கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்பக்கம் தமிழ் விக்கிபீடியாவில் குறிப்பிடத்தக்கமை வழிகாட்டல் தொடர்பான நடைமுறைகளை ஆவணப்படுத்துகிறது. கட்டாயமில்லை எனினும் இங்கு கூறப்பட்டுள்ளவற்றை பின்பற்றுமாறு வேண்டப்படுகிறீர்கள். விதிவிலக்குகள் தோன்றினால் பகுத்தறிவுடன் கூடிய நடைமுறையைப் பின்பற்றுங்கள்! முரண்பாடுகள் தோன்றின் பொது இணக்கத்தை அடையுமுன்னர் மாற்றங்களைச் செய்யாதிருங்கள்! முரண் களைய இதன் பொது பேச்சுப் பக்கத்தைப் பயன்படுத்துங்கள்!
இப்பக்கம் சுருக்கமாக: புவியியல் சிறப்புக்கூறுகளைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள கட்டுரைகளுக்கான குறிப்பிடத்தக்கமை நெறிகள் சுருக்கமாக:
ஒரு புவியியல் நிலப்பரப்பு, இருப்பிடம், இடம் அல்லது பிற பொருள் நம்பகமான மூலங்களில் சிறப்பாக முழுக்கவிளவப்பட்டிருந்தால் (coverage) அது குறிப்பிடத்தக்கதெனக் கருதப்படுகிறது. செயற்கை அமைப்புகளைப் பொறுத்தவரை, அவை வணிகநோக்கு போன்ற தனிவிருப்பம் கொண்ட அமைப்புகளிடமிருந்து பெறப்படாத தனித்துவமிக்க நம்பகமான மூலங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, மக்கள் தொகை கொண்ட இடங்கள் அவற்றின் மக்கள் தொகை எவ்வளவு குறைவாக இருந்தாலும் குறிப்பிடத்தக்கதெனக் கருதப்படுகிறது. கைவிடப்பட்ட இடங்களும் குறிப்பிடத்தக்கதாக இருக்கக்கூடும், ஏனென்றால் குறிப்பிடத்தக்கமை என்பது அவற்றின் முழு வரலாற்றையும் உள்ளடக்கியது. ஒரு விதிவிலக்கு என்னவென்றால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பகுதிகள் பொதுவாக குறிப்பிடத்தக்கெனக் கருதப்படுவதில்லை. எளிய புள்ளிவிவரங்களுக்கு அப்பாற்பட்ட சரிபார்க்கக்கூடிய தகவல்களைக் கொண்ட பாதுகாக்கப்பட்ட நிலையுள்ள இடங்கள் (எ.கா. பாதுகாக்கப்பட்ட பகுதிகள், தேசிய பாரம்பரிய தளங்கள், பண்பாட்டு பாரம்பரிய தளங்கள்) மற்றும் பெயரிடப்பட்ட இயற்கை அமைப்புகள் குறிப்பிடத்தக்கவை என்று கருதப்படுகின்றன.
அடையாளம் காணக்கூடிய சிறிய புவியியல் அமைப்புகளைப் பெரிய அமைப்புகளுக்கான கட்டுரைகளுக்குள் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது.