விட்னி ஊசுட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விட்னி ஊசுட்டன்
Flickr Whitney Houston performing on GMA 2009 4.jpg
செப்டம்பர் 1, 2009இல் நியூயார்க்கின் மையப்பூங்காவில் குட் மார்னிங் அமெரிக்கா தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக விட்னி பாடுகிறார்.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்விட்னி எலிசபெத் ஹூஸ்டன்
பிறப்புஆகத்து 9, 1963(1963-08-09)
நுவார்க், நியூ ஜெர்சி, அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 11, 2012(2012-02-11) (அகவை 48)
பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
இசை வடிவங்கள்பாப், ஆர்&பி, ஆன்மா, நடனம், நற்செய்தி
தொழில்(கள்)பாடகர், நடிகை, நடைமேடை அழகி, திரைப்படத் தயாரிப்பாளர்,[1] இசைவட்டு தயாரிப்பாளர்,[2] பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, பியானோ
இசைத்துறையில்1977–2012
வெளியீட்டு நிறுவனங்கள்அரிஸ்டா, ஆர்சிஏ
இணைந்த செயற்பாடுகள்சிஸ்ஸி ஹூஸ்டன், டியோன் வார்விக், அரெதா பிராங்க்ளின், ஜெர்மைன் ஜாக்சன், மரியா கேரி, என்ரிக் இக்லெசியாஸ், பாபி பிரௌன்
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

விட்னி எலிசபெத் ஊசுட்டன் (விட்னி எலிசபெத் ஹூஸ்டன், Whitney Elizabeth Houston, ஆகத்து 9, 1963 – பெப்ரவரி 11, 2012) ஓர் அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையும் நடைமேடை அழகியும் ஆவார். இவர் இசைவட்டுத் தயாரிப்பிலும் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்றிருந்தார். எக்காலத்திற்குமான மிகுந்த விருதுகள் பெற்ற பெண் கலைஞராக 2009ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற்றிருந்தார்.[3] விட்னி ஊசுட்டன் இரு எம்மி விருதுகளையும் ஆறு கிராமி விருதுகளையும் 30 பில்போர்டு இசை விருதுகளையும் 22 அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். 2010ஆம் ஆண்டுவரை தமது வாழ்நாளில் மொத்தம் 415 விருதுகள் பெற்றார். இசைத்தொகுப்புகள், தனிப்பாடல்கள் மற்றும் ஒளிதங்களாக 170 மில்லியன் விற்றுள்ள ஊசுட்டன் உலகில் மிகவும் கூடுதலாக விற்கப்படும் இசைக்கலைஞர்களில் ஒருவராகவும் விளங்கினார்.[4][5]

விட்னி ஊசுட்டன் அவரது அழகான, கம்பீரமான குரலுக்காக அறியப்பட்டார். அவரது ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ, ஐ வான்ன டான்ஸ் வித் சம்படி(ஹூ லவ்ஸ் மி) போன்ற பாடல்கள் பரவலாக அறியப்பட்டவை. அமெரிக்க நாட்டுப்பண்ணாகிய த ஸ்டார் ஸ்பாங்கிள்டு பானரை அவரது பாணியில் பாடி தனிப்பாடலாக விற்பனை வரைபடங்களில் உச்சத்தை எட்டினார்.[6] இவரது இசைத்தொகுப்புகள் த பாடிகார்டு, விட்னி ஹூஸ்டன், விட்னி என்பன விற்பனையில் சாதனை படைத்தவை.

இவர் "த பொடி கார்ட்", "வெயிட்டிங் டு எக்சேல்", த பிரீச்சர்ஸ் வைஃப், 1997 இல் வெளிவந்த ""சின்ட்ரெல்லா" ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 2012 இல் வெளிவரவிருக்கும் "ஸ்பார்க்கிள்" என்ற படத்திலும் நடித்திருந்தார்.

அவரது மரணத்திற்கு முந்தைய சில ஆண்டுகளாக போதைமருந்துப் பழக்கத்தி்ற்கு ஆளாகியிருந்தார். பெப்ரவரி 11, 2012 அன்று கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் பெவர்லி ஹில்டன் ஓட்டலில் அறியப்படாத காரணங்களால் மரணமடைந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Whitney Houston". Filmbug. January 1, 2000. January 2, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "WHITNEY – The Producer". Whitney-Info.Com. பிப்ரவரி 15, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 2, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Whitney Houston biography". whitneyhouston.com. August 19, 2009. பிப்ரவரி 11, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 22, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  4. Dobuzinskis, Alex (September 15, 2009). "Whitney Houston, as of 2009, said she was "drug-free"". Reuters. http://www.reuters.com/article/entertainmentNews/idUSTRE58D4Y020090915. பார்த்த நாள்: January 13, 2010. 
  5. "Whitney Houston Biography". whitneyhouston.com. January 12, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Artist Chart History - Whitney Houston". billboard.com. 2009-02-06 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2009-04-22 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Whitney Houston, 48, found dead in Beverly Hills". Los Angeles Times. February 11, 2012. http://latimesblogs.latimes.com/lanow/2012/02/whitney-houston-dead-beverly-hills.html. பார்த்த நாள்: February 11, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்னி_ஊசுட்டன்&oldid=3575914" இருந்து மீள்விக்கப்பட்டது