்ட வகைகள்" விஸ்கிகள் "ஸ்டிரெய்ட்" என்று கூடுதாலாக அழைக்கப்படும் . எ.கா "ஸ்டிரெய்ட் ரெய் விஸ்கி". "ஸ்டிரைட் விஸ்கி "( எந்த வித தானியங்களும் இல்லாமல்) என்ற விஸ்கி கருகிய புதிய கருவாலி மரத்தினாலான கொள்கலனில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வருடம் காய்ச்சி வடிக்கபட்டு 80% அளவுக்கு ஆல்கஹால் மிகாமலும் இதோ ஒரு தானியத்திலிருந்து 51 % குறைவாகவும் பெறப்படுகிறது.

கலவை செய்யபட்ட அமெரிக்க விஸ்கிகள் ஸ்டிரைட் விஸ்கியுடன் பழமையாக்கபடாத விஸ்கி, தானிய சக்தி நடுநிலையுள்ள, சுவையையும், வண்ணத்தையும் கொண்டதாகும்.

ஜாக் தேனியலின் டென்னீசீ விஸ்கி சந்தையில் கிடைக்கும் இந்த வகையான விஸ்கிகளுக்கு முக்கியமான எடுத்துக்காட்டாகும். காய்ச்சி வடிக்கும் போது வட அமெரிக்காவில் பர்பன் விஸ்கியை எல்லா முறைகளிலும் ஒன்றாக புளிப்பாக கூலாக்குவது போல, டென்னீசீ விஸ்கியை கொள்கலனில் பழமையாக்குவதற்கு முன்பாக கரித்துண்டுகளினால் வடிகட்ட வேண்டும். டென்னீசீ விஸ்கியின் ஏற்றுக் கொள்ள கூடிய வித்தியாசம் என்னவென்றால் சுகர் மாபில், கரித்துண்டுகள் மூலமாக வடிகட்ட பட்டு தனிதன்மை வாய்ந்த சுவையையும், மணத்தையும் தருகின்றன. மிக முக்கியாமன வித்தியாசம் என்னவென்றால் கொள்கலன்களை மறுமுறை உபயோகிக்க பர்பன் விஸ்கி உற்பத்தியில் அனுமதி இல்லை ஒழுங்கு முறைகளினால் வரையறுக்க படவில்லை என்றாலும் டென்னீசீ விஸ்கி 1941 ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசால் அங்கீகரிக்கபட்டது.

கனடியன் விஸ்கிகள்[தொகு]

பல்வேறு கனடியன் விஸ்கிகள்

கனடியன் விஸ்கிகள் மற்ற விஸ்கி வகைகளை விட மென்மையானதாகவும், லேசானதாகவும் இருக்கும். கனடியன் விஸ்கிகளின் மற்றும் ஒரு பொதுவான பண்பு என்னவென்றால் ரெய்யை மால்ட் செய்வதன் மூலம் அவற்றிக்கு நல்ல மணமும் மென்மையும் கிடைக்கிறது.[10] கனடியன் சட்ட விதிகளின் படி கனடியன் விஸ்கிகள் தானிய கூழிலிருந்து நொதிக்கபட்டு வடிகட்ட பட்டு மேலும் கனடாவில் தயாரிக்க பட்டவையாக இருக்க வேண்டும், 3 வருடத்திற்கு குறைவாக பழமையாக்க பட்டதாகவும், மேலும் நல்ல மணம், சுவை, கனடியன் விஸ்கிகளுக்கு உண்டான பண்புகளுடன் இருக்க வேண்டும். "கனடியன் விஸ்கி", "கனடியன் ரெய் விஸ்கி" மற்றும் "ரெய் விஸ்கி" ஆகியற்றில் உற்பத்திக்காக பயன்படுத்தபடும் ரெய் மற்றும் தானியங்கள் இவற்றில் இருந்து பிரிக்க முடியாத அளவிற்கு சம விகிதத்தில் உள்ளன.

பினிஷ் விஸ்கிகள்[தொகு]

பினிஷ் விஸ்கி கலாச்சாரமானது சில வருடங்களுக்கு முன்னால் தோன்றி இன்றும் நடைமுறையில் உள்ளது. பினிஷ் விஸ்கி கலாச்சாரமனாது நிலையான வாழ்க்கை முறையினாலும், பொதுவான உணவு பழக்கத்தினாலும் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. விற்பனையும், உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகபடியாக உயர்ந்துள்ளது. தற்போது 2 வடிமனைகள் பின்லாந்திலும், மூன்றாவது கட்டுமானத்திலும் உள்ளது. பின்லாந்தில் விஸ்கியின் சில்லரை வியாபாரம் ஸ்டேட் ஆல்கஹால் மோனோபோலி Alko மூலம் கட்டுபடுத்தபட்டு, சக்தியான ஆல்கஹாலிக் பானங்களின் விளம்பரம் தடை செய்ய பட்டுள்ளது. மோனோபோலி ஸ்டேட்ஸ் ஆல்கோவின் விஸ்கிகள் மீதான விளம்பர தடை இருந்தாலும் அது மக்களின் விஸ்கி உபயோகிக்கும் முறையை தடை செய்ய முடியவில்லை மாறாக அவற்றின் உபயோகத்தை அதிகபடுத்தியுள்ளது.[11]

ஜெர்மன் விஸ்கிகள்[தொகு]

மரபுவழியாக விஸ்கி தயாரிக்க பயன்படும் தானியங்களை கொண்டே ஜெர்மன் விஸ்கி தயாரிக்கப்படுகிறது. கடந்த 30 வருடங்களுக்கு முன்பு தான் ஜெர்மன் முறை விஸ்கி தயாரிக்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது. இந்த தயாரிப்பு வழக்கமானது ஐயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஐக்கிய நாடுகளில் தயாரிக்கப்படும் சிங்கிள் மால்ட், பிள்ண்ட்ஸ், பர்பன் வகைகளை ஒத்திருந்தது. நிலையான எழுத்துகோர்வை இல்லாமலே ஜெர்மன் விஸ்கிகள் "விஸ்கி" (whisky) மற்றும் "விஸ்கி"(whiskey) மேலும் "வெஸ்கி" (whessky) ஒரு விளையாட்டு வார்த்தையான விஸ்கி மற்றும் ஹெசென் என்ற நகரத்தில் உருவானதாலும் இந்த பெயர் பெற்றது. ஜெர்மனியில் 10கும் மேற்பட்ட விஸ்கி தயாரிக்கும் வடிமனைகள் உள்ளன.[12]

இந்தியன் விஸ்கிகள்[தொகு]

இந்தியன் விஸ்கி என்பது ஆல்கஹால் குடிபானமாகும், இது "விஸ்கி" என்ற பெயரில் இந்தியாவில் அறிய படுகிறது. பெரும்பாலும் இந்தியன் விஸ்கி கழிவுச் சர்க்கரை பாகுலிரிந்து நொதிக்கப்பட்டு வடித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது,[13] இந்திய துணைகண்டங்களின் வெளியே இது ஒரு வகையான ரம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.இந்தியாவில் 90 % "விஸ்கி" கழிவுச் சர்க்கரைக் பாகுலிரிந்து பெறப்படுகிறது, எனினும் மால்ட் மற்றும் தானியக் கூழிலிருந்து வடித்துப் பிரித்தெடுக்கும் முறையை இந்தியா தற்போது தொடங்கியுள்ளது.[14]

கசவுலி டிஸ்டில்லரி 1820 க்கு பிறகு ஹிமாலய மலைப் பகுதிகளில் நிறுவப்பட்டு தொடங்கபட்டது. முதன்மை விஸ்கி தரமானது "சோலன் நம். 1 "என்ற பெயரில் அறிய பட்டது சோலன் என்ற நகரத்திற்கு அருகில் உருவானதால் இந்த பெயர் வைக்க பட்டது. இது தான் இது வரை சிறப்பாக விற்கபட்ட இந்தியன் விஸ்கியாக இருந்தது, ஆனால் 1980 ன் தொடக்கதில் பெரிய வடிமனைகளின் போட்டியால் மூடப்பட்டது. இந்த வடிமனையில் உருவாக்கபட்ட பிற விஸ்கிகள் டிப்ளமட் டீலக்ஸ், கோலனெல்'ச் ஸ்பெஷல், பிளாக் நைட் மற்றும் சம்மர் ஹால்.[15]

ஐரிஸ் விஸ்கிகள்[தொகு]

File:IrishWhiskey.jpg|right|thumb|200px|பல்வேறு ஐரிஸ் விஸ்கிகள்

பெரும்பாலும் ஐரிஸ் விஸ்கிகள் மூன்று முறை வடிக்கப்படுகின்றன, அவற்றில் சில விதிவிலக்குகளும் உள்ளன. பாரம்பரியாமாக பாட் ஸ்டில் முறை உபயோகப் படுத்தினாலும், கலப்பு முறையில் கிரைன் விஸ்கியை தயாரிக்க காலம் ஸ்டில் எனற முறை தற்காலத்தில் உபயோகப் படுத்தபடுகிறது. சட்டத்தின் படி ஐரிஸ் விஸ்கிகள் ஐர்லாந்தில் தயாரிக்க பட்டவையாக இருக்க வேண்டும், 3 வருடத்திற்கு மிகுதியாக மர பீப்பாய்களில் பழமையாக்க பட்டதாகவும், நடைமுறையில் 3 அல்லது 4 முறை வழக்கத்தில் உள்ளவையாகவும் இருந்து இருக்க வேண்டும்.[16] அன்பீடேட் மால்ட் என்பது எப்போதும் உபயோகப் படுத்தபடும், கொன்னிமாரா பீடேட் மால்ட் விஸ்கி அதிலிருந்து விதிவிலக்காகும்.

ஐர்லாந்தில் நிறைய வகை விஸ்கிகள் பொதுவாக உள்ளன: சிங்கிள் மால்ட், சிங்கிள் கிரைன், பிளண்டெட் விஸ்கி மற்றும் ஐர்லாந்தின் தனித்துவமான பியூர் பாட் ஸ்டில் விஸ்கி பியூர் பாட் ஸ்டில் என்று ஐர்லாந்தில் உபயோகிக்கபடும் முறை மூலம் உருவாக்கப்படும் விஸ்கியானது 100 % சுத்தமான பார்லி, மிக்ஸ்டு மால்டேல் மற்றும் காப்பரால் செய்யபட்ட பாட் ஸ்டில் வடிகட்டுதல் ஆகும். "கிரீன்" அன்மால்டேட் பார்லி மூலம் பாட் ஸ்டில் பாரம்பரிய முறையில் உருவாக்கப்பட்ட விஸ்கி காரமாகவும், ஐரிஷின் தனிதன்மையுடனும் உள்ளது. சிங்கிள் மால்ட்டை போலவே பியூர் பாட் ஸ்டிலும், கிரைன் விஸ்கியும் கலவையாக விற்க படுகிறது. சிங்கிள் மால்ட் அல்லது பியூர் பாட் ஸ்டியின் கலவையான விஸ்கிக்கு எந்த விதமான தனி சிறப்பும் இல்லை.

ஜப்பனிஸ் விஸ்கிகள்[தொகு]

சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் என்பது ஜப்பனிஸ் விஸ்கிகளுக்கான மாதிரியாகும், ஜப்பனிஸ் பிள்ண்ட்டட் விஸ்கிகளுக்கு இவை எடுத்துக்காட்டாகும். மால்ட்டட் பார்லியின் கூல் இதன் அடிப்படையாகும், சிறிதளவு நிலக்கரியுடன் சுண்ணாம்பு கால்வாயில் வைத்து பாட் ஸ்டில் முறையில் (ஸ்காட்லாந்தை விட குறைவாக) வடிக்கப் படுகிறது. ஜப்பனிஸ் விஸ்கி ஏற்றுமதியாளர்கள் மேற்கில் உள்ள விஸ்கிகள் ஸ்காட்ச் வகையைச் சார்ந்தவை என்று நினைத்தனர் ஆனால் அவை ஸ்காட்லாந்தில் தயாரிக்கப் பட்டவை அல்ல, அவை கீழ்தரமான விஸ்கிகளாக இருந்தன,ஜப்பனிஸ் விஸ்கிளுக்கான சந்தை உள்நாட்டில் மட்டுமே இருந்தது. தற்போது ஜப்பனிஸ் விஸ்கிகள் சர்வதேச விருதுகள் பலவும், தரத்திற்கான நற்பெயரையும் பெற்றுள்ளன.[17][18]

ஸ்காட்ச் விஸ்கிகள்[தொகு]

File:Scotch whiskies.jpg|right|thumb|200px|பல்வேறு ஸ்காட்ச் விஸ்கிகள்

ஸ்காட்ச் விஸ்கிகள் பொதுவாக இரண்டு முறை வடிக்கப்படுகிறது, ஒரு சில மூன்று முறையும் வடிக்கப்படுகிறது.[19] சர்வதேச சட்டமானது " ஸ்காட்ச்" என்று ஏதேனும் குறிக்க பட்டு இருந்தால் அது ஸ்காட்லாந்தில் வடிக்கப் பட்டதாகவும், குறைந்தது 3 வருடங்கள் முதிர்ச்சியடைந்தாகவும், ஒரு நாள் கருவாலி பீப்பாய்களில் வைக்கபட்டதாகவும், மேலும் சில குறிபிட்ட காரணங்களையும் குறிக்கிறது.[20] ஒன்றுக்கு மேற்பட்ட பீப்பாய்களிலிருந்து பெறப்பட்ட ஸ்காட்ச் விஸ்கியின் பாட்டிலில் அதன் வயதை குறிக்கும் வாக்கியம் இருந்தால் அது கலவை விஸ்கியின் குறைந்த வயதை குறிக்கிறது. சுவைக்காவும், மென்மைக்காவும் ஒரு நிமிடத்தில் சேர்க்கபடும் மூலங்களை சிங்கிள் மால்ட் வயதை புறக்கணிக்க எடுத்து கொள்கிறது. ஸ்காட்சின் அடிப்படை வகைகள் மால்ட் மற்றும் கிரைனாகும் இவற்றை ஒன்றிணைத்து கலவைகள் தயாரிக்கப் படுகின்றன. பல மற்றும் எல்லாவற்றிலும் இல்லாத போதிலும் ஸ்காட்ச் விஸ்கிகள் மால்ட்களை நிலக்கரி புகையின் மூலம் தனித்தன்மையான புகை மணத்தை ஸ்காட்ச்க்கு தருகின்றன. கலவைகளினால் சந்தை ஆதிக்கபட்டுள்ளது, ஸ்காட்ச் விஸ்கிகளின் அதிகப் படியான விலை சிங்கிள் மால்ட்ஸ் ஆகும். ஸ்காட்ச் விஸ்கிகள் 5 பகுதிகளாக பிரிக்கபட்டுள்ளது, ஹைலேண்ட், லோலேண்ட், இஸ்லே, ஸ்பேசய்ட் மற்றும் காம்பிள்டவுன்.

வெல்ஷ் விஸ்கிகள்[தொகு]

1894 ல் நிறுத்தப்பட்ட வெல்ஷ் விஸ்கியின் உற்பத்தியை, 2000ல் வேல்ஸில் உள்ள பெண்டிரைன் டிஸ்டில்லரி பெண்டிரைன் சிங்கிள் மால்ட், வெல்ஷ் விஸ்கி என்ற பெயரில் தொடங்கியது. முதல் பாட்டில் 1 மார்ச் 2004 அன்று செயிண்ட் டேவிட்ஸ் டேய் க்கு விற்பனைக்கு வந்தது, தற்போது இந்த விஸ்கி உலகம் முழுவதும் விற்கப் படுகிறது, பெர்கான் பியாகான்ஸ் நேஷனல் பார்க்கில் பெண்டிரைன் டிஸ்டில்லரி அமைந்துள்ளது மேலும் மிகச் சிறிய டிஸ்டில்லரியாக கருதப்படுகிறது.[21]

மற்ற விஸ்கிகள்[தொகு]

பிரான்ஸில் உள்ள பிரிட்டனியில் டிஸ்டில்ரே டெஸ் மென்ஹிர்ஸ்[22], கல்லிஅன்[23], கிளான் அர் மோர்[24], காரில்ஸ்[25], மற்றும் வாரன்ஹம்[26] என்ற 5 வடிமனைகள் ஸ்காட்லாந்தின் முறையை பயன் படுத்தி விஸ்கிகளை தயாரிக்கின்றன.

பிரன்ச் தீவில் உள்ள கார்ஸியா என்ற இடத்தில் தயாரிக்கப் படும் பியட்ரா & மாவிலா ( P&M ) என்ற விஸ்கியானது பிரிவரி பியட்ரா மற்றும் டிஸ்டிலரி மாவிலாவின் இணை தயாரிப்பாகும். கஷ்கொட்டை மாவின் மூலம் கூல் செறிவூட்டப் படுகிறது. மஸ்கட் காஸ்கில் பி & எம் முழு வளர்ச்சியடைகிறது ( டொமைன் ஜெண்டைல்.[not in citation given][27]

ஸ்யில் ஆப் மேன்லிருந்து வரும் மான்ஸ் ஸ்பிரிட்டானது யுஎஸ்எ (USA) வில் இருக்கும் விர்ஜின் விஸ்கியை போன்றது, எங்கேயோ வடிக்கப் பட்டு பெயரளவில் துவக்கம் பெற்ற நாட்டில் மறுபடியும் வடிக்கப் படுகிறது.

ஸ்பெயினில் 1948 ஆம் ஆண்டு தொடங்கபட்ட டிவொய்சி (DYC) என்று பெயரிடப் பட்ட டிஸ்டில்லரி உள்ளது. 3 விதமான விஸ்கிகள், 2 பிளண்டட் மற்றும் ஒரு பியூர் மால்டை தயாரிக்கிறது. குறைந்த அளவு உபயோகிக்கும் பியூர் மால்ட் 50 அனிவர்சரி என அழைக்கப் படுகிறது.

ஸ்வீடனில் ஒரு புதிய டிஸ்டில்லரி மாக்மயிரா( Mackmyra[28]) 2006 முதல் ஆரம்பிக்க பட்டு பொருள்களை விற்பனை செய்து வருகிறது.

காவ்காஸஸ் பகுதியை சேர்ந்த பாரம்பரிய பிராண்டி தயாரிக்கும் நிறுவனம் தனது 2 விஸ்கி தயாரிக்கும் டிஸ்டில்லரிகளை ரஷ்யாவில் தொடங்கி உள்நாட்டு சந்தையில் நுழைய முடிவு செய்துள்ளது. ஸ்டவரோபோலை சேர்ந்த பிரஸ்கோவேஸ்கி டிஸ்டில்லரி ஐரிஸ் டெக்னாலஜி மூலம் தனது பொருள்களை உருவாக்க உள்ளது, கிஷ்லைர், டாகிஸ்டான் என்ற "ரஷ்யன் விஸ்கி" ஸ்காட்ச்-இன்ஸ்பய்ர்டு சிங்கிள் மால்ட் பானத்தையும், பிளண்டட் மற்றும் வீட் வெரைடிகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.[29]

தைவானின் வைலன் நகரில் உள்ள கிங் கார் நிறுவனம் ஒரு விஸ்கி டிஸ்டில்லரியை சமீபத்தில் துவங்கி கவலான் சிங்கிள் மால்ட் விஸ்கியை விற்பனை செய்து வருகிறது.[30]

நியூ சொவ்த் வேல்ஸில் கிரிங்காங்கில் உள்ள ஆஸ்திரேலியன் ஸ்பிரிட் டிஸ்டில்லிங் நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியா சிங்கிள் மால்ட் விஸ்கிகளை தயாரிக்கிறது. இவை அமெரிக்கன் ஓக் பேரல்களில் பதப்படுத்தபடுகின்றன. 2004 ல் உற்பத்தியை துவக்கியது. நியூ டிஸ்டில்லரி எக்யூப்மெண்ட் ஆஸ்திரேலியன் பாணியில் "ஸ்டாக்மான்ஸ் விஸ்கி" மற்றும் "கன் ஆலே" என்ற சோர் மாஸ் விஸ்கிகளின் உற்பத்தியை உயர்த்தியுள்ளது.

2006 க்கு பிறகு இங்கிலாந்தில் உள்ள நார்போல்க் என்ற இடத்தில் முதல் விஸ்கியை (மால்ட் ஸ்பிரிட் எதிராக) தயாரித்து 2009 நவம்பரில் வெளிவந்தது. 100 வருடங்களில் இது தான் இங்கிலாந்தின் முதல் சிங்கிள் மால்ட்டாகும். இங்கிலிஷ் விஸ்கி நிறுவனம் மூலம் செயிண்ட் ஜார்ஜ் டிஸ்டில்லரி இதை தயாரித்தது.[31] லிவர்பூல் மற்றும் பிரிஸ்டால் இதற்கு முன்பு இங்கிலிஷ் விஸ்கி தயாரிப்பின் மையங்களாக இருந்தன. ஸ்காட்ச் விஸ்கியில் உபயோகிக்கபடும் தானியங்கூழுக்கு ஈஸ்ட் அங்கிலா ஆதாரமாக இருந்தது.

பெயர்கள் மற்றும் உச்சரிப்புகள்[தொகு]

கிங் ஹென்றி II 12ம் நூற்றாண்டில் ஐயர்லாந்தின் மீது படையெடுக்கும் போது அவரது வீரர்கள் ஐரிஷின் வார்த்தையான யூசி பீயதா பொருள் " வாட்டர் ஆப் லைப்" உச்சரிக்க கஷ்ட பட்டதால் "விஸ்கி" என்ற வார்த்தை தோன்றியாதாக நம்பப்படுகிறது. [ɪʃkʲə bʲahə] அதற்கு பிறகு, உச்சரிப்பு "விஸ்கியாபா" ( ஐரிஷில் வரும் ஒலியை போன்று) "விஸ்கி" என்று மாறியது. இந்த பெயரானது லாடினின் காலிகில் உள்ள கால்கியூ கொண்டு உருவாக்கப் பட்ட "அக்குவா வீடே" வாக்கியமாகும், அர்த்தம் "வாட்டர் ஆப் லைப்" ("water of life").[32]

ஒரு காலத்தில் அனைத்து விஸ்கியும் "இ" என்ற எழுத்து இல்லாமல் "விஸ்கி" என்று அழைக்க பட்டது. 1870 களில் காபே ஸ்டில் மூலமாக ஸ்காடிச் டிஸ்டில்லரிஸ்லிருந்து சந்தைக்கு வரும் ஸ்காடிச் விஸ்கிகளின் மதிப்பு குறைவாகவே இருந்தது. ஐரிஸ் மற்றும் அமெரிக்கன் டிஸ்டில்லரிஸ் தனது தரமிக்க பொருள்களை வேறுபடுத்தி காட்ட "விஸ்கி" யில் ஒரு "இ" யை அதிகமாக இணைத்துக் கொண்டன. தற்போது உச்சரிக்கபடும் விஸ்கி (whisky) (பன்மை விஸ்கீஸ்) (whiskies) ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா, ஜப்பானில் உபயோகபடுத்தப் பட்ட டிஸ்டில்டு விஸ்கீஸை பொதுவாக குறிக்கிறது, விஸ்கே (whiskey) ஐயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் உபயோகபடுத்தப் பட்ட ஸ்பிரிட் டிஸ்டில்டுகளை குறிக்கிறது. 1968 ல் பியூரோ ஆப் ஆல்கஹால், டாபாக்கோ மற்றும் பயர்ஆம்ஸ் விஸ்கி என்பதை அமெரிக்க உச்சரிப்பின் படி விளக்கியது, இவை பாரம்பரிய முறையில் தயாரிக்கப் பட்ட விஸ்கிகளை "whiskey" பிரித்தறிய உதவியது மற்றும் நிறைய யூ.எஸ் (U.S) ஸ்டில் தயாரிப்பாளர்கள் இந்ந பழமை வாய்ந்த உச்சரிப்பை உபயோகிக்கின்றனர். இயர்லி டைம்ஸ், மாக்கர்ஸ் மார்க் மற்றும் ஜார்ஜ் டைகிள் போன்றவை வேறுபட்டு ஸ்காட்டிச் மரபை சுட்டி காட்டுகின்றன.[8]

விக்டோரியன் எரா க்கு பிறகு ஐரிஸ் விஸ்கி தான் உலகின் பிரபலமான விஸ்கியாக இருந்தது. ஐரிஸ் விஸ்கிகளில் டுப்லின் விஸ்கிகள் கிராண்ட்ஸ் க்ரஸ் விஸ்கிகளாக பொருட் படுத்தபட்டது. டுப்லின் விஸ்கிகளை மற்ற விஸ்கிகளிலிருந்து வேறுபடுத்த டுப்லின் டிஸ்டில்ரிஸ் விஸ்கே "whiskey" என்ற உச்சரிப்பை பின்பற்றின. மற்ற ஐரிஸ் டிஸ்டில்லரிகள் பொருந்தும் படி பின்பற்றின. ஐர்ஷின் கடைசி விஸ்கி "whisky" பாடி யாக இருந்தது, 1966 ல் "இ" பின்பற்றின.[8]

"ஸ்காட்ச்" என்பது "ஸ்காட்ச் விஸ்கி" க்கான உலக அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்ட பெயராகும், ஸ்காட்லாந்தில் குறைவாக உபயோகிக்கப்படுகிறது, பிளண்டட் விஸ்கி என்பது " விஸ்கி" என்றும் சிங்கிள் அல்லது வாட்டட் மால்ட் விஸ்கி என்பது " மால்ட்" என்றும் இருந்தது.[33]

சில லடின் - அமெரிக்கன் நாடுகளில் விஸ்கி வீ-ஸ்கீ wee-சகி என்பது புகைப்படகாரர்கள் உபயோகிக்கும் சிரிப்பு , ஆங்கிலத்தில் "சீஸ்" என்று இருந்தது. உருகுயான் பிலிம் விஸ்கி மூலமாக இந்த பெயரை பெற்றது.

வேதியியல்[தொகு]

விஸ்கி மற்றும் மற்ற வடிக்கபட்ட பானங்கள் காக்னாக் மற்றும் ரம் வகை பானங்கள் அதிகப் படியான சுவை மணச்சேர்மங்கள் 200 முதல் 300 வரை உண்டு என்பதை வேதியியல் பகுப்பாயிவின் மூலம் அறியலாம். சுவைமண வேதிப் பொருள்களானது கார்போனைல் மூலங்களையும், ஆல்கஹால், கார்பாலிக் ஆசிட் மற்றும் அதன் எஸ்டர்ஸ், நைட்ரஜன் மற்றும் சல்பர் மூலங்களையும், டானின் மற்றும் பாலிபானலிக் மூலங்களையும், டெர்ப்பைன் மற்றும் ஆக்ஸிஜன் ஹிட்ரோசைக்லிக் மூலங்களையும் மற்றும் பேட்ட்டி ஆஸிட்களின் எஸ்டர்ஸ்களையும் கொண்டதாகும்.[34] நைட்ரஜன் மூலப்பொருள்கள் பைரிடைன்ஸ், பிக்கோலைன்ஸ் மற்றும் பைராசைன்ஸ் ஆகியவற்றை கொண்டது.[35]

வடிகட்டுவதிலிருந்து சுவைமணம்[தொகு]

பியூசல் ஆயில் மற்றும் கான்க்நெர் அளவை பொருத்தே விஸ்கியின் சுவைமணம் உணரப் படுகிறது. எத்தனாலை விட பியூசல் ஆயிலில் ஆல்கஹால் அதிகமாகவும், டாக்சில் ஏற்றுக் கொள்ளாத அளவிற்கு மணமும் சுவையும் இருக்கும். அதிகப் படியான பியூசல் ஆயில் விஸ்கியில் இருந்தால் அது குறையாகும். தேவையற்ற பியூசல் ஆயிலை நீக்க நிறைய வடிகட்டும் முறைகள் இயக்கப் படுகின்றன. காய்ச்சி வடித்த பொருளிலிருந்து தேவையற்ற பொருள்களை நீக்க அமெரிக்கன் டிஸ்டில்லர்ஸ் கரித்துண்டு, கற்கள், மணல், துணி போன்றவற்றை இரண்டாம் கட்ட வடிகட்டுதலை பயன்படுத்துகிறார்கள். நியூட்ரல் கிரைன் ஸ்பிரிட் அல்லது கிரைன் நியூட்ரல் ஸ்பிரிட் என்ற சுத்தமான எத்தனாலை (குறைந்த சுவையுடைய) பிரிக்க கனடியன் டிஸ்டில்லர்ஸ் காலம் ஸ்டில் முறையை உபயோகப் படுத்துகின்றனர்.[36] நியூட்ரல் கிரைன் ஸ்பிரிட்யை சுவைமணமுள்ள விஸ்கிகளுடன் கலந்து சுவைமணம் மீட்டெடுக்கப் படுகிறது.[37]

ஆக்டால் வடிக்கப்ட்ட பானங்களிலிருந்து மீண்டும் மீண்டும் உருவாக்கப் படுகிறது, ஆக்டல்ஹைடைதில் ஆக்டால் இவைகளில் பிரபலமானதாகும். (1,1-டைதோக்சிதானே) இந்த விஸ்கிகள் மால்ட் விஸ்கிகளுடன் அதிக அளவு தொடர்புடையவை.[38] இந்த ஆக்டல் ச்செரிக்கு முக்கியமான சுவை சேர்மமாகும், மற்றும் பழவகையான மணத்தையும் வழங்குகிறது.[39]

வடிக்கப் பட்ட எல்லா பானங்களிலும் பட்டரி சுவை போன்ற டைக்டோன் டையாசிடைல் (2,3-புடனிடையோன்) இருக்கும். பிராண்டிகள் மற்றும் ரம்மை விட குறைவாகவும், வோட்காவை விட அதிகமாகவும், விஸ்கிகள் மற்றும் காக்னாக்ஸ் மாதிரியாக இருக்கும்.[40]

ஓக் சுவைகள்[தொகு]

விஸ்கி லாக்டோன் (3- மீத்தைல்-4 -ஒக்ட்ன்லைட்) எல்லா வகையான கருவாலி மரத்திலும் காணப்படுகிறது. இந்த லாக்டோன் வலிமையான தேங்காய் மணத்தை கொண்டுள்ளது.[41] விஸ்கி லாக்டோன் என்பது க்ர்கஸ் லாக்டோன் என்றும் அறியப் படுகிறது.[42]

கருகிய கருவாலி மரங்களில் பினோலிக் சேர்மம் வணிக ரீதியாக அதிகமாக உள்ளன. ஒரு படிப்பு 40 விதவிதமான பினோலிக் சேர்மத்தைப் பிரிக்கிறது. குமரின் ஸ்கொபோலிடின் விஸ்கியில் உள்ளது, பர்பன் விஸ்கியில் அதிகமாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது.[43]

குறிப்புதவிகள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100301214741/http://ecfr.gpoaccess.gov/cgi/t/text/text-idx?c=ecfr;sid=33fc0c0194b58b6fe95208945b5c637a;rgn=div5;view=text;node=27%3A1.0.1.1.3;idno=27;cc=ecfr#27:1.0.1.1.3.3. 
 2. http://www.whiskeywise.com/whiskey-barrels.html
 3. Ross, James. Whisky. Routledge. பக். 158. ISBN 0-7100-6685-6. 
 4. Russell, Inge (2003). Whisky: technology, production and marketing. Academic Press. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780126692020. 
 5. 5.0 5.1 5.2 homecooking.about.com/od/foodhistory/a/whiskeyhistory.htm
 6. 6.0 6.1 6.2 6.3 6.4 "History of Scotch Whisky". http://whisky.com/history.html. 
 7. 7.0 7.1 7.2 "The History of Whisky". http://www.thewhiskyguide.com/Facts/History.html. 
 8. 8.0 8.1 8.2 Magee, Malachy (2001). Irish Whiskey – A 1000 year tradition. O'Brien press. பக். 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86278-228-3. 
 9. "Standards of Identity for Distilled Spirits, Title 27 Code of Federal Regulations, Pt. 5.22". http://edocket.access.gpo.gov/cfr_2008/aprqtr/pdf/27cfr5.22.pdf. பார்த்த நாள்: 2008-10-17. 
 10. "Food and Drugs Act, Food and Drug Regulations (C.R.C., c. 870)" இம் மூலத்தில் இருந்து 2011-06-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110625074528/http://laws.justice.gc.ca/en/F-27/C.R.C.-c.870/236939.html#Section-B.02.020. பார்த்த நாள்: 2007-01-23. 
 11. ""WITH A DASH OF WATER" Finnish Whisky Culture and its Future" இம் மூலத்தில் இருந்து 2011-07-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110720184840/http://batman.jamk.fi/~voyager/opin/index.php?show=3995. பார்த்த நாள்: 2009-07-22. 
 12. MaClean, Charles (2008). Whiskey. Dorling Kindersley. பக். 254–265. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7566-3349-3. 
 13. Paul Peachey (2006-03-03). "Battle for the world's largest whisky market -- India". South Africa Mail & Guardian இம் மூலத்தில் இருந்து 2008-06-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080601194459/http://www.mg.co.za/articlePage.aspx?articleid=265802&area=%2Fbreaking_news%2Fbreaking_news__business%2F. பார்த்த நாள்: 2007-06-25. 
 14. "Amrut Distilleries". http://www.amrutdistilleries.com/. பார்த்த நாள்: 2007-06-25. 
 15. "Planet Whiskies Lists of Indian Whisky Distilleries". http://www.planetwhiskies.com/distilleries/indian.html. பார்த்த நாள்: 2009-05-19. 
 16. Government of Ireland. "Irish Whiskey Act, 1980" இம் மூலத்தில் இருந்து 2007-03-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070322051933/http://www.irishstatutebook.ie/1980_33.html. பார்த்த நாள்: 2007-02-20. 
 17. "நிக்கா யோச்சி 10 சிங்கிள் காஸ்க் ஸ்கோர்ஸ் ஹெய்யஸ்ட்" இம் மூலத்தில் இருந்து 2009-02-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090221200433/http://nikka.com/eng/singlecask/nscy10.html?scrollbars=yes&resizable=yes&width=800&height=620. 
 18. 2008 வேல்ர்ட் விஸ்கி அவார்ட்ஸ்
 19. Jackson, Michael (1994). Michael Jackson's Malt Whisky Companion. Dorling Kindersley. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7513-0146-9. https://archive.org/details/michaeljacksonsm0000jack_i4e2. 
 20. "ASIL Insight: WTO Protections for Food Geographic Indications". http://www.asil.org/insights/insigh43.htm. பார்த்த நாள்: 2007-08-25. 
 21. "Planet Whiskies Welsh Distillery Section". http://www.planetwhiskies.com/distilleries/welsh.html. பார்த்த நாள்: 2009-05-19. 
 22. (பிரெஞ்சு)டிஸ்டில்லரி டஸ் மென்ஹிர்ஸ்
 23. (பிரெஞ்சு)கல்லியன்
 24. (பிரெஞ்சு)களன் அர் மோர் பரணிடப்பட்டது 2010-04-20 at the வந்தவழி இயந்திரம்
 25. (பிரெஞ்சு)காரிலிஸ் பரணிடப்பட்டது 2010-04-10 at the வந்தவழி இயந்திரம்
 26. (பிரெஞ்சு)வாரென்ஹம்
 27. http://www.corsica-isula.com/gastronomy.htm
 28. மாக்மைரா
 29. "Lenta.ru report (in Russian)". http://lenta.ru/news/2008/04/17/whiskey/. 
 30. "கிங் கார் விஸ்கி டிஸ்டில்லரி" இம் மூலத்தில் இருந்து 2010-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100413103316/http://www.kavalanwhisky.com/en/index.html. 
 31. "செயிண்ட் ஜார்ஜ்ஸ் டிஸ்டில்லரி" இம் மூலத்தில் இருந்து 2015-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328140030/https://www.englishwhisky.co.uk/home.html. 
 32. [217] ^ லாய்டு, ஜெ & மிட்ஜின்சன், ஜெ: "தி புக் ஆஃப் ஜெனரல் இக்னோரன்ஸ்". ஃபேபர் & ஃபேபர், 2006.
 33. "Scotch: Definition, Synonyms and Much More from Answers.com". www.answers.com. http://www.answers.com/topic/scotch-1. பார்த்த நாள்: 2008-06-21. 
 34. Maarse, H. (1991). Volatile Compounds in Foods and Beverages. CRC Press. பக். 548. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0824783905. http://books.google.com/books?id=_OvXjhLUz-oC. 
 35. Belitz, Hans-Dieter; Peter Schieberle & Werner Grosch (2004). Food Chemistry. Springer. பக். 936. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3540408185. http://books.google.com/books?id=_QWbLTSL6HoC. 
 36. "Pure Alcohol (Ethanol)" (pdf) இம் மூலத்தில் இருந்து 2007-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071202093645/http://www.pharmco-prod.com/pages/ep1.pdf. பார்த்த நாள்: 2007-12-18. 
 37. Robert Hess (2007-08-25). "Canadian Whiskey". http://thespiritworld.net/2007/08/25/canadian-whisky/. பார்த்த நாள்: 2007-12-18. 
 38. Maarse, H. (1991). Volatile Compounds in Foods and Beverages. CRC Press. பக். 553. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0824783905. http://books.google.com/books?id=_OvXjhLUz-oC. 
 39. "June 2007". The Beer Brewer இம் மூலத்தில் இருந்து 2007-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071219120702/https://www.beerbrewer.co.uk/2007/06/. பார்த்த நாள்: 2007-12-18. 
 40. Maarse, H. (1991). Volatile Compounds in Foods and Beverages. CRC Press. பக். 554. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0824783905. http://books.google.com/books?id=_OvXjhLUz-oC. 
 41. "Aromas and Flavours". Wine-Pages.com இம் மூலத்தில் இருந்து 2007-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071018025957/http://www.wine-pages.com/guests/tom/taste5.htm. பார்த்த நாள்: 2007-12-18. 
 42. Belitz, Hans-Dieter; Peter Schieberle & Werner Grosch (2004). Food Chemistry. Springer. பக். 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3540408185. http://books.google.com/books?id=_QWbLTSL6HoC. 
 43. Maarse, H. (1991). Volatile Compounds in Foods and Beverages. CRC Press. பக். 574. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0824783905. http://books.google.com/books?id=_OvXjhLUz-oC. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்கி&oldid=3792886" இருந்து மீள்விக்கப்பட்டது