விக்கிப்பீடியா:விபரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:விவரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பயத்தால் வரும் பதட்டத்தை எதிர்கொள்வது எப்படி?

அவசரம் வேண்டாம் !

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் அவசரம் தான். கோபமாக இருந்தாலும், பிரச்சனையாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு எதை நினைக்கிறோமா அதை செய்து விடுகிறோம். இது முற்றிலும் தவறு. இங்கு ஒரு இளைஞன் எவ்வாறு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறான். அப்பிரச்சனையில் இருந்து எவ்வாறு வெளி வருகிறான் என்பதை பற்றி பார்ப்போம். காட்டில் இளைஞன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தான். போகும் வழியில் அவனுக்கு பசி கடுமையாக எடுத்தது. என்ன செய்தவதென்று தெரியாமல் இருந்த அவனுக்கு ஒரு மரத்தில் பழங்கள் கனிந்து இருப்பதை கண்டான். உடனே அம்மரத்தில் தாவி ஏறினான். சில கனிந்த பழங்களை பறித்து தின்றான். அங்கு மேலும் ஒரு கிளையில் பழங்கள் இருப்பதை கண்டு அக்கிளைக்கு தாவினான். அக்கிளை சிறியதாக இருந்ததால் அவனின் எடையை தாங்க முடியாமல் அக்கிளை ஒடிந்தது. கிளை ஒடிந்ததால் பக்கத்தில் இருந்த மற்றொரு கிளையை பிடித்துக் கொண்டான். அக்கிளையில் இருந்து கீழே பார்த்தால் தரை வெகுதூரம் இருந்தது. கிளையை விட்டுவிட்டு குதித்தால் நிச்சயம் கை, கால்கள் உடையும் என்பதை அறிந்த அவன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். பின் யாராவது இருந்தால் என்னை காப்பாற்றுங்கள் என்று அலறினான். நேரம் ஆகஆக அவனது உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது.

வெகுநேரம் சென்றபின் அவ்வழியே முதியவர் ஒருவர் வந்தார். அந்த இளைஞன் முதியவரை பார்த்து, என்னை காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டான். முதியவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, அந்த இளைஞன் மீது கல்லை தூக்கி எறிந்தார். கல் பட்டவுடன் இளைஞன் வலியை தாங்க முடியாமல் முதியவரை பார்த்து, உங்களை உதவ சொன்னால் நீங்கள் என்மேல் கல்லை தூக்கி எறிகின்றீர்கள் என கோபத்துடன் கேட்டான். அந்த பெரியவர் அமைதியாக இருந்தார். மறுபடியும் ஒரு கல்லை தூக்கி அவன் மேல் எறிந்தார். அந்த இளைஞன் கோபத்துடன், பெரியவரே, உமக்கு அறிவில்லையா என கேட்டான். அதன்பின் தன்னை சுதாகரித்து கொள்ள மற்றொரு கிளையை பற்றி கொண்டான். அந்த பெரியவர் மீண்டும் அந்த இளைஞன் மீது கல்லை தூக்கி எறிந்தார். அந்த இளைஞன் மிகுந்த கோபத்துடன், பெரியவரே நான் கீழே வந்தால் உங்களை சும்மா விடமாட்டேன் என கத்தினான். அதன்பின் பக்கத்தில் பலமாக இருந்த கிளை ஒன்றை பற்றிக் கொண்டான்.

மீண்டும் அப்பெரியவர் அந்த இளைஞன் மீது கல்லை தூக்கி எறிந்தார். கோபங்கொண்ட இளைஞன், இனி உங்களுக்கு வாயால் சொல்லி ஒரு பயனும் இல்லை, நானே கீழே வருகிறேன் எனக் கூறி முயற்சி செய்து மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். அந்த இளைஞன் பெரியவரை பார்த்து சரமாரியாகத் திட்டினான். உங்களிடம் உதவி தானே கேட்டேன். ஏன் கல்லை தூக்கி எறிந்தீர் எனக் கேட்டான். பெரியவர் அமைதியாக சிரித்தார். பின், தம்பி! நான் உனக்கு உதவிதான் செய்தேன் என்றார். அந்த இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர், நான் உன்னை முதலில் பார்த்தபோது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். அதனால் உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் உன் பயம் சிறிது மறைய ஆரம்பித்தது. அதன்பின் நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். மீண்டும் மீண்டும் கல்லை எறிந்தேன். அதனால் நீ உன்னை காப்பாற்றிக் கொள்ள பெருமுயற்சி செய்தாய். கடைசியாக உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. இதற்கு காரணம் உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன் என்று கூறினார். உண்மையை தெரிந்து கொண்ட அந்த இளைஞன் அந்த பெரியவரிடம், தங்களை திட்டியதற்கு மன்னிப்பு கேட்டான். பின் தாங்கள் உதவி செய்ததற்கு மிக்க நன்றி எனக் கூறினான். அதன்பின் அப்பெரியவர் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

தத்துவம் : என்னதான் பிரச்சனை இருந்தாலும் கோபம் கண்ணை மூடிவிடும். அதனால் அப்பிரச்சனையில் இருந்து எவ்வாறு வெளிவருவது என்பது சிரமமாகிறது. சிறிது அமைதியாக இருந்து அப்பிரச்சனைக்கு உண்டான வழியை தேடினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

திட்டத்தின் வரலாறும் மேலாய்வும்[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவை சனவரி,2001இல் ஜிம்மி வேல்சும் லாரி சாங்கரும் தொடங்கினார்கள். இன்று விக்கிப்பீடியா 260 உக்கும் மேலானான மொழிகளில் மொத்தமாக 9,000,000 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழில் உள்ள 1,13,848 கட்டுரைகளும் இதில் அடக்கம். தமிழ் விக்கியை 2003ஆம் ஆண்டு இ. மயூரநாதன் துவங்கினார். இப்பொழுது 16,000 பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா 70 இலட்சம் சொற்கள் கொண்ட பல்துறை இணையக் கலைக்களஞ்சியம். இது நாள்தோறும் 80,000 முறை பார்க்கப்படுகின்றது. மாதத்துக்கு 2.4 மில்லியன் முறை பார்க்கப்படுகின்றது.

விக்கிபீடியாவில் உலாவுதல்[தொகு]

ஊடக வினவல்கள்[தொகு]

விக்கிப்பீடியாவுக்கு பங்களித்தல்[தொகு]

நீங்களும் இத்திட்டத்தில் பயனராக இணைவதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் கூட்டு அறிவாக்கம் மூலம் பயன்பெறுவதோடு, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உதவலாம். உங்களை தமிழ்விக்கிபீடியாவில் இணைய தமிழ் விக்கிபீடியா சமூகம் அன்புடன் வரவேற்கின்றது.

உசாத்துணைகள்: பங்களிப்பாளர்களுக்கு கொள்கைகளும் வழிகாட்டல்களும், புது வாசகர் (பயனர்) பக்கம், புதியவர்களுக்கான அறிமுகம், மற்றும் பொதுவான உதவி ஆகியன பங்களிக்கவும் தொகுக்கவும் உலாவவும் வழிகாட்டுகின்றன.

பிற மொழி பதிப்புகள்[தொகு]

1000,000 கட்டுரைகளுக்கு மேல் உள்ள பிற மொழி விக்கிப்பீடியாக்கள்:Deutsch (German) · English (English) · Français (French) · Nederlands (Dutch)
10,000 கட்டுரைகளுக்கு மேல் உள்ள பிற மொழி விக்கிப்பீடியாக்கள்: Afrikaans · Беларуская (Belarusian) - मराठी (Marathi) - Simple English · ภาษาไทย (Thai)

முழு பட்டியல் · பன்மொழி ஒருங்கிணைப்பு · இன்னொரு மொழியில் விக்கிப்பீடியா தொடங்க

தமிழ் விக்கிப்பீடியாவின் பிற உறவுத்திட்டங்கள்[தொகு]

விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கி மேற்கோள்கள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கி இனங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கி செய்திகள்
கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை
விக்கி மூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்
விக்கி பொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
விக்கி பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்
விக்கி நூல்கள்
கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு


இத்தளத்தில் உள்ள கட்டுரைகளுக்கு கிரியேட்டிவ் காமன்ஸ் (Creative Commons) அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அனைத்து விக்கிப்பீடியாக் கட்டுரைகளையும் பயன்படுத்தவும் நகல் எடுப்பதற்கான உரிமையையும் உறுதி செய்கிறது.(மேலும் விவரங்களுக்கு விக்கிப்பீடியா பதிப்புரிமை மற்றும் பொறுப்புத் துறப்புகள் பக்கங்களைப் பார்க்கவும்)