வாணி சதீஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாணி சதீஷ்
பிறப்புபெங்களூர், கருநாடகம், இந்தியா
இசை வடிவங்கள்கர்நாடக இசை - இந்திய செம்மொழி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைத்துறையில்1990 முதல் தற்போது வரை
இணையதளம்http://www.vanisateesh.com

வாணி சதீஷ் (Vani Sateesh) இவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் கர்நாடக பாடகர் ஆவார்.

பரம்பரை[தொகு]

வாணி சதீஷ் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார். இவர் பல தலைமுறைகளாகத் தொடரும் கர்நாடக இசைக்கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெரிய தாத்தா முண்டரிகி நரசிம்மச்சார் (1855-1940) கர்நாடகாவின் முக்கிய ஹரிதாசருமான விஜய தாசருவின் ஹரிதாச பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தாத்தா முண்டரிகி ராகவேந்திரச்சாரும் (1896-1944) ஒரு இசைக்கலைஞராக இருந்தார். மேலும் இசையின் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராவார். சென்னையில் உள்ள இராணி மேரிக் கல்லூரியில் (பேராசிரியர் பி. சம்பமூர்த்தியின் சமகாலத்தவர்) இசை பேராசிரியராக இருந்தார். இவரது தந்தை சங்கீத ரத்னா ( பெங்களூர் கயானா சமாஜம் விருது பெற்றவர்) பெல்லாரி. எம். வெங்கடேசாச்சார் ஒரு கர்நாடக பாரம்பரிய பாடகர் ஆவார். இவரது மாமா பெல்லாரி எம். சேசகிரி ஆச்சார் ஒரு வாகேயகரர் (பாடல் மற்றும் இசையமைப்பாளர்) ஆவார். இவரது மாமாவும் தந்தையும் 'பெல்லாரி சகோதரர்கள்' என்று அழைக்கப்பட்டனர். 1950கள் மற்றும் 1960களில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். 'விசேச பரம்பரை' என்று பிரபலமாக அறியப்பட்ட ஐந்து தலைமுறைகளின் சமீபத்திய பரம்பரை 130 ஆண்டுகளுக்கும் மேலாக பரவியுள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் கர்நாடகாவின் பல தொலைதூர பகுதிகளில் கற்பித்தல், நிகழ்த்துதல், இசையமைத்தல் மற்றும் நுண்கலை அறிவைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களில் பலர் தங்களது சொந்த வழியில் நுண்கலைகளின் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இசை பயிற்சி[தொகு]

வாணி சதீஷின் ஆரம்ப பயிற்சி அவரது மாமா பெல்லாரி எம். சேசகிரி ஆச்சாரின் பயிற்சியின் கீழ் இருந்தது. பின்னர் இவர் தனது தந்தை பெல்லாரி எம்.வெங்கடேசாச்சாரிடமிருந்தும் பின்னர் தனது சகோதரர் பெல்லாரி எம். ராகவேந்திராவிடமிருந்தும் கற்றுக்கொண்டார். இவர் தற்போது சங்கீத கலாநிதி செம்மங்குடி சீனிவாச ஐயரின் நேரடி சீடரான பத்ம பூசண் சிறீ பி.எஸ்.நாராயணசாமியின் கீழ் உள்ளார். [1]

வாணி சிறு வயதிலேயே தனது நிகழ்ச்சியைத் தொடங்கினார். இவரது முதல் இசை நிகழ்ச்சி 10 வயதில் இருந்தது; அதன் பின்னர் இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புகழ்பெற்ற சபைகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். ஒரு கலைஞராக, இவர் நிகழ்ச்சிகள், மேடை இருப்பு, உடன் வரும் கலைஞர்களுடன் நல்லுறவை உருவாக்குதல் மற்றும் பார்வையாளர்களுடன் இணைத்தல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்துகிறார். இவரது முந்தைய நாட்களில், வர் ஏராளமான தாள வாத்ய இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். அறியப்பட்ட இந்துஸ்தானி இசைக்கலைஞர்களுடன் பல ஜுகல்பந்திகளையும் இவர் நிகழ்த்தியுள்ளார். வாணி சதீஷ் அகில இந்திய வானொலியின் ஒரு "ஏ" தர கலைஞர் மற்றும் ஒரு "பி ஹை" வரிசைப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர் ஆவார் . மைசூர் பல்கலைக்கழகத்தில் இசையில் தனது முதுகலையை முடித்த இவர், இளம் கலைஞர்களுக்கான இந்திய அரசு உதவித்தொகையும் பெற்றுள்ளார். [2]

இசை நடை[தொகு]

வாணி சதீஷின் பாடும் பாணி பாரம்பரிய கர்நாடக இசையால் பக்தி ரசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இவரது நடிப்பை விமர்சகர்கள் 'லைவ்லி அண்ட் இன்ஸ்பைரிங்' என்று மதிப்பாய்வு செய்துள்ளனர்; 'பாவம் மற்றும் கம்பீரத்தால் நிரப்பப்பட்டது'; 'கான ராகத்திலிருந்து இலகுவான காட்சிக்கு உடனடியாக மாற்றும் திறன்'; 'இசை சிரமமின்றி, குறைபாடற்ற முறையில் வழங்கப்பட்டது'; 'சுருதி சுத்தம்' போன்றவை. [3]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணி_சதீஷ்&oldid=3304971" இலிருந்து மீள்விக்கப்பட்டது