விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை (புவியியல் சிறப்புக்கூறுகள்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடர்புடைய உரையாடல்கள்[தொகு]

பேச்சு:கும்பகோணம் நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் பக்கத்தில் இருந்து:

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அனைத்துக் கோயில்கள் பற்றியும் கட்டுரைகள் இருக்க வேண்டும். கோயில்களே ஊருக்கும் சிறப்புத் தருவன. சிறிதோ பெரிதோ, மக்கள் வாழ்கிறார்களோ இல்லையோ, அதிகாரபூர்வமான ஊர்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்கவையே. அதே போன்றே கோயில்களும்.--Kanags \உரையாடுக 06:47, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
Kanags, சற்று முரண்படுகிறேன். ஊர்களைப் பொருத்தவரை கூட ஊராட்சி அளவில் நிருவாக அலகுகளுக்கே தனிக்கட்டுரைகள் எழுதுகிறோம். ஒவ்வொரு சிற்றூர் என்ற அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் குறிப்பிடத்தக்கமை கிடையாது. கோயில்களுக்கும் இது போன்ற பரந்துபட்ட குறிப்பிடத்தக்கமை வரையறை இருப்பது நன்று. தமிழகக் கோயில்களில் பல வகை உண்டு. மிக அண்மையில் கட்டப்பட்ட மரம் / குளம் அருகே உள்ள சிறிய, தனியார் கோயில்களைக் குறித்து எப்படி கலைக்களஞ்சிய முக்கியத்துவம் தந்து கட்டுரைகள் எழுத முடியும் என்று எனக்குத் தெளிவில்லை. இக்கருத்து அனைத்துச் சமய வழிபாட்டு இடங்களுக்கும் பொருந்தும். விக்கிப்பீடியா ஒரு தரவுத்தளம் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.--இரவி (பேச்சு) 06:59, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
//ஒவ்வொரு சிற்றூர் என்ற அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் குறிப்பிடத்தக்கமை கிடையாது.// உள்ளது.--Kanags \உரையாடுக 08:15, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

//geographical features meeting Wikipedia's General notability guideline (GNG) are presumed, but not guaranteed, to be notable.// //A geographical area, location, place or other object is presumed to be notable if it has received significant coverage in reliable sources that are, in the case of artificial features, independent of the bodies which have a vested interest in them.// https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28geographic_features%29 --இரவி (பேச்சு) 08:36, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

//Populated, legally recognized places are typically presumed to be notable, even if their population is very low. Even abandoned places can remain notable, because notability encompasses their entire history. One exception is that census tracts are usually not considered notable.// இதனை யாரும் மொழிபெயர்ப்பீர்களா?--Kanags \உரையாடுக 08:49, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஊர்களின் குறிப்பிடத்தக்கமை[தொகு]

பொதுவாக, விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்கமை குறித்து இரு அணுகுமுறைகள் உள்ளன:

1. ஒவ்வொரு கட்டுரையாக, அதில் தரப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் அல்லது அத்தலைப்பு குறித்து குறிப்பிடும் வகையிலான தகவல், சான்றுகள் சேகரிக்க வாய்ப்புகள் அடிப்படையில் குறிப்பிடத்தக்கமையை ஏற்றுக் கொள்வது.

2. ஒரு துறை சார்ந்து, இன்னின்ன அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அனைத்துத் தலைப்புகளுமே குறிப்பிடத்தக்க தலைப்புகள் தாம் என்று வரையறுத்து ஏற்றுக் கொள்வது. எடுத்துக்காட்டுக்கு, முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய அனைவருமே குறிப்பிடத்தக்கவர்கள் என்று ஆங்கில விக்கிப்பீடியா வழிகாட்டல் சொல்கிறது. அல்லது, IMDBயில் பதிவான அனைத்துப் படங்களுக்கும் கட்டுரை எழுதலாம் என்பது போன்ற ஒரு வரையறை.

முதல் அணுகுமுறையின் பயன் என்னவென்றால், ஒவ்வொரு கட்டுரையும் ஐயத்துக்கு இடமின்றி குறிப்பிடத்தக்க தலைப்பு என்று நிறுவினால் மட்டுமே நீடிக்கும். இடர் என்னவென்றால், பல கட்டுரைகளில் நீண்ட நெடிய உரையாடல்கள், தேவையற்ற அலைக்கழிப்புகள் இருக்கலாம்.

இரண்டாம் அணுகுமுறையின் பயன் என்னவென்றால், தேவையற்ற உரையாடல்களைத் தவிர்க்கலாம். இடர் என்னவென்றால், கலைக்களஞ்சியம் என்பதில் இருந்து மாறி, குறிப்பிட்டு எழுத ஒன்றுமேயில்லாத, மேற்கொண்டு தகவலோ ஆதாரமோ சேர்த்து விரித்து எழுத வாய்ப்பே இல்லாத, ஒரே மாதிரியான பல கட்டுரைகள் தரவுகளை மட்டும் மாற்றி மாற்றி இட்டு ஒரு தரவுத்தளம் போன்று விக்கிப்பீடியா மாறி விடும் வாய்ப்பு.

எல்லா துறைகளுக்கும் இரண்டாம் அணுகுமுறையின் படி வரையறுப்பது சிரமம். அதே போல், இவ்வரையறையும் ஒவ்வொரு விக்கிப்பீடியாவுக்கும் மாறலாம். எடுத்துக்காட்டுக்கு, நாம் ஏதேனும் எழுதியிருந்தாலே எழுத்தாளர் என்று ஏற்றுக் கொண்டு விக்கிப்பீடியா கட்டுரை இட்ட நிகழ்வுகள் உண்டு. ஆனால், மலையாள விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க மூன்று விருதுகளாவது வாங்கியிருக்க வேண்டும் என்பது போல் வரையறை உண்டு. இவ்வரையறை, அடுத்து எது குறிப்பிடத்தக்க விருது என்று அதற்கு ஒரு வரையறை வகுப்பதில் போய் நிற்கும். இப்படி, குறிப்பிடத்தக்கமை வரையறைகள் தொடர் உரையாடல்களாக நீளும் வாய்ப்பு உண்டு.

இவ்விரு அணுகுமுறைகளுக்கு அடுத்து, உள்ளூர் முக்கியத்துவம் என்ற அடிப்படையில் குறிப்பிடத்தக்கமையை ஏற்றுக் கொள்வதும் விக்கிப்பீடியா இயங்கும் சூழலைக் கருதும் போது நடப்பில் உள்ளது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு பாடல் எழுதிய சங்ககாலத் தமிழ்ப்புலவர் ஏன் முக்கியமானவர் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம். ஆனால், அதனை இடாயிட்சு மொழி விக்கிப்பீடியாவில் நிறுவுவது அவ்வளவு இலகு அன்று. எனவே, இந்த இடங்களில் உலக அளவிலான குறிப்பிடத்தக்கமை எதிர்பார்ப்புகளைச் சற்றுத் தளர்த்தி ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால், இந்தத் தளர்வினை சீரான முறையில் நடைமுறைப்படுத்துகிறோமா என்றால், இல்லை என்ற கருத வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, ஒரே ஒரு நூலினை உசாத்துணையாக ஏற்றுக் கொண்டு, இசுலாமிய எழுத்தாளர்கள் பற்றி ஒரே பயனர் எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகளை ஏற்றிருக்கிறோம். ஆனால், வேறு பல எழுத்தாளர்களுக்கோ இன்னும் இறுக்கமான குறிப்பிடத்தக்கமை எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறோம். நூல்கள் தொடர்பான கட்டுரைகளுக்கும் இந்தச் சீரற்ற அணுகுமுறை பொருந்தும்.

உலகத்து ஊர்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் தருகிறோம், தமிழ்நாட்டு ஊர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாதா என்ற கேள்வி எழுகிறது. அப்படி, முக்கியத்துவம் தந்ததனால் தான் ஊராட்சிகள் தொடர்பாக 10,000+ கட்டுரைகளை உருவாக்கினோம். ஆனால், ஊராட்சிகளைத் தாண்டி சிற்றூர்களுக்கும் கட்டுரை எழுதலாம் எனும் போது, அவை குறிப்பிடத்தக்கவை தானா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பிடத்தக்க சில சிற்றூர்கள் இருக்கலாம். ஆனால், 99% சிற்றூர்கள் ஒரு கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடும் அளவுக்கு எவ்வகையான சிறப்பு வாய்ந்த தகவலையோ ஆவணப்படுத்திய வரலாற்றையோ கொண்டிருப்பதில்லை என்பதை இத்தகைய ஊர்களில் வாழ்ந்தவன் என்ற முறையில் குறிப்பிட முடியும். இத்தகைய ஊர்களை 10 கிலோ மீட்டர் தாண்டிச் சென்று குறிப்பிட்டால் பக்கத்து ஊர்க்காரர்களுக்கே கூட தெரியாது. ஒரே பெயரில் பல ஊர்கள் உள்ளன. இவற்றில் பல ஊர்களுக்கு பேருந்து கூட வராது. பள்ளிக்கூடம், மருத்துவமனை என்று எந்தப் பொதுவசதியும் இருக்காது. ஒரு சில தெருக்களும் குடும்பங்களும் குடியிருக்கலாம். ஓரிரு கடைகள் இருக்கலாம். ஏதாவது ஒரு எதிர்மறையான செய்தி வந்தால் ஒழிய இவ்வூர்களைப் பற்றிய பதிவு கூட செய்தித் தாள்களில் இருக்காது. இவற்றைப் பற்றி கட்டுரை எழுத வேண்டும் என்றால் இந்த ஊர் இந்த இடத்தில் இருக்கிறது, இங்கு இத்தனைப் பேர் வாழ்கிறார்கள் என்பது தாண்டி எழுத ஒன்றுமில்லை. இத்தகைய தகவலை ஏற்கனவே உள்ள ஊராட்சிகள் தொடர்பான கட்டுரையிலேயே சேர்க்க முடியும். தனிக்கட்டுரை எழுத போதுமான தனித்துவமான உள்ளடக்கம் இல்லை. இத்தகைய கட்டுரைகள் தரவுத்தளத்தில் மட்டுமே இடம்பெறத்தக்கவை என்பது என் கருத்து. நன்றி.--இரவி (பேச்சு) 08:24, 20 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

கட்டுரை எழுதுவதற்குப் போதுமான அளவு தகவல்கள் இருக்கும் பட்சத்தில் அக்கட்டுரையை ஏற்பதில் என்ன தவறு? போதுமான அளவு தகவல்கள் எழுதப்பட்டிருந்தும், அவ்வூர் குறிப்பிடத்தக்கமை இல்லை என்ற காரணம் காட்டி நீக்கப்படக் கூடாது என்பதெயே நான் சொல்ல வருகிறேன். எங்கோ உள்ள தென் கொரிய தொலைக் காட்சி நடிக, நடிகையருக்கு மூன்று வரிக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. கொரிய மொழிப் பத்திரிகை (அது பத்திரிகையா அல்லது விளம்பர இணையமா என்றும் அறிய முடியவில்லை) ஒன்றில் இருந்து மேற்கோள் வேறு. இவ்வாறான கட்டுரைகளும் (குறிப்பிடத்தக்கமை) கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 09:26, 20 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
@Kanags:, ஊர்கள் தொடர்பான கட்டுரைகள் குறிப்பிடத்தக்கமை காரணமாக நீக்கப்பட்டிருந்தால் எடுத்துக்காட்டுகள் தர வேண்டுகிறேன்.
//எங்கோ உள்ள தென் கொரிய தொலைக் காட்சி நடிக, நடிகையருக்கு மூன்று வரிக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. கொரிய மொழிப் பத்திரிகை (அது பத்திரிகையா அல்லது விளம்பர இணையமா என்றும் அறிய முடியவில்லை) ஒன்றில் இருந்து மேற்கோள் வேறு.// இதே ஏரணத்தில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து "எழுத்தாளர்களைப்" பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் விக்கிப்பீடியாவில் கட்டுரை வேண்டும் என்று கோரப்படும். எனவே, இந்த ஏரணத்தைத் தவிர்க்கலாம். அந்தந்த துறையில் குறிப்பிடத்தக்கமை இருக்கிறதா என்று பார்த்தால் போதுமானது.
//போதுமான அளவு தகவல்கள் எழுதப்பட்டிருந்தும், அவ்வூர் குறிப்பிடத்தக்கமை இல்லை என்ற காரணம் காட்டி நீக்கப்படக் கூடாது// குறிப்பிடத்தக்கமை இல்லாத பல தலைப்புகளுக்கு ஒரு சிறப்புக் கட்டுரையின் நீளத்துக்குத் தகவலைக் குவிக்க முடியும். ஆனால், இவ்வாறு தகவலைக் குவிப்பது அத்தலைப்பு குறிப்பிடத்தக்கது என்பதற்கான உறுதியை அளிக்காது. en:Wikipedia:Notability பின்வருமாறு குறிப்பிடுகிறது: Wikipedia articles cover notable topics—those that have gained sufficiently significant attention by the world at large and over a period of time, and are not outside the scope of Wikipedia. We consider evidence from reliable independent sources to gauge this attention. The notability guideline does not determine the content of articles, but only whether the topic should have its own article.--இரவி (பேச்சு) 09:38, 20 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
இது ஒரு தேவையற்ற விவாதம் என்றே எனக்குப் படுகிறது. அவ்வப்போது இவ்வாறு சில உப்புச் சப்பில்லாத பிரச்சினைகளைக் கிளறிக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.--Kanags \உரையாடுக 11:21, 20 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
Kanags, பேச்சு:கும்பகோணம் நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் பக்கத்தில் சிற்றூர்கள் குறிப்பிடத்தக்கன என்று கருத்தை முன்வைத்தீர்கள். பிறகு, தொடர்பே இல்லாத பேச்சு:மக்கள் தொகை அடிப்படையில் ஈரான் நகரங்களின் பட்டியல் பக்கத்தில் இவ்வுரையாடலைத் தொடர்ந்து எனக்குக் குறிப்பும் இட்டிருந்தீர்கள். எனவே, இவ்வுரையாடல் பல்வேறு பக்கங்களிலும் சிதறிக் கிடக்க வேண்டாம் என்றே இங்கே உரையாடலைத் தொடர்கிறேன். எந்த ஊரைப் பற்றிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கமை காரணமாக நீக்கப்படவில்லை எனும் போது, தற்போது இது தொடர்பாக ஒரு முடிவை நோக்கிச் செல்ல வேண்டிய அவசரம் இல்லை தான். உங்கள் மாற்றுக் கருத்துகளை வரவேற்கிறேன். பங்களிப்பாளர்கள் பற்றிய கருத்தைத் தவிர்க்கவும். --இரவி (பேச்சு) 05:49, 21 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]