வார்தாக் செப்புப் பானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்தக் செப்புப் பானை
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள வார்தக் செப்புப் பானை
செய்பொருள்செப்புக் கலவை
அளவுஉயரம் 17.8 செண்டி மீட்டர்
உருவாக்கம்கிபி இரண்டாம் நூற்றாண்டு
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
பதிவுOA 1880-93;CM 1979-2-15-21 to 41

வார்தக் செப்புப் பானை (Wardak Vase), ஆப்கானித்தான் நாட்டின் வர்தகு மாகாணத்தில் உள்ள சக்கி வார்தாக் நகரததின் அருகில், 1836ஆம் ஆண்டில் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர் சார்லஸ் மேசன் என்பவர் மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டது. இச்செப்புப் பானை 1880 முதல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1][2] கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோள வடிவிலான இச்செப்புப் பானை 17.8 செண்டி மீட்டர் உயரம் கொண்டது. இப்பானை மீது பௌத்த தூபி பொறிக்கப்பட்டு கரோஷ்டி எழுத்துமுறையில் நான்கு வரி பொறிப்புகள் கொண்டுள்ளது. இப்பானையில் குசானப் பேரரசர்களான வீமா காட்பீசஸ், கனிஷ்கர் மற்றும் ஹுவிஷ்கா ஆகியோர்களின் 66 நாணயங்கள் மற்றும் நவமணிகள் கொண்டிருந்தது.

கல்வெட்டு[தொகு]

செப்புப் பானை மீதான 4 வரி கல்வெட்டு பின்வருமாறு கூறுகிறது:

வார்தக் செப்புப் பானை கல்வெட்டு[3][4][5]
கல்வெட்டு அசல் (கரோஷ்டி) ஒலிபெயர்ப்பு ஆங்கில மொழிபெயர்ப்பு
வரி 1 𐨯𐨎 𐩅 𐩅 𐩀 𐨨𐨯 𐨯𐨯𐨿𐨟𐨅𐨱𐨁 𐩄 𐩀 𐨐𐨨𐨒𐨂𐨫𐨿𐨩𐨤𐨂𐨟𐨿𐨪𐨬𐨒𐨨𐨪𐨅𐨒 𐨀𐨁𐨭 𐨑𐨬𐨡𐨨𐨁 𐨠𐨂𐨦𐨨𐨿𐨨𐨁 𐨧𐨒𐨬𐨡 𐨭𐨪𐨁𐨪 𐨤𐨪𐨁𐨛𐨬𐨅𐨟𐨁}}} saṃ 20 20 10 1 மாச அர்த்தமிசிய சஸ்தேஹி 10 4 1 இமேன கடிகேண கமகுல்யபுத்ர வாகமரேகா ச இஷா கவதாமி கடலைகவாகமரேகவிஹாரம்மி துபம்மி பகாயமுதாமி பகயாமுதாமி 51 ஆம் ஆண்டு, ஆர்ட்டெமிசியோஸ் மாதம், 15 ஆம் நாள், இந்த தருணத்தில் காமகுல்யாவின் மகன் வாகமரேகா இங்குள்ள கவாடாவில் உள்ள கடலைகா வாகமரேகா மடாலயத்தில், சாக்கிய முனிவர் ஸ்தூபியை நிறுவினார்.
வரி 2' 𐨀𐨁𐨨𐨅𐨞 𐨐𐨂𐨭𐨫𐨨𐨂𐨫𐨅𐨞 𐨀𐨒𐨿𐨪𐨧𐨒𐨀𐨅 𐨧𐨬𐨟𐨂 𐨨𐨅 𐨤𐨂𐨩𐨀𐨅 𐨧𐨿𐨪𐨱𐨪 𐨨𐨅 𐨧𐨬𐨟𐨂 𐨕 𐨨𐨅 𐨞𐨟𐨁𐨒𐨨𐨁𐨟𐨿𐨪𐨯𐨎𐨧𐨟𐨁𐨒𐨞 𐨧𐨬𐨟𐨂 𐨨𐨱𐨁𐨩 𐨬𐨒𐨨𐨪𐨁𐨒𐨯 𐨀𐨒𐨿𐨪𐨧𐨒𐨤𐨜𐨁𐨩𐨎𐨭𐨀𐨅}} இமேன குசலமுலேன மஹாராஜராஜாதிராஜஹுவேஷ்கஸ அக்ரபாகே பவது மதபிதர மே பூயயே பவது ப்ரதர மே ஹஷ்துனஂமரேகஸ பூயணே ভவது யோ சா மே பூயா গেভাগাগাগাগাগিভাগাতিগারাগাহা இந்த நன்மையின் மூலத்தின் மூலம் இது பெரிய அரசன், அரசர்களின் தலைவன், ஹுவிஷ்கா சிறந்தவனாக இருக்கட்டும்; அது என் தாய் மற்றும் தந்தையின் மரியாதையாக இருக்கட்டும்; அது என் சகோதரன் ஹஸ்துனா-மரேகாவின் நினைவாக இருக்கட்டும்; மேலும் இது எனது மேலும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் நினைவாக இருக்கட்டும்; வாகமரேகா, இது எனக்குச் சிறந்த பங்காக இருக்கலாம்;
வரி 3' 𐨧𐨬𐨟𐨂 𐨯𐨪𐨿𐨬𐨯𐨟𐨿𐨬𐨞 𐨧𐨬𐨟𐨂 𐨀𐨬𐨁𐨩𐨞𐨪𐨒𐨤𐨪𐨿𐨩𐨟 𐨧𐨬𐨒𐨿𐨪 𐨀𐨟𐨿𐨪 𐨀𐨎𐨜𐨗𐨆 𐨗𐨫𐨩𐨂𐨒 𐨯𐨪𐨿𐨬𐨁𐨞 𐨧𐨬𐨟𐨂 𐨨𐨱𐨁𐨩 𐨪𐨆𐨱𐨞 𐨯𐨪𐨿𐨬𐨁𐨞 𐨀𐨬𐨮𐨟𐨿𐨪𐨁𐨒𐨞 𐨕 𐨀𐨒𐨿𐨪𐨧𐨒𐨤𐨜𐨁𐨩𐨎𐨭𐨀𐨅 𐨧𐨬𐨟𐨂 𐨕 𐨧𐨬𐨟𐨂}} இது அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்தின் வெகுமதிக்காக இருக்கட்டும்; மேலும் அவிசி நரகத்தின் எல்லையிலிருந்து இருப்பின் உச்சி வரை, முட்டையில் பிறந்தாலும், கருவில் பிறந்தாலும், ஈரத்தில் பிறந்தாலும், உருவமற்றதாக இருந்தாலும், அது அனைவரின் கௌரவத்திற்காகவும் இருக்கட்டும்; அது எப்போதும் என் குதிரை வீரர்களுக்கு, அனைத்து குடை ஏந்துபவர்களுக்கும் மற்றும் பரிவாரங்களுக்கும் சிறந்த பங்காக இருக்கட்டும். மேலும் தவறு செய்பவருக்கும் நல்ல பலன்கள் இருக்கலாம்.
வரி 4' 𐨀𐨅𐨮 𐨬🕵 ஏஷ விஹார ஆசாரயண மஹாசங்கிகண பரிகிரஹா இந்த மடம் மகாசஙகத்தவர் ஆசிரியர்களின் வசம் உள்ளது.

கல்வெட்டின் மொழிபெயர்ப்பு[தொகு]

கல்வெட்டின் மொழிபெயர்ப்பு கீழே விவரிக்கப்பட்டுள்ளது: "51 ஆம் ஆண்டில், ஆர்ட்டெமிசியோஸ் மாதத்தில், 15 (நாட்களுக்குப் பிறகு), இந்த நேரத்தில், காமகுல்யாவின் மகன் வகாமரேகா; அவர் இங்கு கவாடாவில் தனது விகாரை உருவாக்கினார் (மற்றும்) வாகாமரேகா மடத்தில் கௌதம புத்தரின் நினைவுச் சின்னமாக தூபியும் நிறுவினார்.

மேலும் படிக்க[தொகு]

  • Baums, Stefan. 2012. “Catalog and Revised Texts and Translations of Gandharan Reliquary Inscriptions.” In: David Jongeward, Elizabeth Errington, Richard Salomon and Stefan Baums, Gandharan Buddhist Reliquaries, p. 243–244, Seattle: Early Buddhist Manuscripts Project (Gandharan Studies, Volume 1).
  • Baums, Stefan, and Andrew Glass. 2002– . Catalog of Gāndhārī Texts, no. CKI 159
  • Errington, E., and J. Cribb (eds), The Crossroads of Asia: (Cambridge, Ancient India and Iran Trust, 1992)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. British Museum Collection
  2. British Museum Highlights
  3. பாம்ஸ், ஸ்டீபன். (2012) காந்தாரன் ரெலிக்வரி கல்வெட்டுகளின் பட்டியல் மற்றும் திருத்தப்பட்ட உரை மற்றும் மொழிபெயர்ப்புகள். காந்தார புத்த மதச் சின்னங்கள். டி. ஜாங்கேவார்ட். சியாட்டில், வாஷிங்டன் பல்கலைக்கழக அச்சகம்
  4. CKI 159 — வாகமரேகாவின் நினைவுச்சின்னம்
  5. Konow, Sten (1929). Kharoshthi அசோகாவைத் தவிர கல்வெட்டுகள். India. https://archive.org/details/in.ernet.dli.2015.32007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்தாக்_செப்புப்_பானை&oldid=3625521" இலிருந்து மீள்விக்கப்பட்டது