வாசுதேவபுரம் கோயில், தாவனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவனூர் வாசுதேவபுரம் கோயில், கேரளாவில், பாரதப்புழா நதியின் தென்கரையில் உள்ள மூன்று பழமையான கோயில்களில் ஒன்றாகும். இது பிற இரண்டு கோயில்களான மகாசிவன் கோயில், பிரம்மா கோயிலுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில்களும், ஆற்றின் குறுக்கே உள்ள புகழ்பெற்ற திருநாவாய மஹாவிஷ்ணு கோயிலும் சனாதன தர்மத்தின் முத்தொகுப்பாகக் கருதப்படுகின்றன. [1]

வரலாறு[தொகு]

தாவனூர் வாசுதேவபுரம் கோயில், கேரளாவில், பாரதப்புழா நதியின் தென்கரையில் உள்ள மூன்று பழமையான கோயில்களில் ஒன்றாகும். இது பிற இரண்டு கோயில்களான மகாசிவன் கோயில், பிரம்மா கோயிலுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில்களும், ஆற்றின் குறுக்கே உள்ள புகழ்பெற்ற திருநாவாய மஹாவிஷ்ணு கோயிலும் சனாதன தர்மத்தின் முத்தொகுப்பாகக் கருதப்படுகின்றன.

தாவனூர் வாசுதேவபுரம் மறவாஞ்சேரி மனைக்குச் சொந்தமாக இருந்தது, பின்னர் பதிவு செய்யப்பட்ட பக்தர்களின் அறக்கட்டளையிடம் அது ஒப்படைக்கப்பட்டது. வில்வமங்கலம் ஸ்வாமியர் தன் தாயார் முதுமைக் காலத்தில் பிரார்த்தனை செய்வதற்காகக் கட்டப்பட்டது. வில்வமங்கலம் ஸ்வாமியார், கிருஷ்ணரின் மிகப் பெரிய பக்தராவார். அவ்வகையில் அவருக்கு, கிருஷ்ணரைப் "பார்க்கும்" திறன் அவருக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. கேரளாவில் திருவனந்தபுரம், திருவார்ப்பு, சேர்த்தலா கார்த்தியாயனி போன்ற கோவில்களை அமைத்ததில் அவருடைய பங்கு முக்கியமானதாகும்.[2][3]

புராணம்[தொகு]

வில்வமங்கலம் சுவாமியார் முன்பாக ஒரு குழந்தையாக கிருஷ்ணர் தோன்றினார். அவர் பக்தியுள்ள பிராமணரும் யதி வர்யனும் ஆவார். குழந்தை வடிவில் அவர் கிருஷ்ணரை வழிபட்டுவந்தார். அவரது சடலம் மறைந்த பிறகு, குழந்தைக் கிருஷ்ணரின் சிலை அக்கோயிலில் நிறுவப்பட்டது. கிராமம் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, கோயில் வாசுதேவபுரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் சிவபக்தர் ஒருவர் அக்கோயிலில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டார். கணபதி, சாஸ்தா ஆகியோரின் சிலைகளும் நிறுவப்பட்டன. [4]

விழாக்கள்[தொகு]

அஷ்டமி ரோகிணி, [5] நிறபுதாரி, குசேல தினம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Vasudevapuram Kshetram (Malayalam), Published by Sri Vasudevapuram Kshetrasamrakshana Samiti, Tavanur-679573. Ph:9895694935
  2. "Vilwamangalam Swaamiyaar".
  3. "Aithihyamaala" Kottarathil Sankunni. 1909; Latest edition: Oct. 1985; Published by Kottarathil Sankunny Memorial Committee, Kottayam - 686 001.
  4. Proceedings of the Deva Prasnam by Jyothisha Panditha Sri. Mezhathur A. P. Kuttikrishnan Nair, 17 May 1985
  5. "Guruvayur Devaswom". www.guruvayurdevaswom.org. Archived from the original on 2005-04-10.

வெளி இணைப்புகள்[தொகு]