உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:பயிற்சி (பதிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரவேற்பு   தொகுத்தல்   வடிவமைப்பு   உள்ளிணைப்புகள்   வெளியிணைப்புகள்   பேச்சுப்பக்கம்   கவனம் கொள்க   பதிகை   மறுஆய்வு    

பயனராக பதிவது விருப்பத் தேர்வாக இருப்பினும், நீங்கள் பயனர் கணக்கு ஒன்று ஏற்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

பயனர் கணக்கு இருப்பதோ இல்லாதிருப்பதோ விக்கிப்பீடியாவில் பங்களிக்க தடையேதுமில்லை. ஆனால் கட்டுரைகளை நகர்த்தப் பயனர் பெயர் தேவை.

பயனர் கணக்குத் துவங்க மூன்று காரணங்கள்:

பயனர் கணக்கு உள்ளவர்களுக்கு பல வசதிகள், தொகுத்தலிலும் பயனர் விருப்பங்களிலும் கிடைக்கின்றன. உங்களுக்கு ஆர்வமுள்ள பக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை பின்தொடர கவனிப்புப் பட்டியல் ஏற்படுத்திக்கொள்ளலாம். தவிர, உங்களால் ஓரு பக்கத்தை நகர்த்தவோ மறுபெயரிடவோ முடியும். (ஓர் பக்கத்தின் உள்ளடக்கத்தை வெறுமனே வெட்டி ஒட்டி நகர்த்தாதீர்கள்; இப்படி செய்யும்போது அப்பக்கத்தின் வரலாறு காப்பாற்றப்படாது. பதிலாக விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் யாரேனும் உட்பதிகை செய்த பயனரின் உதவியை நாடவும்.)

ஓர் உள்பதிகை செய்யாத பயனரின் கணினி ஐ.பி முகவரி (IP address) சேமிக்கப்பட்டு, அவரது அடையாளமாக பேச்சுப்பக்கங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஐ.பி முகவரியை பயன்படுத்தி பிறர் உங்கள் தனியான தகவல்களைப் பெற இயலும். பதிந்து கொள்வதன் மூலம் உங்கள் ஐபி மறைக்கப்பட்டு தனித்தகவல்களுக்கு பாதுகாப்பு கூடுதலாகிறது. தவிர ஐ.பி முகவரிகள் மாறக்கூடுமாதலால், உங்கள் தொடர்ந்த பங்களிப்புகளை ஒருங்கிணைக்க வியலாத மற்ற பயனர்களின் நன்மதிப்பைப் பெறுவது கடினம். பேச்சுப்பக்கங்களிலும் விவாதங்களை தொடர்வது கடினமாகும். பதிவதன் மூலம் தொகுத்தலிலும் பேச்சுப்பக்க விவாதங்களிலும் உங்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறீர்கள். ஆகையால் உங்கள் பங்களிப்பிற்கு அதிக மதிப்பு இருக்கும்.

இறுதியாக, கணக்குள்ள பயனர்கள் மட்டுமே நிர்வாகிகள் ஆக முடியும்.

நீங்கள் கணக்கொன்றை துவங்கினால், பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் மறக்காதீர்கள். பதிவு செய்யும்போது, உங்கள் மின்னஞ்சலையும் தவறாது கொடுங்கள்; மறந்த கடவுச்சொல்லை மீளமைக்க இந்த மின்னஞ்சல் பயன்படுத்தப்படும்.

மேலும் பார்க்க: ஏன் இணைய வேண்டும் ? (ஆங்கிலவிக்கி)

எப்படி பதிவது

[தொகு]

கணக்கு துவக்க, மேலுள்ள இணைப்பை சொடுக்கவும், அல்லது ஒவ்வொரு பக்கத்தின் மேலும் வலது மூலையில் உள்ள புகுபதிகை இணைப்பை சொடுக்கவும். உங்கள் பயனர் பெயரை பதிந்தபின்னர் (எளிதாக) மாற்ற இயலாது. ஆகையால் உங்கள் பயனர் பெயரை உருவாக்கும் முன் பயனர் பெயர் பக்கத்தை படிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

பயிற்சியை மறுஆய்வு செய்து மேல்தகவல்களை காண்போமா ?