மதுமிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுமிலா
பிறப்புஇலங்கை, யாழ்ப்பாணம்
மற்ற பெயர்கள்மதுமிலா, இலட்சுமி
பணிநடிகை, தொலைக்காட்சி நிகழ்சி தொகுப்பாளர், வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது வரை
வலைத்தளம்
https://www.instagram.com/officialmathumila/

மதுமிலா (Madhumila, பிறப்பு 23 மே 1988), என்பவர் இலங்கையில் பிறந்த தமிழ் நடிகை, தொலைக்காட்சி நிகழ்சசி தொகுப்பாளர், வடிவழகி ஆவார். இவர் 2012 இல் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்சியில் தொகுப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிகையாக அறிமுகமானார். அது இவருக்கு நிறைய புகழைப் பெற்றுத்தந்தது. [1] [2] பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்ள சிங்கம் போன்ற சில பிரபலமான படங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.

ஆபிஸ் தொடரில் லட்சுமி என்ற பாத்திரத்தில் நடித்தற்காக 2014ஆம் ஆண்டு மதுமிலாவுக்கு விஜய் தொலைக்காட்சி விருதும் வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

2017 இல் மாதுமிலா திருமணம் செய்து கொண்ட மதுமிலா, கனடாவில் தன் கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 20 ஏப்ரல் 2020 இல் குழந்தை பிறந்தது.

திரைப்படவியல்[தொகு]

நடித்த திரைப்படங்களின் பட்டியல்
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2014 பூஜை செல்வி
2015 ரோமியோ ஜூலியட் பிரியா
2016 மாப்ள சிங்கம் வினோதினி [3]
2017 செஞ்சிட்டாளே என் காதல அனுஷ்கா [4]
2017 சங்கிலி புங்கிலி கதவத் தொற சந்தியா
2018 நெஞ்சமெல்லாம் காதல் சரண்யா
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
ஆண்டு நிகழ்ச்சி பங்கு குறிப்புகள்
2012 மக்கள் தொலைக்காட்சி அவராகவே
2013-2014 ஆபிஸ் லட்சுமி பிடித்த புதுமுகத்துக்கான விஜய் தொலைக்காட்சி விருதுகள்
2013-2014 தாயுமானவன் சுபா
2013-2014 அக்னி பறவை அம்மு
2015–2016 கிச்சன் சூப்பர் ஸ்டார் (பருவம் 4) அவராகவே
2016-2016 அச்சம் தவிர் அவராகவே
2016-2017 விண்ணைத்தாண்டி வருவாயா அபிராமி (அபி) [5]
2020 ஆண்மை (யூடியூப் குறும்படம்) விஜி

குறிப்புகள்[தொகு]

 

  1. https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-office-serial-actress-madhumila/
  2. "Vijay Television awards launched". 26 May 2014. 1 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. Menon, Vishal (12 March 2016). "Mapla Singam: A flat comedy with serious ambitions". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/mapla-singam-review-a-flat-comedy-with-serious-ambitions/article8346414.ece. பார்த்த நாள்: 25 August 2020. 
  4. https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/080417/senjittale-en-kaadhala-review-inconsistency-in-presentation-and-lacks-the-fizz.html
  5. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Vinnai-Thandi-Varuyava-new-serial-on-Vijay/articleshow/54604051.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுமிலா&oldid=3176587" இருந்து மீள்விக்கப்பட்டது