மாறுதிசை மின்சார இயக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது தொழிற்சாலையைச் சார்ந்த மாறுதிசை மின்சார இயக்கி ஆகும், மேல்புறம் மின் முனைய பெட்டியும், இடதுபுறம் சூழலும் வெளீயிட்டு தண்டும் கொண்டுள்ளது. இத்தகைய மோட்டார்கள் பரவலாக குழாய்கள், புளோயர், கன்வேயர் மற்றும் பிற தொழில்துறை இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

மாறுதிசை மின்சார இயக்கி அல்லது மாறுதிசை மின் சுழற்பொறி ( Alternating Current Motor ) அல்லது மா.தி இயக்கி ( AC Motor ) என்பது மாறுதிசை மின்னோட்டத்தால் இயக்கம் ஒரு மின்சார இயக்கி ஆகும் . இதில் இரண்டு முக்கியமான பாகம் உண்டு . அவை நிலையகம் மற்றும் சுற்றகம் ஆகும் . நிலையகம் என்பது மேலாக இருக்கும் சுருள் (coil) கம்பிகள் ஆகும் . நிலையகம் மாறுதிசை மின்னோட்டம் தன்மீது பாயும் பொது காந்தப்புலத்தை உருவாக்கும் . சுற்றகம் என்பது உள்ளே இருப்பதாகும் . இது மின்தண்டு (shaft) உடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆகும் . இந்த தண்டானது காந்தப் புலத்தினால் முறுக்கு விசை ஏற்பட்டு சுற்றக்கூடியதாகும் .

மாறுதிசை மின்சார இயக்கிகள் அதன் சுற்றகத்தின் காரணமாக இரண்டு வகைப்படும் . அவை மாறுதிசையொத்த மின்சார இயக்கி மற்றும் மாறுதிசை தூண்டல் இயக்கி ஆகும் . மாறுதிசையொத்த இயக்கிகள் செலுத்தும் அதிர்வெண்ணை ஒத்து இயங்கும் இயக்கிகள் ஆகும் . சுற்றகத்தின் காந்தப் புலத்தை சரிவு வளையங்கள் அல்லது நிலைக்காந்தம் உருவாக்கும் மின்சாரத்தினால் ஏற்படும் .

மற்றொரு இயக்கி ஆனது தூண்டல் இயக்கிகள் . இவை செலுத்து அதிர்வெண்ணை விடை குறைவான அதிர்வெண்ணில் இயங்கும் . சுற்றகத்தின் காந்தப்புலம் தூண்டு மின்சாரத்தினால் ஏற்படும்.

வரலாறு[தொகு]

1882 ல் செர்பியா ஆராய்ச்சியாளர் நிகோலா டேச்ட்லா என்பவர் மாறுதிசைமின்னாக்கியில் பயனாகும் சுழலும் தூண்டல் காந்தப் புலக் கொள்கையை கண்டறிந்தார் . இந்த சுழல் மற்றும் தூண்டல் மின்காந்த புலத்தை பயன்படுத்துதலால் சுழுலும் இயந்திரங்களில் முறுக்கம் ஏற்படுத்த உதவுகிறது . இந்தக்கொள்கை தான் 1883 ல் பன்னிலை தூண்டல் இயக்கிகளை வடிவமைக்க உதவியது . 1885 ல் கலிலியோ பெரரிஸ் என்பவர் இந்த கொள்கையை தனியாக ஆராய்ந்தார் . 1888 ல் கலிலியோ பெரரிஸ் தனது ஆய்வுகளை ஒரு காகிதத்தில் துரினில் உள்ள ராயல் அகாடமி ஆப் சயன்சஸ் இடம் வெளியிட்டார் .

இந்தக் கண்டுபிடிப்பு காலகட்டத்தை (1888 ல் இருந்து ) இரண்டாம் தொழிற்சாலை படிவளர்ச்சி என்றும் டேச்ட்லா கண்டுபிடிப்பு காலம் என்றும் கூறலாம் ஏனென்றால் இந்தக் காலத்தில் தான் திறனாக மின் உற்பத்தி செய்வதும் , தொலை தூரங்கள் மின்சாரத்தை கடத்தும் படியான வளர்ச்சி ஏற்பட்டது ஆகும் .

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறுதிசை_மின்சார_இயக்கி&oldid=2937794" இலிருந்து மீள்விக்கப்பட்டது