சாயா தேவி
சாயா தேவி | |
---|---|
![]() শ্রীমতি ছায়া দেবী (কাদম্বিনী ভট্টাচার্য) | |
பிறப்பு | சூன் 3, 1914
[1] பாகல்பூர், பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய பீகார், இந்தியா) |
இறப்பு | 25 ஏப்ரல் 2001[1] கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 86)
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1936–1993[2] |
சாயா தேவி (Chhaya Devi) (3 சூன் 1914 – 25 ஏப்ரல் 2001) பெங்காலி , பாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஓர் இந்திய நடிகை ஆவார்.[3] ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இவர் நூற்றுக்கணக்கான படங்களில் தோன்றினார்.
இவரது முதல் முக்கிய வேடம் தேபாகி போஸின் இயக்கத்தில்சோனார் சன்சார் (1936) என்ற மேற்கு வங்காளத் திரைப்படத்தில் இருந்தது. இவர் தேபாகி போஸின் வித்யாபதி (1937) என்ற படத்தில் இராணி லட்சுமியாக நடித்ததற்காக புகழ் பெற்றார்.[4] இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்களான நிரஜன் சைகேட் (1963), ஹேட்டி பஜரே (1967), அபன்ஜன் (1968) தபன் சின்ஹாவின், சப்தபதி (1961), உத்தர பல்குனி (1963), வங்காள மொழியில் ஆண்டனி பிரிங்கி (1967), அமிதாப் பச்சனுடன் இந்தியில் நடித்த ஆலாப் ( 1977) ஆகியவை அடங்கும்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
சாயா தேவி பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தின் பாகல்பூரில் ஹரதன் கங்கோபாத்யாய் என்பவருக்கு பிறந்தார்.[5] இவர் தனது கல்வியை ஆதம்பூரில் உள்ள பாக்சூர் மோக்சதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கினார். பின்னர் இவரது தந்தையின் வேலை காரணமாக தில்லிக்குச் சென்று அங்கு இந்திரபிரஸ்தா பெண்கள் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். ராஞ்சியில் ஆசிரியராக இருந்த புத்ததேவ் சட்டோபாத்யாயாவை தனது பதினொரு வயதில் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனது தந்தையுடன் கொல்கத்தாவுக்கு வந்தார்.[6] இவர் நடிகர் அசோக்குமாரின் மனைவி ஷோபா கங்குலியின் முதல் உறவினர், இதனால் கங்குலி குடும்பத்துடனும் தொடர்பு கொண்டிருந்தார். இருப்பினும், இவருடைய ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டிருந்தாலும், இவரது வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்தது என்று நம்பப்படுகிறது. இவர் கொல்கத்தாவை அடைந்த பிறகு, அடுத்த ஐந்து தசாப்தங்களாக இவர் தொடர்ந்து திரைப்படங்களிலும், மேடைகளிலும் ஒரு நடிகையாக தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். [7]
தொழில்[தொகு]
சாயா தேவி 1936 இல் சோனார் சன்சார் என்ற வங்காளத் திரைப்படத்தில் அறிமுகமானாலும், 1938இல் வித்யாபதி திரைப்படத்தில் இராணி லட்சுமி வேடத்தில் சிறந்த நடிப்புக்காக புகழடைந்தார்.[7] தனது ஆரம்ப நாட்களில் முன்னணி பெண் வேடங்கள் முதல் தனது பிற்காலக் கதாபாத்திரங்கள் வரை, சாயா தேவி நடிப்பில் தனது படைப்பு திறனை வெளிப்படுத்தினார். அடல் ஜலர் அஹ்வானில் (1962), சௌமித்ராவின் வாடகைத் தாயாக தனது மென்மையான மற்றும் அன்பான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தார். தேயா நெயாவில் (1963) இவர் ஆர்வமுள்ள பாடகி பிரசாந்தாவின் (உத்தம்குமார்) உதவியற்ற தாயாக நடித்தார். சாத் பேக்கே படா (1963) திரைப்படத்தில் இவர் சௌமித்ராவுடனான தனது மகளின் விவகாரத்தை எதிர்க்கும் சுசித்ரா சென்னின் இதயமற்ற, முரட்டுத்தனமான மற்றும் அலட்சியமான தாயாக இருந்தார். சாயா தேவி பல படங்களில் உத்தம் குமாரின் தாயாக நடித்தார். அந்தோணி பைரிங்கியில் (1967), சாயா தேவி ஹென்ஸ்மேன் ஆண்டனியின் (உத்தம்குமார்) தாயாராக நடித்திருந்தார். 1967இல் தபன் சின்ஹா இயக்கிய அபஞ்சன், படம் வங்காளத் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[8] அத்துடன் பல வங்காளத் திரைப்பட விமர்சன அமைப்பின் விருதுகளும் இவருக்கு கிடைத்தது.[9] லீலா மஜும்தார் எழுதிய அருந்ததி தேவி இயக்கிய பொடி பிசிர் போர்மி பாக்சோ (1972), என்ற குழந்தைகள் திரைப்படத்தில், சாயா தேவி, வயதான விதவை அத்தையான போடி பிசி என்ற மறக்க முடியாத முன்னணி நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "বাংলা ছবির আইকনিক 'মা' ছায়াদেবী, বাস্তবে তাঁকে আগলে রেখেছিলেন মানসকন্যা তনুশ্রী-দেবশ্রী". TheWall (ஆங்கிலம்). 4 ஜூன் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "'ছায়া'পথের নক্ষত্রলোকে". www.anandabazar.com (Bengali). 2021-05-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Chhaya Devi movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. 2019-03-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vidyapati (1937) - Review, Star Cast, News, Photos". Cinestaan. 2019-03-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "অত গ্ল্যামার নিয়ে ভাবলে সাবানের বিজ্ঞাপন করতাম - Anandabazar". anandabazar.com (Bengali). 2019-03-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Biography of Chhaya Debi". 2018-04-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-04-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 7.0 7.1 7.2 "The lady who ruled the screen – Chhaya Devi and her seven unforgettable films". 2018-04-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "16th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2. 5 February 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "BFJA Awards (1969)". 2019-03-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-09-29 அன்று பார்க்கப்பட்டது.