விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முந்திய உரையாடல்கள்[தொகு]

எழுத்து பெயர்ப்பு பற்றி: ஒலிபெயர்ப்பு, எழுத்துப்பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, பொருள் பெயர்ப்பு என்று பல வகைகள் உண்டு. ஆங்கிலத்தில் இவைகளை transcription, transliteration, translation, transcreation என சொல்லலாம். முதல் இரண்டே நாம் இங்கு கருத்தாட வேண்டியது. இவை பற்றி என் கருத்துக்களை எழுத உள்ளேன்.--C.R.Selvakumar 15:46, 29 மே 2006 (UTC)செல்வா[பதிலளி]

விரிவு[தொகு]

முன்னுரையைச் சற்று விரிவுபடுத்தி எழுதியுள்ளேன். கருத்துகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். --செல்வா 00:54, 20 பெப்ரவரி 2012 (UTC)

வெளி இணைப்புகள்[தொகு]

ஒலிபெயர்ப்புக் கையேடு[தொகு]

பெரும்பாலும் நாம் ஒலிபெயர்ப்புக்களையே செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கையேட்டை ஒலிபெயர்ப்புக் கையேடு என மாற்றிவிட்டால் என்ன? ஐபிஏ எழுத்துக்களில் எழுத்துப்பெயர்ப்பு செய்வதற்கு மட்டும் ஒரு துணைத்தலைப்பாகவோ வேறு தனிக்கையேடாகவோ எழுதிவிடலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 12:07, 22 பெப்ரவரி 2012 (UTC)

ஆம் சுந்தர், நாம் பிறமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றுவது ஒலிபெயர்ப்புதான் எனவே ஒலிபெயர்ப்புக் கையேடு எனவே பெயரை மாற்றாலாம். யாருக்கும் மறுப்பு இல்லை எனில் இரண்டொரு நாளில் மாற்றிவிடலாம்.--செல்வா 16:13, 22 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி செல்வா. -- சுந்தர் \பேச்சு 16:17, 22 பெப்ரவரி 2012 (UTC)