உள்ளடக்கத்துக்குச் செல்

லாரி சாங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாரி சாங்கர்
பிறப்புலாரன்சு மார்க் சாங்கர்
சூலை 16, 1968 (1968-07-16) (அகவை 55)
பெல்வியூ, வாசிங்டன், அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ரீட் கல்லூரி
ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம்
பணிமுதன்மை ஆசிரியர், சிடிசென்டியம்
வலைத்தளம்
http://larrysanger.org/

லாரன்சு மார்க் "லாரி" சாங்கர் (பிறப்பு சூலை 16, 1968[1] ) ஓர் அமெரிக்க மெய்யியலாளரும் விக்கிப்பீடியாவினை கூட்டாக நிறுவியவரும் இலவச தகவல் களஞ்சியமான சிடிசென்டியம் (குடிமக்கள் தொகுப்பு) உருவாக்குனரும் ஆகும்.[2][3][4]

அவரது இளமைக்காலம் அங்காரேஜ்,அலாஸ்காவில் கழிந்தது.[2] சிறு வயது முதலே அவருக்கு மெய்யியலில் ஆர்வம் இருந்தது.[5] சாங்கர் மெய்யியலில் இளங்கலைப் பட்டத்தை 1991ஆம் ஆண்டு ரீட் கல்லூரியில் படித்தார். முதுகலைப் பட்டத்தை 1995ஆம் ஆண்டிலும் முகமைப் பட்டத்தை(Ph.D.) 2000ஆம் ஆண்டிலும் ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[6] அவரது மெய்யியல் ஆய்வுகள் அறிவு குறித்த கொள்கைகளை பற்றியதாக இருந்தது.[5] அவர் பல இணைய தகவல் களஞ்சியத் திட்டங்களில் பங்கெடுத்தார்.[7] நூபீடியாவின் முன்னாள் முதன்மை ஆசிரியர்;[8] (2001–2002)காலகட்டத்தில் நூபீடியாவின் சந்ததி விக்கிப்பீடியாவின் முதன்மை அமைப்பாளர்;[9] மற்றும் சிடிசென்டியத்தின் தற்போது செயலிலில்லாத முதன்மை ஆசிரியர்.[10] அவர் நூபீடியாவில் பணிபுரிந்தபோது கட்டுரை வடிவமைக்கும் செயல்பாட்டை உருவாக்கினார்.[11] விக்கிப்பீடியா உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார்.[12] விக்கி மென்பொருளைக் கொண்டு விக்கிப்பீடியா அமைக்கும் கருத்தை முன்மொழிந்தவர் அவரே.[12] துவக்கத்தில் விக்கிப்பீடியா நூபீடியாவின் கூடுதல் திட்டமாக இருந்தது.[12] விக்கிப்பீடியா சமூகத்தின் முதல் தலைவராக விளங்கி[13] பல ஆரம்ப கொள்கைகளை வடிவமைத்தார்.[14] விக்கியை அடிப்பையாகக் கொண்ட மாற்று விக்கித்திட்டமான சிடிசென்டியத்தை வழிநடத்தினார்.[15]

சாங்கர் 2002ஆம் ஆண்டு விக்கிப்பீடியாவை விட்டு வெளியேறிய பிறகு விக்கிப்பீடியா திட்டத்தின் குறைபாடுகளை கூறிவந்தார்.[16] விக்கிப்பீடியா பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும்,துறை வல்லுனர்கள் இல்லாதநிலையில், நம்பிக்கைத்தன்மையை இழந்துள்ளதாகக் குறை கூறினார்.[17] திட்டத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஓகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் விரிவுரையாளராக பணிபுரிந்தார்.[5] புவி பற்றிய துறை வல்லுனர்களால் எழுதப்பட்ட தகவல் களஞ்சியத்தை தொகுத்தார்.[18] செப்டம்பர் 15, 2006 அன்று விக்கிப்பூடியாவின் பிரிவாக (fork) சிடிசென்டியம் என்ற திட்டத்தை பொது ஊடகங்களுக்கு அறிவித்தார்.[19] முறையாக மார்ச் 25, 2007அன்று இது பயன்பாட்டிற்கு வந்தது.[20] இந்தத் திட்டம் ஓர் நம்பிக்கைக்கு உரிய தகவல்களஞ்சியத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.[21] இணையத் தகவல் களஞ்சியத்தில் பொறுப்பு மிகுந்த தொகுப்பாளர் அமைப்பை உருவாக்க சாங்கர் விரும்பினார்.[10]

தற்போது வாட்ச்நோ என்ற திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.[22] மற்றும் பல இணைய சமூகங்களின் கூட்டு செயல்பாடுகளில் அறிவுரையாளராகவும், எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் பகுதிநேரப் பணியாற்றுகிறார்[23]

மேற்கோள்கள்[தொகு]

 1. Sanger, Larry (2000). "Epistemic Circularity: An Essay on the Problem of Meta-Justification". Enlightenment: Objectivist Scholarship. http://enlightenment.supersaturated.com/essays/text/larrysanger/diss/preamble.html. பார்த்த நாள்: 2007-03-25. 
 2. 2.0 2.1 Chillingworth, Mark (November 27, 2006). "Expert edition". Information World Review. http://www.iwr.co.uk/information-world-review/features/2171366/expert-edition. பார்த்த நாள்: 2007-03-25. "Wikipedia co-founder Larry Sanger explains what his Citizendium project will bring to the wiki reference world." 
 3. Anderson, Nate (November 21, 2007). "Larry Sanger says "tipping point" approaching for expert-guided Citizendium wiki". Ars Technica. http://arstechnica.com/news.ars/post/20071121-larry-sanger-says-tipping-point-approaching-for-expert-guided-citizendium-wiki.html?rel. பார்த்த நாள்: 2007-11-21. 
 4. Jay, Paul (April 19, 2007). "I, editor — The Wikipedia experiment". CBC News இம் மூலத்தில் இருந்து 2007-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070427004613/http://www.cbc.ca/news/background/tech/wikipedia.html. பார்த்த நாள்: 2008-02-05. 
 5. 5.0 5.1 5.2 Roush, Wade (January 2005). "Larry Sanger's Knowledge Free-for-All". டெக்னாலச்சி ரிவ்யூ இம் மூலத்தில் இருந்து 2011-05-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110514100333/http://www.technologyreview.com/Biztech/14071/?a=f. பார்த்த நாள்: 2007-03-25. 
 6. Sanger, Larry. "Larry Sanger — Education". larraysanger.org. http://larrysanger.org/#Education. பார்த்த நாள்: 2007-03-25. 
 7. Sidener, Jonathan (September 23, 2006). "Wikipedia co-founder looks to add accountability, end anarchy". The San Diego Union-Tribune. http://www.signonsandiego.com/uniontrib/20060923/news_lz1n23wiki.html. பார்த்த நாள்: 2007-03-25. "The origins of Wikipedia date to 2000, when Sanger was finishing his doctoral thesis in philosophy and had an idea for a Web site." 
 8. Nauffts, Mitch (March 27, 2007). "5 Questions For...: Larry Sanger, Founder, Citizendium". Philanthropy News Digest (Foundation Center). http://foundationcenter.org/pnd/fivequestions/5q_item.jhtml?id=173900004. பார்த்த நாள்: 2007-03-27. 
 9. Moody, Glyn (July 13, 2006). "This time, it'll be a Wikipedia written by experts". தி கார்டியன். http://technology.guardian.co.uk/weekly/story/0,,1818630,00.html. பார்த்த நாள்: 2007-03-25. "Larry Sanger seems to have a thing about free online encyclopedias. Although his main claim to fame is as the co-founder, along with Jimmy Wales, of Wikipedia, that is just one of several projects to produce large-scale, systematic stores of human knowledge he has been involved in. [Jimmy Wales] saw that I was essentially looking for employment online and he was looking for someone to lead Nupedia... Career: 1992–1996, 1997–1998 Graduate teaching associate, OSU; 2000–2002 Editor-in-chief, Nupedia; Co-founder and "chief organiser," Wikipedia." 
 10. 10.0 10.1 LeClaire, Jennifer (March 27, 2007). "Wikipedia Cofounder Launches Citizendium". NewsFactor Network இம் மூலத்தில் இருந்து 2011-05-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110516210159/http://www.newsfactor.com/story.xhtml?story_id=13100C1ES8F1&full_skip=1. பார்த்த நாள்: 2007-03-27. 
 11. Gouthro, Liane (March 10, 2000). "Building the world's biggest encyclopedia". PCWorld இம் மூலத்தில் இருந்து 2009-09-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090906110917/http://www.pcworld.com/article/15676/building_the_worlds_biggest_encyclopedia.html. பார்த்த நாள்: 2007-03-25. 
 12. 12.0 12.1 12.2 Poe, Marshall (September 2006). "The Hive". The Atlantic Monthly. http://www.theatlantic.com/doc/200609/wikipedia/. பார்த்த நாள்: 2007-03-25. "Wales and Sanger created the first Nupedia wiki on January 10, 2001. The initial purpose was to get the public to add entries that would then be "fed into the Nupedia process" of authorization. Most of Nupedia's expert volunteers, however, wanted nothing to do with this, so Sanger decided to launch a separate site called "Wikipedia." Neither Sanger nor Wales looked on Wikipedia as anything more than a lark. This is evident in Sanger's flip announcement of Wikipedia to the Nupedia discussion list. "Humor me," he wrote. "Go there and add a little article. It will take all of five or ten minutes." And, to Sanger's surprise, go they did. Within a few days, Wikipedia outstripped Nupedia in terms of quantity, if not quality, and a small community developed. In late January, Sanger created a Wikipedia discussion list (Wikipedia-L) to facilitate discussion of the project." 
 13. Brian Bergstein (March 25, 2007). "Sanger says he co-started Wikipedia". MSNBC (அசோசியேட்டட் பிரெசு) இம் மூலத்தில் இருந்து 2012-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121221005757/http://www.msnbc.msn.com/id/17798723/. பார்த்த நாள்: 2007-03-25. "The nascent Web encyclopedia Citizendium springs from Larry Sanger, a philosophy Ph.D. who counts himself as a co-founder of Wikipedia, the site he now hopes to usurp. The claim doesn't seem particularly controversial - Sanger has long been cited as a co-founder. Yet the other founder, Jimmy Wales, isn't happy about it." 
 14. Schiff, Stacy (July 31, 2006). "Know It All". The New Yorker இம் மூலத்தில் இருந்து 2012-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121205043213/http://www.newyorker.com/fact/content/articles/060731fa_fact. பார்த்த நாள்: 2009-04-25. 
 15. Blakely, Rhys (September 7, 2007). "Wikipedia amateurs face backlash from the experts". தி டைம்ஸ். http://business.timesonline.co.uk/tol/business/industry_sectors/media/article2407123.ece. பார்த்த நாள்: 2008-02-05. 
 16. "Wikipedia founder sets up rival". Australian IT. October 19, 2006 இம் மூலத்தில் இருந்து 2012-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121215193047/http://www.australianit.news.com.au/story/0,24897,20605798-15336,00.html. பார்த்த நாள்: 2007-03-25. 
 17. Sanger, Larry (December 31, 2004). "Why Wikipedia Must Jettison Its Anti-Elitism". Kuro5hin. http://www.kuro5hin.org/story/2004/12/30/142458/25. பார்த்த நாள்: 2007-03-25. 
 18. Terdiman, Daniel (December 19, 2005). "Wikipedia alternative aims to be 'PBS of the Web'". CNET இம் மூலத்தில் இருந்து 2012-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120711125414/http://news.cnet.com/Wikipedia-alternative-aims-to-be-PBS-of-the-Web/2100-1038_3-5999200.html. பார்த்த நாள்: 2007-03-25. 
 19. Sanger, Larry (September 27, 2006). "Citizendium launch plan as of September 26". Citizendium-l mail list. https://lists.purdue.edu/pipermail/citizendium-l/2006-September/000476.html. பார்த்த நாள்: 2007-03-25. 
 20. Brian Bergstein (March 25, 2007). "Citizendium aims to be better Wikipedia". USA Today (அசோசியேட்டட் பிரெசு). http://www.usatoday.com/tech/webguide/2007-03-25-wikipedia-alternative_N.htm. பார்த்த நாள்: 2007-03-25. "This week, Sanger takes the wraps off a Wikipedia alternative, Citizendium. His goal is to capture Wikipedia's bustle but this time, avoid the vandalism and inconsistency that are its pitfalls." 
 21. Dawson, Christopher (February 23, 2007). "Citizendium seeks to be the Wikipedia you can cite". ZDNet இம் மூலத்தில் இருந்து 2008-01-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080112025550/http://education.zdnet.com/?p=870. பார்த்த நாள்: 2007-03-25. 
 22. Sanger, Larry (July 30, 2009). "[Citizendium-l] My recent absence". Citizendium. https://lists.purdue.edu/pipermail/citizendium-l/2009-July/001418.html. பார்த்த நாள்: 2009-07-30. 
 23. Sanger, Larry. "Consulting". larrysanger.org. http://larrysanger.org/consulting.html. பார்த்த நாள்: 2008-08-10. 

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Larry Sanger
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


en Larry Sanger

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரி_சாங்கர்&oldid=3715161" இலிருந்து மீள்விக்கப்பட்டது