வில்பிரட் ரோட்ஸ்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | வில்பிரட் ரோட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 0 அங் (1.83 m) | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com, ஆகத்து 17 2007 |
வில்பிரட் ரோட்ஸ் (Wilfred Rhodes, பிறப்பு: அக்டோபர் 29 1877, இறப்பு: சூலை 8 1973), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 58 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 1,110 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1889 - 1930 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ரோட்ஸ் 1877 ஆம் ஆண்டில் அட்டர்சுபீல்டு ,கிர்கீட்டன் கிராமத்தில் பிறந்தார். இவர் இளமையாக இருந்தபோது இவரது குடும்பம் இரண்டு மைல் தொலைவில் உள்ள ஒரு பண்ணைக்கு குடிபெயர்ந்தது. [1] இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஹாப்டன் பள்ளியிலும், பின்னர் ஹடர்ஸ்ஃபீல்டில் ஸ்பிரிங் க்ரோவ் பள்ளியிலும் பயின்றார். இவரது தந்தை, ஆல்ஃபிரட் ரோட்ஸ், கிர்கீட்டன் துடுப்பாட்ட அணியின் இரண்டாம் லெவன் அணியின் தலைவராக இருந்தார். மேலும் தனது மகனை துடுப்பாட்டம் விளையாட ஊக்குவித்தார்.[1] [2] ரோட்ஸ் 16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறிய நேரத்தில், இவர் கிர்கீட்டன் துடுப்பாட்ட சங்கத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் துடுப்பாட்ட வாழ்க்கையினை சிரத்தையாக விளையாடத் துவங்கினார்.1893 ஆம் ஆண்டில் இவர் உள்ளூர் நகரமான மிர்ஃபீல்டில் ரயில்வேயில் வேலை பார்த்தார். [3] அந்த சமயத்தில் இவர் கிர்கீட்டன் துடுப்பாட்ட அணிக்காக அதிக நேரம் விளையாடினார். இதன் விளைவாக இவர் தனது வேலையை இழந்தார். அதைத் தொடர்ந்து, இவர் ஒரு உள்ளூர் பண்ணையில் பணிபுரிந்தார். அப்போது இவருக்கு துடுப்பாட்டம் விளையாடுவதற்கு அதிக நேரம் கிடைத்தது. 1895 ஆம் ஆண்டில் இவர் கிர்கீட்டன் துடுப்பாட்ட அணியின் முதல் லெவன் அணியில் இடம்பெற்றார். மேலும் ஸ்காட்லாந்தின் கலாஷீல்ஸின் காலா துடுப்பாட்ட சங்க அணிக்காக இவர் தொழில்முறைத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். [4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]1936 ஆம் ஆண்டிலிருந்து ரோட்ஸின் கண் பார்வை குறையத் தொடங்கியது, 1939 ஆம் ஆண்டில் போர் வெடித்தபோது பணியில் ஈடுபட முடியவில்லை. [5] இறுதியில் இவருக்கு கண் அழுத்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அது இறுதிக் கட்டத்தில் அதனைக் கண்டறிந்ததனால் எதுவும் செய்ய முடியவில்லை. [6] ரோட்சினால் துடுப்பாட்டத்தினைப் பார்ப்பது, கோல்ஃப் விளையாடுவது ஆகிய அளவிற்கு மட்டுமே பார்க்க முடிந்தது. 1946 ஆம் ஆண்டில் இவரால் ஒரு செய்தித்தாளைப் படிக்க இயலாமல் போனது. மற்றொரு நிபுணருடன் கலந்தாலோசித்து பின் 1951 ஆம் ஆண்டில் ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் 1952 ஆம் ஆண்டில் ரோட்ஸ் முற்றிலும் பார்வையற்றவராக இருந்தார். இதனால் ஏற்பட்ட வலியானது 1958 ஆம் ஆண்டில் இவரது இடது கண் பார்வையை அகற்ற வேண்டியாதாகியது. [7]
1950 ஆம் ஆண்டில், சாரா ரோட்ஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.1954 ஆம் ஆண்டில் தனது 80 வது பிறந்தநாளுக்கு சில மாதங்களுக்கு முன்பு இவர் இறந்தார். பின்னர், மார்ஷில் உள்ள தனது வீட்டை விற்று தனது மகள் மற்றும் இவரது கணவருடன் சென்றார். பின்னர் இவர் போர்ன்மவுத் சென்றார். [8] குருட்டுத்தன்மை இருந்தபோதிலும் இவர் தொடர்ந்து துடுப்பாட்ட போட்டிகளில் கலந்துகொண்டார், [9] ரோட்ஸுக்கு 1946 ஆம் ஆண்டில் யார்க்ஷயரின் கெளரவ நிரந்தர உறுப்பினர் மற்றும் 1949 ஆம் ஆண்டில் எம்.சி.சியின் நிரந்த உறுப்பினருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. [10] இவர் 1973 இல், 95 வயதில் இறந்தார். [9]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Rogerson, p. 31.
- ↑ Thomson, p. 100.
- ↑ Rogerson, p. 32.
- ↑ Rogerson, p. 34.
- ↑ Rogerson, pp. 168–9.
- ↑ Rogerson, p. 169.
- ↑ Rogerson, pp. 170–1.
- ↑ Rogerson, pp. 170–2.
- ↑ 9.0 9.1 Cardus, Sir Neville (1974). "Wilfred Rhodes – Yorkshire personified (Wisden obituary)". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. பார்க்கப்பட்ட நாள் 9 November 2009.
- ↑ Rogerson, pp. 171–2.