வஸ்தோக் 6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வஸ்தோக் 6
திட்ட விபரம்
திட்டப்பெயர்: வஸ்தோக் 6
அழைப்புக்குறி:Чайка (Chayka - "Seagull")
பயணக்குழு அளவு:1
ஏவுதல்: ஜூன் 16, 1963
09:29:52 UTC
Gagarin's Start
இறக்கம்: ஜூன் 19, 1963
08:20 UTC
53°16′N 80°27′E / 53.267°N 80.450°E / 53.267; 80.450
கால அளவு: 2d/22:50
சுற்றுக்களின் எண்ணிக்கை:48
சேய்மைப்புள்ளி:166 கிமீ
அண்மைப்புள்ளி:165 கிமீ
காலம்:87.8 நிமிடங்கள்
சுற்றுப்பாதை சாய்வு:64.9°
திணிவு:4713 கிகி
தொடர்புள்ள திட்டங்கள்
முந்திய திட்டம்அடுத்த திட்டம்
வஸ்தோக் 5வஸ்ஹோத் 1

வஸ்தோக் 6 என்பது மனித விண்வெளிப் பறப்புத் திட்டம் ஒன்றில் பயணம் செய்த முதல் பெண் விண்வெளிவீரர் என்ற பெருமையை வலன்டீனா தெரஸ்கோவா என்னும் சோவியத் பெண்ணுக்கு வழங்கிய விண்வெளித் திட்டம் ஆகும். விண்வெளிப் பறப்பில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டன. முன்னைய வஸ்தோக் திட்டங்களில் பயணம் செய்த விண்வெளி வீரர்களைப்போலவே வலன்டீனாவும் பறப்புப் பதிவுகளை வைத்திருந்துடன், நிழற்படங்களையும் பிடித்துடன், கலத்தையும் நேரடியாக இயக்கினார். இவர் வெண்வெளியில் இருந்து எடுத்த அடிவானத்தின் நிழற்படங்கள் வளிமண்டலத்தில் ஏரோசோல் படலங்கள் இருப்பதைக் கண்டறியப் பின்னர் பயன்பட்டது. வஸ்தோக் 5 உடன் இணைத்திட்டமாக உருவாக்கப்பட்ட இது உருவாக்கப்பட்டபோது, இரண்டு கலங்களிலுமே பெண்களையே ஏற்றிச் செல்ல முடிவாகியிருந்தது. எனினும் பின்னர் வேறு காரணங்களுக்காக இந்த முடிவு கைவிடப்பட்டது. வஸ்தோக் 6 திட்டமே வஸ்தோக் 3கேஏ விண்கலத்தின் கடைசிப் பறப்பு ஆகும்.

பயணக்குழு[தொகு]

பின்புலக்குழு[தொகு]

Reserve பயணக்குழு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஸ்தோக்_6&oldid=2429424" இலிருந்து மீள்விக்கப்பட்டது