வின்ஜமுரி அனுசுயா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்ஜமுரி அனுசுயா தேவி
பிறப்பு(1920-05-12)12 மே 1920
கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா
இறப்பு23 மார்ச்சு 2019(2019-03-23) (அகவை 98)
தேசியம்இந்தியர்
பணிபாடகர், ஆர்மோனிய இசைக் கலைஞர், இசையமைப்பாளர்

வின்ஜமுரி அனுசுயா தேவி (மே 12, 1920 - மார்ச் 23, 2019) ஒரு தெலுங்கு பாடகர், ஆர்மோனிய இசைக் கலைஞரும், இசை அமைப்பாளரும், எழுத்தாளரும் ஆவார். [1] [2] [3] நாட்டுப்புற இசை மற்றும் பாடல்களுக்காக இவர் புகழ்பெற்றவர்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

இவர் இந்திய மேடை நடிகரும், தெலுங்கு-சமஸ்கிருத பண்டிதரும், ஆசிரியருமான விஞ்சமுரி வெங்கட லட்சுமி நரசிம்ம ராவ் என்பாரது மகள். [2] தெலுங்கு பாடகியான வின்ஜாமுரி சீதாதேவி இவரது சகோதரியாவார். [4] சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் முன்னிலையில் இவர் இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார். [5]

இவரது இரண்டு புத்தகங்களான 'பாவ கீதலு' மற்றும் 'நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு' சென்னையில் வெளியிடப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் ஆந்திர பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. அமெரிக்காவிலிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும், பாரிஸிலிருந்து நாட்டுபுறக் கலைகளின் ராணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Queen of folk music - HYDB". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.
  2. 2.0 2.1 "With many firsts to her credit - MADS". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.
  3. "Space across new horizons - MADS". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.
  4. Srihari, Gudipoodi "An Era of Light Music", தி இந்து June 11, 2018
  5. Mayabrahma, Roja (2019-03-24). "KCR condoles death of radio commentator Dr Vinjamuri Anasuya Devi". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  6. "KCR condoles Anasuya Devi's demise". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்ஜமுரி_அனுசுயா_தேவி&oldid=3790867" இலிருந்து மீள்விக்கப்பட்டது