தேவுலப்பள்ளி கிருஷ்ணசாத்திரி
தேவுலப்பள்ளி கிருஷ்ணசாத்திரி | |
---|---|
பிறப்பு | தேவுலபள்ளி வெங்கட கிருஷ்ணசாஸ்திரி 1 நவம்பர் 1897 இராமச்சந்திராபாலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 24 பெப்ரவரி 1980 இந்தியா | (அகவை 82)
வகை | பாடலாசிரியர், கவிஞர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கிருஷ்ண பட்சமு |
தேவுலபள்ளி வெங்கட கிருஷ்ணசாஸ்திரி (Devulapalli Venkata Krishnasastri; 1 நவம்பர் 1897 - 24 பிப்ரவரி 1980) ஓர் தெலுங்குக் கவிஞரும், நாடகாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.[1] இவர் ஆந்திராவின் செல்லி என்று அழைக்கப்படுகிறார்.[2] 1976ஆம் ஆண்டில், கிருஷ்ணசாத்திரி இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்களின் விருதான பத்ம பூசண் விருது பெற்றார். 1978 ஆம் ஆண்டில், இவர் தனது இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.[3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கிருஷ்ணசாத்திரி 1897ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள இராமச்சந்திரபாலத்தில் பிறந்தார். இவர் பிதாபுரத்தில் அரசவைக் கவிஞர்களின் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.[2] இவருக்கு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் அதிகரித்தது.
தொழில்
[தொகு]இவர் சிறு வயதிலிருந்தே கவிதை எழுதத் தொடங்கினார். 1929இல் சாந்திநிகேதனில் இரவீந்திரநாத் தாகூரை சந்தித்த பிறகு இவரது படைப்புகள் கணிசமாக மாறியது. 1945 ஆம் ஆண்டு அனைத்திந்திய வானொலியில் சேர்ந்த இவர் அதற்காக பல நாடகங்களை எழுதினார்.
இவர் திருப்பாவையை தெலுங்கில் கீர்த்தனைகளாக மொழிபெயர்த்தார். திருப்பாவையின் பிற மொழிபெயர்ப்புகளும் உள்ளன - ஆனால் அவை அனைத்தும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாசுரத்தின் மையக்கருத்தையும் எடுத்து, பல்லவியாக ஆக்கி, அதைச் சுற்றி மீதியுள்ள பாசுரத்தை அனுபல்லவியாகவும், சரணங்களாகவும் இழைத்திருப்பதால், இவரது மொழியாக்கம் தனித்துவம் வாய்ந்தது. அவை அம்ருதவல்லி சுந்தரம் என்பவரால் இயற்றப்பட்டு, கருநாடக இசையில் மெட்டமைக்கப்பட்டன. ஓரியண்ட் லாங்மேன் என்ற வெளியீட்டு நிறுவனம் இதை வெளியிட்டது.[4]
இறப்பு
[தொகு]இவர் பிப்ரவரி 1980 24 அன்று இறந்தார்.[5]
திரைப்படங்கள்
[தொகு]கிருஷ்ணசாத்திரி 1951 ஆம் ஆண்டு வெளியான மல்லீஸ்வரி என்ற தெலுங்குத் திரைப்படத்திற்கு உரையாடல்களை எழுதி திரையுலகில் நுழைந்தார். 1950 முதல் 1970 வரை 70க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 160 பாடல்களை எழுதியுள்ளார்.[6] மல்லேஸ்வரி, நா இல்லு, என் வீடு, பங்காரு பாப்பா, ஏகவீரா, பாக்ய ரேகா (1957 ), ரத்த கண்ணீரு, பக்த துக்காராம், கார்த்திகை தீபம், கோரிண்டாகு, மேக சந்தேசம், ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஆகியவை இதில் அடங்கும் .
விருதுகள்
[தொகு]- சிறந்த பாடலாசிரியர் - சீதாமாலட்சுமி (1978)
- சிறந்த பாடலாசிரியர் - மேகசந்தேசம் (1982)
- மற்ற விருதுகள்
- ஆந்திரப் பல்கலைக்கழகம் 1975 இல் இவருக்கு கலா பிரபூர்ணா (முழுமையான கலைஞர்) என்ற பட்டத்தை வழங்கியது.
- இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
- 1976இல் பத்ம பூசண் விருது பெற்றார்.[8]
சான்றுகள்
[தொகு]- ↑ "Archive News". தி இந்து. 2008-04-11. Archived from the original on 2008-06-01. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ 2.0 2.1 Krishnasastri பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "కవితాలోకాన కల్పవల్లి.. దేవులపల్లి". Zee News Telugu (in தெலுங்கு). 2017-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-04-29.
- ↑ "Display Books of this Author". Avkf.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "మన షెల్లీ దేవులపల్లి" (in te). Mana Telangana. 1 November 201y இம் மூலத்தில் இருந்து 2021-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211205114726/https://www.manatelangana.news/telugu-story-about-telugu-poet-devulapalli-krishnasastri/.
- ↑ Vendithera Patalu, Krishnasastri Sahityam, Volume 3, Vishalandhra Publishing House, Hyderabad, 2008
- ↑ "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.(in Telugu)
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் தேவுலப்பள்ளி கிருஷ்ணசாத்திரி
- Krishnasastriyam பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம் is a novel musical interpretation of some songs written by Sri Krishnasastri. Excerpts available at the linked site.
- யூடியூபில் 'Nava Sahiti Sourabhalu - Devulapalli Krishna Sastri' telecasted on Maa TV.