விக்ரமன் இராதாகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரமன் இராதாகிருட்டிணன்
Vikraman Radhakrishnan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர்
பதவியில்
2020–2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இரா,விக்ரமன்

24 ஆகத்து 1988 (1988-08-24) (அகவை 35)
திருநெல்வேலி, இந்தியா
தேசியம்இந்தியாn
வேலை

விக்ரமன் இராதாகிருட்டிணன் (Vikraman Radhakrishnan) (பிறப்பு 24 ஆகத்து 1988) ஓர் இந்திய நடிகரும் முன்னாள் அரசியல்வாதியும் ஆவார். முதன்மையாக தமிழ் தொலைக்காட்சியில் இவர் பணியாற்றுகிறார். 2016 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான நடந்தது என்ன? குற்றமும் பின்னனியும் என்ற பேச்சு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொலைக்காட்சியில் அறிமுகமானார். இராதாகிருட்டிணன் விண்ணைத்தாண்டி வருவாயா (2016) படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமாணார். தமிழ் எதார்த்த நிகழ்ச்சியான பிக் பாஸ் பருவம் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக தோன்றினார். [1]

தொழில்[தொகு]

விக்ரம் இராதாகிருட்டிணன் தனது தொலைக்காட்சி வாழ்க்கையை 2016 ஆம் ஆண்டில் தொடங்கினார், நடந்தது என்ன? குற்றமும் பின்னனியும் என்ற பேச்சு நிகழ்ச்சி இவரை அறிமுகப்படுத்தியது. இதே ஆண்டின் பிற்பகுதியில், இ.எம்.ஐ-தவணை முறை வாழ்கை என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடிகர்கள் பவானி ரெட்டி, சியாம் சுந்தர் மற்றும் அரிப்ரியா ஆகியோருடன் சந்தோசு கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் நடிகை மதுமிலாவுடன் இணைந்து இசுட்டார் விஜய்யில் ஒளிபரப்பான <i id="mwGw">விண்ணைத்தாண்டி வருவாயா</i> என்ற மற்றொரு நாடகத் தொடரில் நடித்தார். [2] [3]

2020 ஆம் ஆண்டில் விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் கட்சியில் சேர்ந்து 2022 ஆம் ஆண்டு வரை முக்கிய செய்தித் தொடர்பாளராக இருந்தார். விக்ரமன் செய்தித் தொடர்பாளராக இருந்த காலத்தில், இந்து மதம் மற்றும் மதம் தொடர்பான தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தினார். [4] இந்த உரையை நிகழ்த்திய பின்னர் அவர் அரசியல் கட்சியில் இருந்து விலகுமாறும், செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்தும் விலகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டார். இருப்பினும், பின்னர் அவர் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு குடிமக்களிடம் மன்னிப்பு கேட்டார். [5]

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு தொலைக்காட்சி குறிப்புகள் Ref.
2016 நடந்தது என்ன? குற்றமும் பின்னனியும் தொகுப்பாளர் விஜய் தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சி
2016 இ.எம்.ஐ-தவணை முறை வாழ்க்கை சந்தோசு தொலைக்காட்சித் தொடர்
2016 விண்ணைத்தாண்டி வருவாயா விக்ரம் தொலைக்காட்சித் தொடர்
2022-தற்போது பிக் பாஸ் 6 (தமிழ்) பங்கேற்பாளர் எதார்த்த நிகழ்ச்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bigg Boss Tamil 6: Meet Vikraman, the first politician to enter the Bigg Boss house!". www.ottplay.com (in ஆங்கிலம்). 2022-10-12.
  2. "TV Actor Vikram Krishna". nettv4u.com (in ஆங்கிலம்).
  3. "பிக்பாஸ் விக்ரமன் சீரியலில் நடித்துள்ளார்". cinema.dinamalar.com (in ஆங்கிலம்).
  4. "'You won't be able to have office in any district': VCK spokesperson threatens Dinamalar, stokes secessionism". thecommunemag.com (in ஆங்கிலம்). 2021-07-21.
  5. "Shri Krishna had illicit relationships in his youth with the Gopis : Vikraman (Spokesperson of TN's VCK party) Anti-Hindu remark". sanatanprabhat.org (in ஆங்கிலம்). 2022-06-07.

புற இணைப்புகள்[தொகு]