விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/ஊடகச் சந்திப்பு/

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இச்சந்திப்பு திட்டமிடல் நிலையில் உள்ளது. முதலில் அறிக்கை எழுத வேண்டும். சென்னையில் நடக்கும் கூடல் நிகழ்வுக்கு இரண்டு, மூன்று நாட்கள் முன்னதாக இதனைச் செய்தால் நிகழ்வு பற்றிய செய்தி சரியான நேரத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம். கூடுதல் விவரங்கள் விரைவில் இற்றைப்படுத்தப்படும்.--இரவி (பேச்சு) 20:43, 11 செப்டம்பர் 2013 (UTC)

மீடியா பார்ட்னஸ் அமைத்து பரப்புரை செய்தல்[தொகு]

தொலைக்காட்சி, வானொலி, நாளேடு, கல்விக் குழுமம் போன்றவைகளை அனுகி அவர்களில் ஒருபிரிவினருக்கு ஒருநிறுவனம் என இணைத்துக் கொண்டால் நல்ல விளம்பரம் கிடைக்கும். காலம் குறைவாக இருப்பதால் பரப்புரைக்கு ஏதுவாக இருக்கும். ரியல் எஸ்டேட் கூடல், வீட்டு உபயோகப் பொருள்கள் கூடல் என்பவற்றில் இம்முறையைப் பார்த்திருக்கிறேன். அவற்றினால் வானொலி, தொலைக்காட்சி, நாளேடு போன்றவற்றில் சிறப்பு செய்திகளும் விளம்பரங்களும் இடம் பெறும். ஊடகங்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருப்பின் ஒத்துக் கொள்வார்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:54, 18 செப்டம்பர் 2013 (UTC)

நல்ல ஆலோசனை. பெரும்பாலும் விளம்பரங்களுக்கு காசு செலவழித்தால் இவ்வாறு கூட்டாளிகளாக ஆவார்கள். இந்த வழிமுறையை நாம் பின்பற்ற முடியாது. ஆகவே, ஊடகங்களுக்கான பயன் என்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். ஓரளவுக்குச் சமூக நலனுக்கு ஆதரவு தரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, பண்பலை வானொலிகள் முதலியவற்றை அணுகிப் பார்க்கலாம். இப்பொறுப்பை யாராவது ஏற்றுக் கொண்டால் உதவியாக இருக்கும்.--இரவி (பேச்சு) 18:59, 18 செப்டம்பர் 2013 (UTC)
ஏர்செல் விக்கிப்பீடியாவில் உலாவுவதற்கு கட்டணமில்லா இணையவசதி தருவதாக அறிந்தேன். அவர்களை ஊடகக்கூட்டாளிகளாக இணைத்துக் கொள்ள இயலுமா ?--மணியன் (பேச்சு) 19:06, 18 செப்டம்பர் 2013 (UTC)
press release செய்தால் உதவுமா என்று பார்க்கவும். அதற்கு எவ்வளவு செலவாகும். --Natkeeran (பேச்சு) 19:23, 18 செப்டம்பர் 2013 (UTC)
நற்கீரன், ஊடகச் சந்திப்பு அன்றைக்கே அச்சிட்ட ஊடக அறிக்கையை அங்கு வரும் அனைத்து ஊடகங்களுக்கும் வழங்க இருக்கிறோம். இதில் விடுபட்டவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அஞ்சலில் அனுப்பி வைக்கலாம். இதற்கு அஞ்சல் செலவு, அச்சுச் செலவு தவிர வேறொன்றும் பெரிதாகத் தேவைப்படாது. மற்றபடி, இதற்கென தொழில்முறை நிறுவனங்களை அணுகினால் எவ்வளவு செலவாகும், எவ்வளவு பயன் இருக்கும் என்று தெரியவில்லை. தற்போதைய திட்டமிடலில் அதற்கான நிதியும் இல்லை.
மணியன், இதற்கு உதவும் யாரை வேண்டுமானாலும் கூட்டாளியாகக் கொள்ளலாம். ஆனால், நமக்குத் தேவை இந்நிறுவனங்களில் நமக்கான கதவைத் திறந்து விடும் சரியான தொடர்புகளே.--இரவி (பேச்சு) 19:28, 18 செப்டம்பர் 2013 (UTC)
இரவி, நக்கீரன், மணியன் முவருக்கும் நன்றி. புதிய தலைமுறை, மக்கள் தொலைக்காட்சி, பிக் எப்எம், ஹலோ எப்எம், ஆகா எப்எம் போன்றவற்றில் எவரேனும் ஒத்துக் கொண்டால் மிகப்பெரும் பலமாக இருக்கும். ஊடகங்களுடன் தொடர்புடைய நபரை கண்டறிந்து அவரிடம் பொறுப்பினை ஒப்படைக்க வேண்டும். விளம்பரத்திற்கு காசு கொடுத்தால்தான் பார்ட்னராக இணைவோம் என்று அடம் பிடித்தால் இந்த யோசனையை விலக்கிவிடலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:56, 18 செப்டம்பர் 2013 (UTC)
சரி. இது தொடர்பாக முயன்று விட்டு விவரங்களை இற்றைப்படுத்துகிறேன்.--இரவி (பேச்சு) 08:08, 19 செப்டம்பர் 2013 (UTC)