உள்ளடக்கத்துக்குச் செல்

பிதாபுரம்

ஆள்கூறுகள்: 17°07′00″N 82°16′00″E / 17.1167°N 82.2667°E / 17.1167; 82.2667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிதாபுரம்
மேல் இடமிருந்து கடிகார திசையில்: குக்குடேசுவரர் மற்றும் படகயா கோயில் வளாகம், பிதாபுரம் தொடருந்து நிலையம், பிதாபுரம் தொடருந்து நிலையம் வழியாக செல்லும் ரத்னாச்சல் விரைவுவண்டி , பிதாபுரத்திற்கு அருகிலுள்ள வயல்வெளிகள், பிதாபுரத்தில் இயற்கைக் காட்சி, குந்தி மாதவசுவாமி கோயில்
மேல் இடமிருந்து கடிகார திசையில்: குக்குடேசுவரர் மற்றும் படகயா கோயில் வளாகம், பிதாபுரம் தொடருந்து நிலையம், பிதாபுரம் தொடருந்து நிலையம் வழியாக செல்லும் ரத்னாச்சல் விரைவுவண்டி , பிதாபுரத்திற்கு அருகிலுள்ள வயல்வெளிகள், பிதாபுரத்தில் இயற்கைக் காட்சி, குந்தி மாதவசுவாமி கோயில்
பிதாபுரம் is located in ஆந்திரப் பிரதேசம்
பிதாபுரம்
பிதாபுரம்
ஆந்திராவில் பிதாபுரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°07′00″N 82°16′00″E / 17.1167°N 82.2667°E / 17.1167; 82.2667
அரசு
 • சட்டப் பேரவை உறுப்பினர்பெண்டம் தோரபாபு[1]
பரப்பளவு
 • மொத்தம்41.13 km2 (15.88 sq mi)
ஏற்றம்
10 m (30 ft)
மக்கள்தொகை
 (2011)[3]
 • மொத்தம்52,360
 • அடர்த்தி1,300/km2 (3,300/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இந்திய அனுமதி இலக்கத்தகடுகள்ஏபி05(முன்னர்)
ஏபி39 (2019 சனவரி 30 முதல்)[4]

பிதாபுரம் அல்லது பீட்டிகா புரம் என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியுமாகும். இந்த நகரம் கோதாவரி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஒரு பகுதியாகும். கோயில் நகரமான இது ஐம்பத்தைந்து சக்தி பீடங்களில் ஒன்றாகும். [5]

பிதாபுரத்தில் வசித்து வந்த சிறீபாத சிறீவல்லபர் அவரது பக்தர்களால் தத்தாத்ரேயரின் அவதாரம் என்று நம்பப்படுகிறார் . [6] கலி யுகத்தில் தத்தாத்ரேய தெய்வத்தின் முதல் முழுமையான அவதாரங்களில் ஒன்றாக இவர் கருதப்படுகிறார்.[7]

வரலாறு

[தொகு]

பிதாபுரம் முதலில் பிட்டபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 4ஆம் நூற்றாண்டின் மன்னர் சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு இந்த நகரத்தைக் குறிப்பிடுவதற்கான ஆரம்பகால கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டு பிஷ்டபுர மன்னர் மகேந்திரனை தோற்கடித்ததாகக் கூறுகிறது.[8] 4 ஆம் மற்றும் 5 ஆம் நூற்றாண்டின் வசிட்டர் மற்றும் மத்தறை வம்சங்களின் கல்வெட்டுகளும் பிட்டபுராவைக் குறிப்பிடுகின்றன. இது கலிங்கத்தின் ஒரு பகுதியாக விவரிக்கிறது.[8][9] 7 ஆம் நூற்றாண்டில், சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி பிஷ்டபுரத்தை தனது இராச்சியத்துடன் இணைத்துள்ளார்.[8] பின்னர், வெங்கி சாளுக்கியர்களின் நிர்வாகப் பிரிவான ராஷ்டிரங்களில் ஒன்றாக பிதாபுரம் இருந்தது.[10] பிதாபுரம் சாளுக்கியர்கள் என்று அழைக்கப்படும் சாளுக்கியர்களின் இணை கிளைகளில் ஒன்று, 12 - 13 ஆம் நூற்றாண்டுகளில் ராஜமன்றி, பிதாபுரம் , திரக்சாரமம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதியை ஆட்சி செய்தது.[11]

இந்த நகரம் புருஹிதிகா தேவி கோவிலை கொண்டுள்ளது. இது 18 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

நிலவியல்

[தொகு]

பிதாபுரம் 17.1167 ° N 82.2667 கிழக்கில் அமைந்துள்ளது. இது சராசரியாக 10 மீட்டர் (33 அடி) உயரத்தில் உள்ளது. இது பல கடற்கரைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இது காக்கிநாடா, ராஜமன்றி ஆகிய 2 முக்கிய நகரங்களுக்கு இடையில் உள்ளது. பொதுவாக பிதாபுரம் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. அதன் பொருளாதார நடவடிக்கைகள் பெரும்பாலானவை காக்கிநாடாவில் நடைபெறுகின்றன. பிதாபுரம் சி.பி.எம். கிறிஸ்தவ மருத்துவ மையமானது மறைபணி மருத்துவர் டாக்டர் ஈ. சுமித் அவர்களால் தொடங்கப்பட்டது.

புள்ளி விவரங்கள்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 52,360 பேர் ஆகும். மொத்த மக்கள் தொகை 0–6 வயதுக்குட்பட்ட 25,891 ஆண்கள், 26,469 பெண்கள் மற்றும் 5,116 குழந்தைகள். சராசரி கல்வியறிவு விகிதம் 75.00% ஆக உள்ளது. இது 35,434 கல்வியறிவு கொண்டது. இது தேசிய சராசரியான 73.00% ஐ விட அதிகமாகும்.[3][12]

போக்குவரத்து

[தொகு]

பிதாபுரம் நகரம் தேசிய நெடுஞ்சாலை 216இல் அமைந்துள்ளது. பிதாபுரம் தொடருந்து நிலையம் ஹவுரா-சென்னை பிரதான பாதையின் துவாடா-விஜயவாடா பிரிவில் அமைந்துள்ளது. ராஜமன்றி வானூர்தி நிலையம் பிதாபுரத்திலிருந்து 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. [13]

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]
  • குச்சிமாஞ்சி சகோதரர்கள்
  • தேவலப்பள்ளி கிருஷ்ணசாத்திரி
  • அவந்த்ச சோமசுந்தர்
  • மாசிலாமணி
  • மொக்கபதி நரசிம்ம சாத்திரி
  • இரியாலி பிரசாத்
  • புராணம் சுப்ரமண்ய சர்மா
  • உமராலிசா
  • பாலந்திரபு ரஜனிகாந்தராவ்
  • வெங்கட பர்வதீசா கவ்லு
  • வெங்கட ராமகிருஷ்ணா கவ்லு

குறிப்புகள்

[தொகு]
  1. "MP, MLA participate incockfight at Pithapuram". The Hindu. 11 January 2018. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/mp-mla-participate-in-cockfight-at-pithapuram/article22423535.ece. 
  2. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. Retrieved 28 January 2016.
  3. 3.0 3.1 "Census 2011". The Registrar General & Census Commissioner, India. Retrieved 24 August 2014.
  4. "New 'AP 39' code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190728113337/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html. 
  5. "Constitution of Godavari Urban Development Authority with headquarters at Godavari" (PDF). Municipal Administration and Urban Development Department. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 18 January 2017. Retrieved 9 November 2016.
  6. http://www.sreedattavaibhavam.org/sree-pada-sree-vallabha
  7. "SripadaSrivallabha Mahasamstanam Pithapuram". www.sripadasrivallabhamahasamsthanam.com. Archived from the original on 2022-10-30. Retrieved 2021-12-05.
  8. 8.0 8.1 8.2 Ashvini Agrawal (1989). Rise and Fall of the Imperial Guptas. Motilal Banarsidass. p. 109. ISBN 978-81-208-0592-7.
  9. S. Sankaranarayanan (1977). The Vishṇukuṇḍis and Their Times: An Epigraphical Study. Agam Prakashan. p. 51.
  10. "Role of Chalukyas of Vengi and its Polity During Post-Gupta Period". History Discussion (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-07-31. Retrieved 2020-10-04.
  11. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/144085/8/08_chapter%202.pdf. {{cite web}}: Missing or empty |title= (help)
  12. "Chapter–3 (Literates and Literacy rate)" (PDF). Registrar General and Census Commissioner of India. Retrieved 24 August 2014.
  13. "Vijayawada Division – A Profile" (PDF). South Central Railway. Archived from the original (PDF) on 28 January 2016. Retrieved 19 January 2016.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிதாபுரம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிதாபுரம்&oldid=3714766" இலிருந்து மீள்விக்கப்பட்டது