விசிறித்தொண்டை ஓணான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விசிறித்தொண்டை ஓணான்
Sitana side1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலுடைய ஊர்வன
துணைவரிசை: Iguania
குடும்பம்: Agamidae
துணைக்குடும்பம்: Draconinae
பேரினம்: Sitana
இனம்: S. ponticeriana
இருசொற் பெயரீடு
Sitana ponticeriana
Cuvier, 1829
Sitana ponticeriana distribution.png

விசிறித்தொண்டை ஓணான் (Fan throated lizard) என்பது பல்லியோந்தி இனத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இவற்றின் கழுத்துப் பகுதியில் விசிறி போன்ற அமைப்பு இருப்பதால், இவை விசிறித்தொண்டை ஓணான் என அழைக்கப்படுகின்றன. விசிறித்தொண்டை ஓணான் பிரிவில் 11 துணை வகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. மூன்று வகைகள் நேபாளத்திலும், இரண்டு வகைகள் இலங்கையின் கடற்கரை- தாழ்வான பகுதிகளிலும், ஒரு வகை நடு இந்தியாவிலும், நான்கு வகைகள் இந்தியாவின் வறண்ட பகுதிகளிலும், புல்வெளிப் பரப்புகளிலும் வாழ்வதாக நம்பப்படுகிறது. தென் தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் அண்மையில் கண்டறியப் பட்டுள்ள சித்தானா மருதம் நெய்தல் என்ற புதியவகை விசிறித்தொண்டை ஒணான்கள் காணப்படுகிறன. இந்த ஓணான் கண்டறியப்பட்ட இடங்கள் பெரும்பாலும் பொட்டல் நிலம், தரிசு நிலப்பரப்புகளே. தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக்கு பின்பு தமிழகம், இலங்கையில் இவ்வகை ஓணான்களை அதிகம் காண முடியும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. [http://www.iucnredlist.org/details/176220/0
  2. "தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் புதிய விசிறித்தொண்டை ஓணான்". கட்டுரை. தி இந்து (2017 ஏப்ரல் 22). பார்த்த நாள் 23 ஏப்ரல் 2017.