எதிரொளிப்பு
எதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு அல்லது ஒளித்திருப்பம் (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.
நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஓர் அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும்.[1][2][3]
ஒலியியலில், இதனை எதிரொலிப்பு என்பார்கள். எதிரொலிப்பு உருவாக்கும் ஒலிக்கு எதிரொலி (echo) என்று பெயர். இதனை ஒலி மாற்றுணரியில் பயன்படுத்துகின்றனர். நிலவியலில் , நிலநடுக்க அலைகளைப் பற்றிய பாடங்களில் இது முக்கியமானவை . நீர்நிலைகளில் உள்ள மேற்பரப்பு அலைகளில் எதிரொலிப்பு (எதிரொளிப்பு) கண்டறியப்படுகிறது . காண்புறு ஒளிக்கிடையில் , பல வகையான மின்காந்த அலைகள் காணப்படுகின்றன . உயர் அதிர்வெண்ணும் , அதி உயர் அதிர்வெண்களின் எதிரொளிப்புகள் வானொலி சேவையிலும் , ரேடாரிலும் முக்கியமானவையாகும் . ஏன் காமா கதிர்களும் , ஊடுகதிர் அலைகளும் சில கோணங்களில் தனிரக கண்ணாடிகளில் எதிரொளிக்கப்படுகிறது.
ஒளியின் தெறிப்பு
[தொகு]இவ்வொளி எதிர்வுகளை நன்றாக ஆய்ந்து பல உண்மைகளை நிறுவியிருக்கிறார்கள். இதில் சிநெல் (Snell) என்பாரின் விதிகள் எளிதாக அறியவல்லவை. ஒளி எதிரக்கூடிய ஒரு சமதளத்தில் ஒளியானது அச்சம தளத்தின் செங்குத்துக் கோட்டுக்கு ஒரு குறிப்பிட்ட கோணத்திலே சென்று மோதினால், எதிர்ந்து செல்லும் ஒளியும் அதே கோணத்தில் அச்செங்குத்துக்கு கோட்டிலிருந்து விலகி எதிர்த் திசையில் செல்லும். இதனை படத்தின் உதவியால் எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.
படத்தில், ஒளிக்கதிர் PO நிலைக்குத்துக் கண்ணாடியொன்றை O என்ற புள்ளியில் மோதி, OQ என்ற காதிராகத் தெறிக்கிறது. கண்ணாடியின் தளத்துக்குச் செங்குத்தாக O என்ற புள்ளியில் இருந்து ஒரு நேர்கோட்டை வரைந்தால் படுகோணம் θi, தெறிகோணம் θr ஆகியவற்றைக் கணக்கிடலாம். தெறிப்பு விதியின் படி, θi = θr, அதாவது, படுகோணம் தெறிகோணத்துக்குச் சமனாக இருக்கும்.
கண்ணாடி எதிர்வு விதிகள்
[தொகு]எதிரொளிக்கும் மேற்பரப்பு வழமையாக அல்லது கண்ணாடி போன்று இருந்தால் , அந்த ஒளியின் எதிரொளிப்பை ஒழுங்கான எதிரொளிப்பு அல்லது கண்ணாடி எதிரொளிப்பு (Specular reflection)என்று கூறுவர் .
அவ்வொளி எதிர்வு விதிகள் பின் வருமாறு :
1. எதிர்வு பரப்பில் உள்ள ஒளிப்படு புள்ளிக்கு செங்குத்தும் , படுகின்ற கதிரும் , எதிர்கின்ற கதிரும் ஒரே தளத்தில் இருக்கும் .
2. எதிர்வு பரப்பின் செங்குத்துக்கும் படுகின்ற கதிருக்கும் உள்ள கோணமும் , அச்செங்குத்துக்கும் எதிர்கின்ற கதிருக்கும் உள்ள கோணமும் சமம் ஆகும் .
3. ஒளியின் பாதைகள் மீளக்கூடியவை (reversible).
பிற வகை எதிரொளிப்பு
[தொகு]பரவல் எதிரொளிப்பு
[தொகு]ஒளி ஒரு சமதளமற்ற பகுதியில் மோதும் பொழுது , அந்த தளத்தில் உள்ள நுண்ணிய மேடுகளினால் ஒளி பல திசைகளில் தெறித்து ஓடும் . இவ்வகையான எதிரொளிப்பை பரவல் எதிரொளிப்பு அல்லது ஒளிச் சிதறல் என்று கூறலாம். இவ்வாறு , எந்த ஒளிபிம்பமும் தானாக உருவாகுவது இல்லை . மேலாக அவை ஒவ்வொரு பொருளும் எதிரொளிக்கின்றது அல்லது பிரதிபலிக்கின்றது . ஒளியின் உருவமானது அவை எதிரொளிக்கும் மேற்பரப்பை சார்ந்ததாகும் . ஒரு பொதுவான பரவல் எதிரொளிப்பு உதாரணம் என்னவென்றால் அது லம்பெர்தியர் எதிரொளிப்பு (Lambertian reflectance) ஆகும் . லம்பெர்தியர் எதிரொளிப்பு என்றால் ஒரு ஒளியானது ஒரே ஒளியூட்டத்திலோ அல்லது ஒரே கதிரலையிலோ பல திசைகளில் தெறித்து ஓடுவதாகும் ; இதனை லம்பெர்தியர் கோசைன் விதியில் விவரிக்கப்பட்டுள்ளது .படுகோணமும் மீள் கோணமும் சமம், படுதானம், மீள்தானம், படுதானத்தில் இருந்து வரையப்படும் லம்பம் ஆகியவை ஒரு நேர்கோட்டில் அமையும்.
நொதுமி தெறிப்பு
[தொகு]நொதுமிகள் தெறிக்கும் பொருட்களை அணுகுண்டிலும் , அணுக்கரு உலையிலும் பயன்படுத்துகின்றனர் . ஒரு பொருளுக்குள்ளேயே அணுவின் நொதுமிகள் தெறிப்பதை இயற்பியலிலும் , உயிரியலிலும் , அதன் அக அமைப்புகளை விளக்குவதற்கு பயன்படுத்துவர் .
எதிரொலிப்பு
[தொகு]ஒரு தட்டையான மேற்பரப்பில் நீளவாக்கில் ஒளியானது மோதுகையில் , ஒளியின் அலையகலத்தை விட அதிக எதிரொலிப் பரப்பு அளவு அடையுமாறு சீராக ஒலி எதிரொலிக்கிறது . கேட்கக்கூடிய ஒலியானது மிகவும் பரந்த அதிர்வெண் வீச்சை கொண்டனவாகும் என்பதை கவனிக்க வேண்டும் ஆகையால் அவை பரந்த அலையகலங்களையும் கொண்டனவை ஆகும் .
நிலநடுக்க எதிரலைகள்
[தொகு]நிலநடுக்க எதிரலைகள் நிலநடுக்கம் அல்லது நிலவெடிப்புகள் போன்ற வேறு சில ஆதாயங்கள் அனைத்தும் பூமியின் அடுக்குகளின் எதிரலைகள் ஆகும் . இது போன்று நிலநடுக்கத்தினால் ஏற்படும் அலைகளின் எதிர்வுகளை பற்றி படிப்பதினால் நில அதிர்வு ஆய்வாளர்கள் பூமியின் அடுக்கு அமைப்பினை விவரிக்க உதவுகின்றது . ஆழமான எதிரலைகள் நில அதிர்வு ஆய்வினில் புவியோடினை ( Earth Crust ) பற்றி அறிவதற்கு பயன்படுகின்றது . மேலும் இவை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு இருப்பினை அறிய உதவுகிறது .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lekner, John (1987). Theory of Reflection, of Electromagnetic and Particle Waves. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789024734184.
- ↑ M. Iona (1982). "Virtual mirrors". Physics Teacher 20 (5): 278. doi:10.1119/1.2341067. Bibcode: 1982PhTea..20..278G. https://archive.org/details/sim_physics-teacher_1982-05_20_5/page/278.
- ↑ I. Moreno (2010). "Output irradiance of tapered lightpipes". JOSA A 27 (9): 1985–1993. doi:10.1364/JOSAA.27.001985. பப்மெட்:20808406. Bibcode: 2010JOSAA..27.1985M. http://fisica.uaz.edu.mx/~imoreno/Publicaciones/JOSA2010.pdf.
வெளி இணைப்புகள்
[தொகு]- Acoustic reflection பரணிடப்பட்டது 2019-01-04 at the வந்தவழி இயந்திரம்
- Animations demonstrating optical reflection by QED
- Simulation on Laws of Reflection of Sound By Amrita University