வாசெக்டமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசெக்டமி
Vasectomy
பின்புலம்
வகைSterilization
முதல் பயன்பாடு1899 (1785 முதல் சோதனைகள்)[1]
தோல்வி விகிதங்கள் (முதல் ஆண்டு)
சரியான பயன்பாடு0.10%[2]
வழக்கமான பயன்பாடு0.15%[2]
"வாஸ்-கிளிப்" கிட்டத்தட்ட 1%
பயன்பாடு
கால விளைவுநிரந்தரமானது
மீள்தன்மைசாத்தியம்
பயனர் நினைவூட்டல்கள்விந்தணு இல்லை என்பதைச் சரிபார்க்க இரண்டு தொடர்ச்சியான எதிர்மறை விந்து மாதிரிகள் தேவை.
மருத்துவ ஆய்வுஅனைத்து
நன்மை மற்றும் தீமை
பால்வினை நோய் தடுப்புஇல்லை
நன்மைகள்பொது Tubal ligation தேவையில்லை. பெண்களுக்கான டியூபல் லிகேஷனை விட குறைவான செலவு மற்றும் குறைவான சிரமங்கள்.
அபாயங்கள்விரைகளின் தற்காலிக (உறுப்பு) வீக்கம், நீண்ட கால பிறப்புறுப்பு வலி.

வாசெக்டமி (Vasectomy) என்பது விந்து வெளியேறுவதைத் தடுக்க ஆணின் விந்துக்குழாய் அல்லது விந்துநாளத்தைத் துண்டித்து, கட்டி வைத்து அல்லது அடைப்பிட்டு மூடி செய்யப்படும் நவீன, எளிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சை ஆகும்.

இது ஆண்களுக்கான கருத்தடைச் சிகிச்சை அல்லது குடும்ப நல அறுவைச் சிகிச்சை அல்லது குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.

குறிப்பாகப் பெண்களுக்கானக் கருத்தடை அறுவைச சிகிச்சையை விட இது மிக எளிமையானது.

சிகிச்சை முறை[தொகு]

பொதுவாக இந்த எளிய பாதுகாப்பான சிகிச்சைக்கு மயக்க மருந்து தேவை இல்லை, குறிப்பிட்ட பகுதியை உணர்விழக்கச் செய்யும் மருந்து மட்டுமே கொடுக்கப்படுகிறது. தையலோ தழும்போ இல்லை.

மருத்துவமனையில் தங்க வேண்டியத் தேவை இல்லை. புறநோயாளியாகச் சிகிச்சை பெற்றுக் கொண்டு, சிகிச்சை முடிந்தவுடன் வீட்டுக்குப் போகலாம். சிகிச்சை முடிந்த 2 மணி நேரத்துக்குப் பிறகு வீட்டில் செய்யும் சாதாரண வேலைகளைத் தொடரலாம்.

பக்க விளைவுகள்[தொகு]

பொதுவாக எந்த பக்க விளைவுகளும் கிடையாது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசெக்டமி&oldid=3733046" இருந்து மீள்விக்கப்பட்டது