அட்டர்சுபீல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்டர்சுபீல்டு

காசில் ஹில்லில் இருந்து அட்டர்சுபீல்டு நகரின் காட்சி
மக்கட்தொகை 1,46,234 (2001 கணக்கெடுப்பின்படி)
OS grid reference SE145165
Metropolitan borough கிர்க்லீசு
Metropolitan county மேற்கு யார்க்சையர்
வட்டாரம்
நாடு இங்கிலாந்து
இறையாண்மையுள்ள நாடு ஐக்கிய இராச்சியம்
அஞ்சல் நகரம் HUDDERSFIELD
அஞ்சல் மாவட்டம் HD1-5, HD7-8
தொலைபேசிக் குறியீடு 01484
காவல்துறை
தீயணைப்பு  
மருத்துவ அவசர ஊர்தி  
ஐரோப்பிய நாடாளுமன்றம்
ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் அட்டர்சுபீல்டு
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம்

அட்டர்சுபீல்டு (Huddersfield, /ˈhʌdərzˌfld/ (கேட்க)) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள கிர்க்லீசு பெருநகர பரோவில் உள்ளடங்கிய ஓர் சந்தைப் பட்டிணம் ஆகும். இது லீட்சிற்கும் மான்செசுடருக்கும் இடையே பாதி தொலைவில் உள்ளது. இலண்டனில் இருந்து வடக்கே 190 மைல்கள் (310 km) தொலைவிலும் பிராட்போர்டில் இருந்து தெற்கே 10.3 மைல்கள் (16.6 km) தொலைவிலும் அமைந்துள்ளது. கிர்க்லீசு பெருநகர பரோவின் நிர்வாக மையங்கள் இங்குதான் உள்ளன.[1][2][3]

கோல்ன் ஆறும் ஹோல்ம் ஆறும் சங்கமிக்கும் இடத்திற்கருகே அட்டர்சுபீல்டு நகரம் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 146,234 ஆகும். தொழிற் புரட்சியின்போது இநகர் ஆற்றிய பங்கிற்காகவும் இரக்பி லீக் ஆட்டம் பிறந்த இடம் என்பதற்காகவும் முன்னாள் பிரதமர் ஹெரால்டு வில்சன் என்பதற்காகவும் பரவலாக அறியப்படுகிறது.

விளையாட்டுக்களில் அட்டர்சுபீல்டு பெயர் பெற்றது. இரக்பி லீக் அணி அட்டர்சுபீல்டு ஜெயண்ட்சு 1895இல் உருவான பழமையான அணியாகும். இங்கு அட்டர்சுபீல்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள கட்டிடங்கள் விக்டோரியா காலத்து வடுவமைப்பைச் சார்ந்தவை. இங்குள்ள தொடர்வண்டி நிலையக் கட்டிடம் மிகவும் அழகானது. இது ஐரோப்பிய கட்டிடக்கலைக்கான யூரோப்பா நோஸ்த்ரா விருது பெற்றுள்ளது.

செயின்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் உள்ள அட்டர்சுபீல்டு தொடர்வண்டி நிலையம்

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Huddersfield
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டர்சுபீல்டு&oldid=3752069" இலிருந்து மீள்விக்கப்பட்டது