விசயலட்சுமி சாதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dr Vijaylaxmi Sadho
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 திசம்பர் 2018
முன்னையவர்இராஜ்குமார் மேவ்
தொகுதிமகேசுவர்[1]
மத்தியப் பிரதேச பண்பாடு, மருத்துவக் கல்வி & ஆயுசு அமைச்சர்
பதவியில்
25 திசம்பர் 2018 – ஏப்ரல் 2020
முதலமைச்சர்சிவராஜ் சிங் சௌகான்
பின்னவர்உஷா தாகூர்,
விசுவாசு சாரங்
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை
பதவியில்
30 சூன் 2010 – 29 சூன் 2016
பின்னவர்விவேக் தன்கா
தொகுதிமத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 நவம்பர் 1955 (1955-11-13) (அகவை 68)[2]
கர்கோன் மாவட்டம், மத்திய பாரதம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிகாந்தி மருத்துவக் கல்லூரி, போபால்
தொழில்சமூக சேவகர், அரசியல்வாதி

விசயலட்சுமி சாதோ (Vijayalaxmi Sadho)(பிறப்பு: நவம்பர் 13, 1955) என்பவர் இந்தியச் சமூக சேவகர், அரசியல்வாதி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக மேல்சபையில் மத்தியப் பிரதேசத்திலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் மத்தியப் சட்டமன்றத்தின் சட்ட சபையில் மகேசுவரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] சாதோ 25 திசம்பர் 2018 அன்று புதிய மத்தியப்பிரதேச அரசாங்கத்தின் அமைச்சராகப் பதவியேற்றார்.[4]

இளமையும் கல்வியும்[தொகு]

சாதோ 1955ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கார்கோன் மாவட்டத்தில் உள்ள மண்டலேசுவரில் பிறந்தார். இவர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார்.[3]

பணி[தொகு]

சாதோ 1985 முதல் 1992 வரை மத்தியப் பிரதேசத்தின் இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார். 1985 முதல் 1989 வரை மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் பொதுக் கணக்குக் குழு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழு மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். 1989 முதல் 1990 வரை நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார். சாதோ பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் சிறைத்துறை, 1993 முதல் 1998 வரை மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 1985 முதல் 2018 வரை 5 முறை மத்தியப்பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 மற்றும் 2003 சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்தார். 2013-ல் இவர் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாதோ ஏப்ரல் 2010-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான குழு, வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கான தேர்வுக் குழு, மேசை உறுப்பினர் மீது வைக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்கான குழு, ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மத்திய மேற்பார்வை வாரியம் ஆகியவற்றின் உறுப்பினராக பணியாற்றினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Maheshwar Election Result 2018 Live Updates: Candidate List, Winner, MLA, Leading, Trailing, Margin". 11 December 2018. Archived from the original on 13 December 2018.
  2. "Department Of Public Relations,Madhya Pradesh". www.mpinfo.org. Archived from the original on 2019-08-02. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
  3. 3.0 3.1 3.2 "WebPage of Dr. Vijayalaxmi Sadho Member of Parliament (RAJYA SABHA)". பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.
  4. PTI (2018-12-25). "Madhya Pradesh CM Kamal Nath expands Cabinet, inducts 28 ministers". Mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.

வெளி இணைப்புகள்[தொகு]

Vijayalaxmi Sadho on Twitter

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயலட்சுமி_சாதோ&oldid=3702993" இலிருந்து மீள்விக்கப்பட்டது