விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/இராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜ்குமார், அரியக்குடியைச் சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றுகிறார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். முழு அக எதிரொளிப்பு, மின்னழுத்தமானி, செம்மை நெல் சாகுபடி, கீற்று முடைதல், நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் பட்டியல், இயக்கி, எதிரொளிப்பு, அலைநடத்தி, மாறுதிசை மின்சார இயக்கி ஆகிய கட்டுரைகளில் முதன்மையாக பங்காற்றியுள்ளார் .