விக்கிப்பீடியா:பயிற்சி (வடிவமைத்தல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா?

வரவேற்பு   தொகுத்தல்   வடிவமைப்பு   உள்ளிணைப்புகள்   வெளியிணைப்புகள்   பேச்சுப்பக்கம்   கவனம் கொள்க   பதிகை   மறுஆய்வு    

விக்கிப்பீடியா கட்டுரைகளை வடிவமைத்தல் மற்றபிற கணினி சொற்செயலிகளின் செயல்பாட்டிலிருந்து சற்றே வேறுபட்டது. அவற்றில் பயிலும் காண்பதே கோலம் (WYSIWYG) வழிமுறையில்லாமல் விக்கிப்பீடியா எழுத்துக்கோர்வைகளை பக்கத்தின் பல பாகங்களைக் குறிக்க பயன்படுத்துகிறது. தொகுத்தலுக்கு எளிதாக உள்ள இந்த "மொழி" பொதுவாக விக்கிடெக்ஸ்ட்(Wikitext) அல்லது விக்கி மார்க் அப்(Wiki-markup) என வழங்கப்படுகிறது.

தடித்த மற்றும் சாய்வு எழுத்துகள்[தொகு]

மிகவும் கூடுதலாக பயன்படுத்தப்படும் விக்கி குறிசொற்கள் எழுத்துக்களை தடித்தும் சாய்வாகவும் காண்பிக்க இருப்பவையாம். இவற்றை குறிக்க விக்கிமொழியில் வேண்டும் சொல் அல்லது சொற்றொடரின் இருபுறமும் மூன்று அல்லது இரு ஒற்றை மேற்கோள்குறிகளை(') பயன்படுத்துகிறோம்:

தட்டச்சுவது கிடைப்பது
''சாய்வு'' சாய்வு

'''தடித்த'''

தடித்த

'''''தடித்தும் சாய்ந்தும்'''''

தடித்தும் சாய்ந்தும்

விக்கிப்பீடியாவில், ஓர் கட்டுரைப் பொருளின் பெயர் முதல்முறையாக குறிப்பிடப்படும்போது தடித்து காட்டப்படுகிறது. காட்டாக, சென்னை பக்கம் துவங்கும்போது:

சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.

சாய்வு எழுத்துகள் புத்தகங்கள், திரைப்படங்கள்,இசைவட்டுகள் மற்றும் கணினி/காணொளி விளையாட்டுகள் பெயர்களை இடும்போது பயன்படுத்தப்படுகிறது. ஓர் கட்டுரைப்பொருளின் பொருள் புத்தகமாகவோ திரைப்படமாகவோ இருந்தால், முதல்முறையாக குறிப்பிடப்படும்போது தடித்தும் சாய்ந்தும் காட்டப்படுகிறது.

எவை எப்போது எப்படி பாவிப்பது என்பதற்கு காண்க: விக்கிப்பீடியா:நடைக் கையேடு.

தலைப்புகளும் துணைதலைப்புகளும்[தொகு]

தலைப்புகளும் துணைதலைப்புகளும் ஓர் கட்டுரையின் அமைப்பை மேம்படுத்தும் எளிதான வழிகளாகும். கட்டுரையில் வேறுபட்ட உள்ளடக்கங்கள் விவரிக்கப்படும்போது அவற்றை தலைப்புகள் கொடுத்து தனித்தனி பத்திகளாக அமைப்பது தேவையானதாகும்.

தலைப்புகளை இவ்வாறாக உருவாக்கலாம்:

தட்டச்சுவது கிடைப்பது

== தலைப்பு ==

தலைப்பு[தொகு]

=== துணைதலைப்பு ===

துணைத்தலைப்பு[தொகு]

ஓர் கட்டுரையில் குறைந்தது நான்கு தலைப்புகள் இருப்பின், ஓர் பொருளடக்கப் பெட்டி தானாகவே உருவாக்கப்படுகிறது. இப்பக்கத்தில் ஓர் தலைப்பு இட முயலவும் மணல்தொட்டி. ஏற்கெனவே மூன்று தலைப்புகள் இருப்பின்,உங்கள் தலைப்பு தானாகவே பொருளடக்கப்பெட்டியில் சேர்க்கப்படுவதை காணலாம்.

மீயுரை[தொகு]

மீயுரை (HTML) குறிகளை பயன்படுத்தி மேம்பட்ட வடிவமைப்புகளான வண்ணங்கள்,அட்டவணைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தலாம். ஆனால் விக்கிப்பீடியா பாவிக்க உங்களுக்கு அவற்றில் முன்அனுபவம் இருக்க வேண்டியதில்லை.

நீங்கள் பயின்றவற்றை மணல்தொட்டியில் முயலவும்
பயிற்சியை தொடர்க: உள் இணைப்புகள்