வடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளிச்சாறில் சேர்த்து உணவாகவும், பொடி செய்து மருந்தாகவும் உட்கொள்ளும் உலர்த்திய வேப்பம்பூக்கள்

வடகம் என்பது வேப்பம் பூ, பிரண்டை, வாழைப் பூ, அதலைக்காய் போன்றவற்றை உலர்த்தி செய்யப்படும் ஒரு வகை உணவு ஆகும். இது தமிழர் சமையலில் இடம்பெறுகிறது. இவற்றில் ஒன்றோடு உளுந்து, சீரகம், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, மிளகாய் போன்ற சுவைப்பொருட்களையும் சேர்த்து குளைத்து தட்டையாக தட்டி, வெயிலில் காயவைத்து வடகம் செய்யப்படும்.

வடகங்கள் நீண்டகாலம் வைத்துப் பயன்படுத்தக் கூடியவை. ஆகையால் ஒரு உணவுப் பொருள் கூடிய காலத்தில் வடகமாகச் செய்து வைத்துப் பாதுகாக்கலாம். இவை சோறு, புட்டு என்று பல வகை உணவுகளோடு சேர்த்து உண்ணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகம்&oldid=3248888" இலிருந்து மீள்விக்கப்பட்டது