உள்ளடக்கத்துக்குச் செல்

விஞ்சமுரி வெங்கட லட்சுமி நரசிம்ம ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஞ்சமுரி வெங்கட லட்சுமி நரசிம்ம ராவ் (Vinjamuri Venkata Lakshmi Narasimha Rao; பிறப்பு 1887, இறந்த தேதி தெரியவில்லை) ஒரு இந்திய மேடை நடிகரும், தெலுங்கு-சமசுகிருத பண்டிதரும், எழுத்தாளருமாவார்.

பிதாபுரத்த படித்த இவர் மேடை நடிப்பில் ஈர்க்கப்பட்டார். மேலும் தனது 10 வயதில் வில்லியம் சேக்சுபியரின் மெர்ச்சன்ட் ஆப் வெனிஸ் என்ற நாடகத்தில் கிரேசியானா பாத்திரத்தில் நடித்தார். 1913ல் 'காக்கிநாடா அமெச்சூர்ஸ்' என்ற நாடக நிறுவனத்தில் சேர்ந்து கயோபாக்யானத்தில் கயா வேடத்தில் நடித்தார். அதே நாடகத்தின் நாடகப் போட்டிகளில் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவிடம் முதல் பரிசு பெற்றார். பாண்டவ விஜயத்தில் தர்மராஜாவாக நடித்தார். தர்மாவரம் சித்ரநளிநேயத்தில் பாகுகா பாத்திரம் இவருக்கு மிகவும் பிடித்தது. 1918 இல் விக்டோரியா பொது மண்டபத்தில் ராசபுத்திர விஜயம், பிரதாருத்ரியம், சாரங்கதாரா போன்ற நாடகங்களில் தோன்றினார்..

குடும்பம்[தொகு]

பெண் எழுத்தாளர்கள் மற்றும் அஜந்தா பாணி விளக்கப்படங்களைக் கொண்ட அனுசூயா என்ற தெலுங்கில் முதல் பெண்கள் இதழைத் தொடங்கி பதிப்பித்த வெங்கடரத்னம்மாவை இவர் மணந்தார். தங்களின் மகளுக்கு அந்தப் பத்திரிகையின் பெயரையேச் சூட்டினர். இவருக்கு வின்ஜமுரி சீதாதேவி மற்றும் வின்ஜமுரி அனுசுயா தேவி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பெண்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை மொழிகளைக் கற்கவும் இலக்கியம் படிக்கவும் ஊக்குவித்தார். [1]தெலுங்கு எழுத்தாளர் தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரி இவருடைய மருமகனாவார்.

1967 இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.

சான்றுகள்[தொகு]

  • Luminaries of 20th Century, Potti Sreeramulu, Telugu University, 2005.
  • Encyclopaedia Indica, Volume 2, Jagdish Saran Sharma, S. Chand, 1981


  1. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/anasuya-devi-used-music-as-a-tool-to-spread-social-equality/article26628293.ece