வில்லியம் ஆல்பிரெட் பவுலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லீ பவுலர்
பிறப்புஆகத்து 9, 1911(1911-08-09)
பிட்சுபர்கு, பென்சில்வேனியா
இறப்புமார்ச்சு 14, 1995(1995-03-14) (அகவை 83)
பசதேனா, கலிபோர்னியா
கல்வி கற்ற இடங்கள்கால்டெக் (முனைவர்)
ஆய்வு நெறியாளர்சார்லசு கிறித்தியன் இலவுரித்சன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜே. இரிச்சர்டு பாண்டு, டொனால்டு கிளேட்டன், ஜார்ஜ் எம். பூல்லர், எஃப். கர்டிசு மைக்கேல்
தாக்கம் 
செலுத்தியோர்
பிரெட் ஆயில்
விருதுகள்அறிவியலில் பெருந்த்ண்டு புரிந்ததற்கான பர்னார்டு பதக்கம் (1965)
டாம் டபுல்யூ. பானர் பரிசு, அணுக்கரு இயற்பியல் (1970)
வெத்லெசன் பரிசு (1973)
தேசிய அறிவியல் பதக்கம் (1974)
எடிங்டன் பதக்கம் (1978)
இயற்பியலில் நோபல் பரிசு (1983)

வில்லியம் ஆல்பிரெட் வில்லீ பவுலர் (William Alfred "Willie" Fowler) (/ˈflər/; ஆகத்து 9, 1911- மார்ச்சு 14, 1995) ஓர் அமெரிக்க அணுக்கரு இயற்பியலாலரும் வானியற்பியலாளரும் ஆவார். இவரும் சுப்பிரமணியன் சந்திரசேகரும் 1983 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.

வாழ்க்கை[தொகு]

பவுலர் பென்சில்வேனியாவில் உள்ள பிட்சுபர்கில் பிறந்தார். இவரது இரண்டாம் அகவையில் குடும்பத்தோடு ஓகியாவில் உள்ள இலிமாவுக்குச் சென்றார். இது ஒரு நீராவித் தொடர்வண்டி நகரம் ஆகும்.இவர் ஓகியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அப்போது இவர் டௌ கப்பா எப்சிலான் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் அணுக்கரு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் நீராவிப் பொறி இயங்கிகளில் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருந்தார். பல நீராவிப் பொறி இயங்கிகளை பல அளவுகளில் தன்னிடம் வைத்திருந்தார். அவற்றில் ஒன்று இங்கே காட்டப்பட்டுள்ளது.[1] இவர் கலிபோர்னியாவில் உள்ள பசதேனாவில் இறந்தார்.

வெளியீடுகள்[தொகு]

நினைவேந்தல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]