விசுவகர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:51, 14 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2034530 Kanags (talk) உடையது. (மின்))
விசுவகர்மன்

விசுவகர்மன் என்பவர் தேவலோகத்தின் சிற்பி ஆவார். இவர் தேவதச்சன், தேவசிற்பி என்றும் அறியப்படுகிறார்.

உருவாக்கிய ஆயுதங்கள்

  • கதாயுதம் - கதன் எனும் அசுரனை திருமால் கொன்றார். அவனுடைய எலும்பிலிருந்து கதாயுதம் என்பதை விசுவகர்மா செய்து தந்தார் என அக்கினி புராணம் கூறுகிறது.[1]
  • சிவபெருமானுக்காக திரிசூலம், திருமாலுக்காக சக்ராயுதம், முருகனுக்காக வேல், குபேரனுக்காக சிவிகை ஆகிய ஆயுதங்களை விசுவகர்மா உருவாக்கி தந்தாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.[2]

உருவாக்கிய இடங்கள்

  • பிருந்தாவனத்தில் வீடுகளையும், இந்திரனுக்காக அமராவதி நகரை புதுப்பித்ததாகவும் பிரம்ம புராணம் கூறுகிறது.[3]

இல்லறம்

இவருக்கு சமுக்யா தேவி என்றொரு புதல்வி உண்டு. அவளை சூரிய தேவனுக்கு மணம் செய்வித்தார் விசுவகர்மா. ஆனால் சூரியனின் வெப்பத்தினை தாங்க இயலாமல் சாயா தேவி என்றொரு பெண்ணை தன்னுடைய நிழலிருந்து உருவாக்கி சூரியனுடன் இருக்குமாறு கூறி விசுவகர்மாவிடம் வந்துவிட்டாள். அவளுக்கு விசுவகர்மா கணவனுடன் இணைந்து வாழ அறிவுரை கூறினார். அதனால் சூரிய தேவனை அடைய மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டாள். தன்னுடன் இருப்பது சமுக்யா இல்லை என்பதை உணர்ந்த சூரிய தேவன் விசுவகர்மாவிடம் கேட்டு மாந்துறை வந்தடைந்தார். தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.[4]

இவர் சிவபெருமானுக்கு பிங்களம் எனும் வில்லினையும், திருமாலுக்கு சாரங்கம் எனும் வில்லையும், இந்திரனுக்கு ததிசி முனிவரின் முதுகெழும்பிலிருந்து வஜ்ராயுதத்தினையும் செய்துதந்தார். பிரம்மாவின் படைப்பு தொழிலுக்கு உதவியாக பதினான்கு உலகங்களையும் (லோகங்களையும்) வடிவமைத்தவர்.

சிவன் பார்வதி திருமணத்திற்காக இலங்கையை கடலுக்கு நடுவே அமைத்தார் என்றும், திருமாலின் கிருஷ்ண அவதாரத்தின் பொழுது துவாரகை மற்றும் எமபுரத்தினை அமைத்து தந்தார் எனவும் இந்து நூல்கள் குறிப்படுகின்றன. அத்துடன் சேது பாலத்தினை அமைக்க இராமருக்கு துணையாக நளன் என்ற வானரத்தினை இவர் படைத்தாகவும் கூறப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள், மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=10984
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=11016
  3. http://temple.dinamalar.com/news_detail.php?id=11014
  4. http://temple.dinamalar.com/New.php?id=151 அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவகர்மன்&oldid=2691284" இலிருந்து மீள்விக்கப்பட்டது