வாஸ்தவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாஸ்தவம்
இயக்கம்எம். பத்மகுமார்
கதைபாபு ஜனார்ததன்
இசைஅலெக்ஸ் பால்
சி. ராஜாமணி (பின்னணி)
நடிப்புபிரித்விராஜ் சுகுமாரன்
காவ்யா மாதவன்
சம்விருதா சுனில்
முரளி
ஜெகதே சிறீகுமார்
சிந்து மேனன்
ஒளிப்பதிவுமனோஜ் பிள்ளை
படத்தொகுப்புஎல். பூமிநாதன்
கலையகம்சிறீசகரா பிலிம்ஸ் பிரவேட் லிமிடட்
விநியோகம்சிறீசகரா பிலிம்ஸ் ரிலீஸ்
வெளியீடு10 நவம்பர் 2006
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

வாஸ்தவம் (Vaasthavam, பொருள் : உண்மை ) என்பது 2006 ஆம் ஆண்டய இந்திய மலையாள மொழி அரசியல் திரில்லர் திரைப்படமாகும். இதை பாபு ஜனார்த்தனன் எழுத எம். பத்மகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையானது பாலச்சந்திரன் அடிகா ( பிரித்விராஜ் சுகுமாரன் ) என்ற இளைஞரைச் சுற்றி வருகிறது அரசியலில் அவரது எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப் பற்றியதாக இப்படம் உள்ளது. இப்படத்தின் கதையானது தகழியின் புதினமான ஏணிப்படிகளை தழுவியது ஆகும்.

இப்படத்தில் நடித்த பிருத்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார். மேலும் 24 வயதில் இந்த விருதைப் பெற்ற இளைஞர் என்ற பெருமையையும் பெற்றார்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

திரைப்படத்தின் பாடல்களுக்கான இசையை மெஸ்ட்ரோ அலெக்ஸ் பால் அமைக்க, பாடல்களை கிரீஷ் புத்தன்சேரி எழுதியுள்ளார்.

வ. எண் பாடல் கலைஞர் (கள்) இராகம்
1 அரா பவன் விது பிரதாப், ரிமி டோமி தர்மவதி
2 கதம் கொண்டா வித்யாதரன் சிந்து பைரவி
3 நாதா நீ வரும்போல் கே.எஸ் சித்ரா சகானா
4 நிண்டதி சந்தணா டிரடிசனல்

வரவேற்பு[தொகு]

இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.   [ மேற்கோள் தேவை ]

விருதுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஸ்தவம்&oldid=2956397" இலிருந்து மீள்விக்கப்பட்டது