வாழறும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழறும்பு, தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், கடவூர் ஊராட்சிப் பகுதியில் உள்ள சிறு மலைத் தொடர்களில் ஒன்றான புள்ளமுழுங்கி மலையில், அழகிய நீரூற்று உள்ளது. இதனை வாழறும்பு சுனை என்பர். புள்ளமுழுங்கி மலையின் அடிவார கிராமமான வலையப்பட்டியிலிருந்து 2 கிமீ காட்டுப் பாதையில் நடந்து சென்று வாழறும்பு சுனையை அடைய வேண்டும். மரங்கள் நிறைந்த வாழறும்பு சுனைப் பகுதி எப்போதும் குளிர்ச்சியாக காணப்படும். மேலும் இப்பகுதியில் தேவாங்குகள் மற்றும் சிவப்பு ஓணான் காணப்படுகிறது. வாழறும்பு பகுதியை சுற்றுலாத்தளமாக்க கடவூர் பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கடவூர் வாழறும்பை சுற்றுலா தலமாக்க வேண்டும் : மக்கள் கோரிக்கை". Archived from the original on 2018-05-23. பார்க்கப்பட்ட நாள் 2019-04-17.
  2. தமிழகத்தின் அறியப்படாத மலை புள்ளமுழுங்கி[தொடர்பிழந்த இணைப்பு]
  3. வாழறும்பை சுற்றுலாதலமாக அறிவிக்க எதிர்பார்ப்பு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழறும்பு&oldid=3719707" இலிருந்து மீள்விக்கப்பட்டது