வாழையிலைச் சோறு கறி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாழையிலையில் சோறையும், பல்வேறு கறிகளையும் பரிமாறி உண்பது வாழையிலைச் சோறு கறி அல்லது வாழையிலைச் சாப்பாடு ஆகும். இது தென்னிந்திய, ஈழத்து முதன்மை உணவு வகைகளில் ஒன்றாகும். விருந்துகளின் போது இவ்வாறு சிறப்பாகப் பரிமாறாப்படும். வாழையிலை உணவை இடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறதே தவிர அது உண்ணப்படுவதில்லை.
பொதுவாக வழங்கப்படும் கறிகள்
[தொகு]- பருப்புக் கறி
- வறை (கோவா, கரட், முருங்கை, பல வகை)
- கீரைக் கறி (பல வகை)
- குழம்பு (கத்தரி/வெண்டை/முருங்கை)
- பிரட்டல் (பயற்றங்காய், உருழைக்கிழங்கு)
- பால் கறி (பூசணி, மரவெள்ளி, பீட்ரூட், அவரை)
- மீன் கறி, இறைச்சிக் கறி
- பொரியல் (மிளகாய், வாழைக்காய்
- அப்பளம்
- ஊறுகாய்
- வடகம்
- இரசம்
- தயிர்
வெளி நாடுகளில் பரவல்
[தொகு]தமிழர்களும், தென்னிந்தியர்களும் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்சு போன்ற நாடுகளிலும் வாழையிலைச் சாப்பாடு தென்னிந்தியர்கள் அல்லாதவர்களிடமும் விரிவாகப் பரவி வருகிறது. மேற்குநாடுகளில் ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கு பல் வகையான அதிக உணவு கிடைப்பதாலும் பலர் இதனை விரும்புகின்றனர்.