அரியக்குடி

ஆள்கூறுகள்: 10°02′53″N 78°47′15″E / 10.048135°N 78.787637°E / 10.048135; 78.787637
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியக்குடி
—  ஊராட்சி  —
அரியக்குடி
இருப்பிடம்: அரியக்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°02′53″N 78°47′15″E / 10.048135°N 78.787637°E / 10.048135; 78.787637
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அரியக்குடி (ஆங்கிலம் : Ariyakkudi), இது இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[4][5]

இவ்வூரானது காரைக்குடி நகராட்சியைச் சுற்றி உள்ள பன்னிரண்டு அரை கிராமங்களில் ஒன்று ஆகும் . அரியக்குடி, மேலாமாகானம், தளக்காவூர், அமராவதிபுதூர், பிளார், சேது ரெகுநாதப் பட்டணம் ஆகிய சில கிராமங்களை சேர்த்து மொத்தமாக பன்னிரண்டரை கிராமங்கள் என்று கூறுவது வழக்கம்.

கோயில்கள்[தொகு]

இவ்வூரில் 500 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு திருவேங்கடமுடையான் திருக்கோயிலும், சிவன் கோவிலும், செல்லாயியம்மன் கோவிலும், வேங்கனாயகி அம்மன் கோவிலும் உள்ளது.

ஆண்டு தோறும் மே மாத கடைசியில் அங்கே புகழ் பெற்ற பெருமாள் கோவிலில் திருவிழா நடக்கும். இந்தத் திருவிழவானது 13 நாட்கள் நடைபெறும். முதல் ஒன்பது நாட்கள் ஒவ்வொரு இரவும் கடவுளும் அவ்வூரைச்சுற்றி உலா வருவதாகவும், பத்தாம் நாள் தேர்த் திருவிழாவும், பதினொன்றாம் நாள் வெள்ளிரதமும், பன்னிரெண்டாம் நாள் மரரதமும், கடைசி நாளான பதிமூன்றாம் நாள் தெப்பம் ஆக படு விமர்சையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசியன்று இக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.[6]

யானை விளக்குகள் தயாரிப்பு[தொகு]

அரியக்குடி, யானை விளக்குகள் தயாரிப்பில் புகழுடைய கிராமம் ஆகும். பாரம்பரியமும் கலைநயமிகுந்ததுமான விதவிதமான பித்தளை விளக்குகள், ஐம்பொன் சுவாமி சிலைகள் உற்பத்தி ஆகியவற்றை செய்வதில் பேர் போனது.[7] இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் அங்கு உள்ளன. பழனி, திருச்செந்தூர், சபரிமலை கோயில், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் உற்பத்தி செய்து அனுப்பப்படுகிறது. நகரத்தார் பயன்படுத்தும் செட்டிநாடு விளக்குகள், திருமண சீர்வரிசை போன்றவையும் இங்கு எல்லா மாதங்களிலும் உற்பத்தி நடந்து கொண்டே தான் இருக்கும்.

இதனையும் பாருங்கள்[தொகு]

அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
  7. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=69533

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியக்குடி&oldid=3541642" இலிருந்து மீள்விக்கப்பட்டது