வில்வாத்ரிநாத் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்வாத்ரிநாத் கோயில்

வில்வாத்ரிநாதர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் நகரத்தில் திருவில்வமலையில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . [1] [2] [3] விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் மற்றும் அவரது சகோதரர் லக்ஷ்மணன் ஆகியோர் இங்கு மூமுலவராக உள்ளனர். [4] கேரளாவில் உள்ள நான்கு பெரிய ராமர் கோவில்களில் இதுவும் ஒன்று - மற்ற மூன்று திருப்ராயர், கடவள்ளூர் மற்றும் திருவங்காட்டில் உள்ளன. இந்த கோயிலில் லக்ஷ்மணன் சிலை உள்ளது.அவ்வகையில் இது இந்தியாவில் அரிதான கோயிலாகக் கருதப்படுகிறது.

புதுப்பிக்கப்படல்[தொகு]

இக்கோயில் மூன்று முறை தீக்கிரையானது. முதலில் 1827ஆம் ஆண்டிலும், பின்னர் 1861இல் இரண்டு முறையும் தீ விபத்துக்கு உள்ளானது. இரண்டாவது முறை தீக்கிரையானபோது கோயிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. கிழக்குப்புற கருவறை எந்தவித சேதமும் அடையவில்லை. ஆனால் மூலவர் சிலை அகற்றப்பட்டது. மேற்குப்புறக் கருவறை முழுவதுமாக எரிக்கப்பட்டாலும் சிலை சேதமடையவில்லை. தற்போதைய கோயில் கட்டுமானமானது 1883 ஆம் ஆண்டு கொச்சி மன்னரால் கட்டப்பட்டது.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் திருவில்வமலை கிராமத்தின் நடுவில, கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்தில் உள்ளது. கிழக்குப் பகுதியைத் தவிர எல்லாப் பக்கங்களிலும் ஓரளவு மக்கள் வசிக்கின்றனர். கோயிலின் பிரதான வாயில் மேற்கில் உள்ளது. கோயிலைரச் சென்றடைய 50க்கும் மேற்பட்ட படிகள் உள்ளன. கேரளாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான பாரதப்புழா கோயிலில் இருந்து வடக்குப் பகுதியில் 3 கி.மீ. தொலைவில் பாய்கிறது. மலையின் உச்சியில் கோயில் அமைந்திருப்பதால், கோயிலில் இருந்து ஆற்றை மிகவும் தெளிவாகக் காணமுடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Another Padmanabha temple-like treasure trove in Kerala?". பார்க்கப்பட்ட நாள் 2 October 2013.
  2. "Vilwadrinatha Temple". PampadyDesam. பார்க்கப்பட்ட நாள் 2 October 2013.
  3. "Vilwadrinatha Temple". MustSeeIndia. பார்க்கப்பட்ட நாள் 2 October 2013.
  4. "Thiruvilwamala Vilwadrinatha Temple / Sree Rama Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas". பார்க்கப்பட்ட நாள் 2023-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்வாத்ரிநாத்_கோயில்&oldid=3823268" இலிருந்து மீள்விக்கப்பட்டது